தொழில்நுட்பம் பகுதியில் பிற ஆக்கங்கள்
திரைப்படம், தொழில்நுட்பம் »
மனித சினிமாக்களின் மிகப் பெரிய எதிரி ஹீரோ மற்றும் இமேஜ் சமாச்சாரங்கள். அப்படி, இப்படி இருந்தாலும் கூட ஷாருக்கான் மற்றும் ரஜனிக்காக படம் ஓடுவதைப் போல அனிமேஷனில் எதிர்பார்க்க முடியாது. அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஸ்டார் வால்யூ எல்லாம் கிடையாது. முதல் விஷயம் ’திரைக்கதை’. அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும்.
திரைப்படம், தொழில்நுட்பம் »
புன்னகைக்கும், சோகத்துக்கும் உள்ள வாயசைவுகள் எப்படி என்று பலர் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார்கள். மனித உணர்ச்சிகள் முகத்தில் உருவாக்குவது கிராபிக்ஸ் துறையின் நீண்டகால குறிக்கோள். எதிர்காலத்தில் ‘தென்பாண்டி சீமையிலே?’ என்று கமலைப் போல ஒரே உணர்ச்சி வசமாக கணினி நடிக்கத்தான் போகிறது. ஒரே பிரச்னைதான். செய்து முடிப்பதற்குள் தாத்தா கமல் போல அனிமேட்டர்களுக்கும் வயசாகிவிடும்!
திரைப்படம், தொழில்நுட்பம் »
1980களில் நுண்ணிய கணினிகள் (microcomputers) வரத் தொடங்கின. கணினிகளின் சக்தியை ஆரம்பத்தில் வெறும் எழுத்து வடிவத்திற்கே பயன்படுத்தினாலும் கொஞ்ச கொஞ்சமாக படம் வரைய வைக்கத் தொடங்கினார்கள் கணினிப் பொறியாளர்கள். ஆரம்பத்தில் ‘o’ என்ற எழுத்தை வைத்து பச்சை கணினித் திரையில் பிள்ளையார் படம் வரைந்த இந்திய பொறியாளர்கள் முகத்தில் ஒரு எவரெஸ்ட் களைதான் போங்கள் – அந்நாளிலேயே ஓ போட்டவர்கள்!
திரைப்படம், தொழில்நுட்பம் »
திரைப்படங்களில் அனிமேஷன் தொழில்நுட்பத்தைப் பற்றிய விரிவான அறிமுகம் தரும் கட்டுரைத் தொடரை எழுதுகிறார் ரவி நடராஜன்: மைக்கேல் ஜாக்ஸன் ’Black or White’ என்ற 90-களின் இசை வீடியோவில் மார்ஃபிங் தொழில்நுட்பத்தை மிகவும் பிரபலப்படுத்தினார். தமிழ் சினிமாக்களில் இதை விடாமல் பாடல் காட்சிகளில் காட்டி மைக்கேல் ஜாக்ஸனை சிரத்தையாகப் பின்பற்றியுள்ளார்கள். ‘இந்தியன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘மாயா மச்சீந்திரா’ என்ற மிகவும் இலக்கியத்தரமுள்ள(?) பாடலில் மைக்கேல் அப்பட்டமாய்த் தெரிகிறார்!
அறிவியல், தொழில்நுட்பம் »
இக்கட்டுரையில் அதிகமாக உபயோகிக்கப்பட்டுள்ள சொல் ‘துல்லியம்’. லேசரென்றாலே துல்லியம்தான் முதலில் மனதுக்கு வருகிறது. லேசர் பல தரப்பட்ட மக்களுக்கும் பல உதவிகள் கடந்த 50 ஆண்டுகளாக செய்து வந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு லேசர். 21 ஆம் நூற்றாண்டின் லேசர் போட்டியாளர் எதுவோ? இன்று பல லேசர் உபயோகங்களை நாம் பார்க்கிறோம். ஆனால், இது இன்னும் பலவாறு அதிகரிப்பது மிக சாத்தியமான ஒன்று.
சமூகம், தொழில்நுட்பம் »
கார் ஓட்டும்போது செல்பேசியை உபயோகித்தால் ஆபத்து என்று சரமாரியாக ஆய்வு முடிவுகள் வர ஆரம்பித்த பிறகு கூட அவர்கள் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை. கன்ஸ்யூமர் பாதுகாப்பு சங்கங்கள், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என்று பல தரப்பினரும் உள் நாக்கு தெரியக் கத்தியதால், பல மாநிலங்கள் காரில் மொபைல் போன்களைத் தடை செய்ய சட்டம் கொண்டு வர முயற்சித்தன. செல்போன் கம்பெனிகள் தங்கள் லாபி இயந்திரம் முழுவதையும் முடுக்கி விட்டு, பணத்தை டாக் டைம் போலச் செலவழித்து சட்டத்தைத் தடுத்து நிறுத்தின.
அறிவியல், தொழில்நுட்பம் »
இது லேசர் தொழில்நுட்பத்தின் ஐம்பதாவது வருடம். அறிவியல் சமூகம் லேசர் தொழில்நுட்பத்தின் 50 வது பிறந்த நாளை மிகவும் விரிவாக இவ்வாண்டு முழுவதும் கொண்டாடுகின்றது.உலகெங்கிலும் லேசர் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுக் கருத்தரங்கங்களும், கண்காட்சிகளும் நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு லேசர் தொழில்நுட்பத்தையும், பயன்பாடுகளையும் விளக்கும் சிறப்புக் கட்டுரையை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.
தொழில்நுட்பம் »
தொழில்நுட்பம் »
பொதுவாக மின்னணு அந்தரங்க சமாச்சாரங்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம் அல்லது அறியாமலிருக்கிறோம். ‘அந்தரங்கமாவது மண்ணாங்கட்டியாவது’ என்று சன் கணினி நிறுவனத்தின் அந்நாளைய தலைவர் ஸ்காட் மெக்நீலி 15 வருடங்கள் முன் சொன்னதை யாரும் பொருட்படுத்தவில்லை. இன்று அதுவே வியாபாரம், சமூகம், தனியார் தொடர்பு, அரசியல் மற்றும் மருத்துவ துறையை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது.
தொழில்நுட்பம் »
பத்து வருடங்களுக்கு முன், நாஸாவுக்கு ப்ராஜக்ட்டுகள் செய்துவந்த அரிஸோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Dr.K.R.ஸ்ரீதரன் தனியாக “ப்ளூம் எனர்ஜி” என்றொரு நிறுவனம் ஆரம்பித்து இத்துறையில் ஆராய்ச்சிகள் செய்து வந்தார். இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் படு ரகசியமாகவே இருந்து வந்தன. அதன் காரணமாகவே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இந்நிறுவனத்தைச் சுற்றி இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 24-ஆம் தேதியன்று கலிபோர்னியா மாநில ஆளுநர் அர்னால்ட் ஷ்வாட்ஸ்நேகரின் உற்சாகமான வரவேற்புடன் ப்ளூம் பெட்டகத்தை (Bloom Box) உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதரன்.
தொழில்நுட்பம் »
வேலை முடிந்து சோர்ந்து இரவு உணவு சாப்பிட அமர்ந்தால் வரும் பெருவாரியான தொலை பேசி அழைப்புகள் காப்புரிமை, தொலைபேசி, வீட்டு சேவைகள் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் கால் செண்டர் தொல்லை. முக்கியமாக, இவர்கள் ஒரு சிந்தனையில்லாமல் உருவாக்கிய பட்டியலிலிருந்து அழைக்கும் பத்தாம் பசலிகள். பல்வேறு அசட்டு அழைப்புகளில், சில அழைப்புகள் எப்படி சரியாக இருக்கிறது? டேட்டா மைனிங்கின் இன்னொரு முகத்தை பார்ப்போம்.
தொழில்நுட்பம் »
வளரும் நாடான இந்தியாவிற்கு பாட்காஸ்ட் ஒரு மிக முக்கியமான தொழில்நுட்பம். படிப்பறிவு என்ற சொல்லுக்கே சவால் விடுகிற தொழில்நுட்பம். படிக்காதவர்களை மாற்றுவதற்கு முன் அவர்கள் கேட்காதவர்களா என்று சற்று யோசிப்போம். பார்வையற்றவர்களும் இதனால் பயனடையலாம். என் பார்வையில் இந்திய வெளியீட்டளர்கள் இதைப் பற்றி அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. கைபேசி தொழில்நுட்பத்தை விலை குறையச் செய்த நிறுவனங்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.



