முகப்பு » தொகுப்பு

இலக்கியம் பகுதியில் பிற ஆக்கங்கள்

சிறுகதை »

ஆண்பெண் போட்டி

பெண் வீட்டுக்குவந்தா செல்லுலே அரட்டை, இல்லாட்டா காதிலே ஐ-பாட். நாலுதடவை கத்தினாத்தான் திரும்பிப் பாப்போ. பையன் கம்ப்யூட்டர் முன்னாலே உக்காந்தான்னா ஒரே இரைச்சல். ரெண்டுபேரும் எது கேட்டாலும் நீ பேசறது ஒண்ணும் புரியலியேன்னு முகத்தை வச்சுப்பா. ஷேக்ஸ்பியர்லேர்ந்து பெர்னாட் ஷா வரைக்கும், நாம படிக்காத இங்க்லீஷா?

கவிதை »

இரண்டு கவிதைகள்

பால் மறக்காது
பசியும் அடங்காது
பற்றி உறிஞ்ச முன்னும்
பிஞ்சு உதடுகளைப்
பதறப் பதற
முலையினின்றும் பிடுங்கி
மூலையில் எறிந்த தாய்

உலகச் சிறுகதை »

நாசகார வலை

அன்று இரவு வீடு திரும்பியதும் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். பிரபல இணையதளம் ஒன்றில் அவள் செய்திருந்த விளம்பரத்தைக் கண்டதும் எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. ”ஆரோக்கியமான இளம் பெண்ணின் உடல் உறுப்பு(கள்) விற்பனைக்குத் தயார். கார் வாங்க இருப்பதால், காரை ஓட்டுவதற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் எந்த ஓர் உறுப்பும் விற்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள், பேசுவோம்..”

சிறுகதை »

காலம்

ஏன் இன்னும் வரவில்லை? அவனுக்கு ஆயாசமாக இருந்தது. இந்த வாட்டி வயிற்று வலியோடு ஜுரம் வந்துவிட்டது. குளிர் வேறு. பனியன், முழுக்கைச் சட்டை, லுங்கி, மேலே போர்வை. எல்லாவற்றையும் மீறி குளிரியது. கையைச் சட்டைக்குள் விட்டுக் கொள்ளலாம் என்றால் அசைக்கவே முடியவில்லை. நடு நெஞ்சில் என்னவோ உறுத்தியது, நீளமான பல்லி மாதிரி. அது ரொம்ப காலமாக நகராமல் அங்கேயே இருந்த மாதிரி தோன்றியது.

சிறுகதை »

புரை

பள்ளி வாயிற்காவலர் வைத்திருக்கும் வெளியே செல்லும் மாணவர்களைக் குறித்துவைத்துக்கொள்ளும் கோப்பிலும் அவள் பெயர் இல்லை. கவலையாக இருக்கிறது என்றார். உடனே கவனிக்கிறேன் என்று கூறினாலும் இப்போது எனக்கு ஒரு சிறு பதற்றம் வந்துவிட்டது.

சிறுகதை »

அறன் வலி உரைத்தல்

மனிதரில் பத்து சதவீத புண்ணியவான்களுக்கு இப்படியொரு சாமர்த்தியம். எஞ்சியிருக்கிற 90 சதவீதத்தினர் செக்குமாடுகள்போல சாவகாசமாக வாழ்க்கையை சுற்றிவரபழக்கப்பட்டவர்கள். அந்த அசட்டு மந்தையில் நானும் ஒருவன். இப்படி எப்போதாவது எதையாவது உளறிக்கொண்டிருக்கிறேன். நியாயங்களை அல்லது நியாயங்களென்று நம்புவதை கேட்பாரற்ற(?) வெளிகளில் உதறிவிட்டு, கோடைகால காவிரிப்படுகைபோல ஈரம் காணாமல் வெப்பத்தை உண்டு பசியாறுகிறேன்.

கவிதை »

மூன்று கவிதைகள்

நிழல் நகரும் இடங்களில்
என் பதட்டமும் நகர
உதவிக்கு அலறியது
வீட்டுக்குள்ளிருந்து ஒரு குரல்

உலகச் சிறுகதை »

தனிமை

தங்கள் அடுக்கக கட்டட வாயிலை அடைகிறார்கள். உள்வராந்தா இருட்டிக் கிடந்தது. திடுதிப்பென்று, சொல்லப்போனால் யோசனையே இல்லாமல் அவன் தன் கையில் இருந்து கத்தியை வெளியெடுத்தான். அந்தச் சந்தில் தட்டுப்பட்டானே அவன்… ஒருவேளை எங்களைக் கொல்ல முயற்சி செய்திருந்தால்?… என யோசித்தான். கத்தியை நீட்டிக்கொண்டான். ஒரு சுத்து சுத்தி மனைவியைத் தாக்கினான். ரெண்டு முறை, ஒரு டஜன் முறைகள், பைத்தாரத்தனமாய்க் குத்தினான். ஒரு அலறல். மனைவியின் உடல் சரிந்தது.

உலகச் சிறுகதை »

நன்றி அம்மணி

பையனின் முகத்தில் இருந்து வியர்வை கொப்பளித்தது. அவன் நெளிந்தான். திருமதி ஜோன்ஸ் நின்றாள். அவனை முன்பக்கமாக சுண்டியிழுத்தாள். அவன் கழுத்தில் இறுகப் பிடிபோட்டாள். அப்படியே தெருவில் நெட்டித்தள்ளிப் போனாள். தன்வீடு வந்ததும், அவனை அப்படியே உள்ளிழுத்தாள்.

சிறுகதை »

சூரிய நமஸ்காரம்

ரமணரின் ‘நான் யார்’ என்ற கேள்வி ஒரு வாரமாகவே சடகோபனைக் குடைந்து கொண்டிருந்தது. ஓஷோ வேறு மேத்ஸ், ம்யூசிக், மெடிடேஷன் என்கிறார். முதலிரண்டோடும் சடகோபனுக்கு சுமுக உறவு இருந்ததே இல்லை. மூன்றாவது என்ன என்று புரியவேயில்லை. ‘நான் என்றால் சடகோபன்.’ இதில் வேறு என்ன இருக்கிறது என்று அவருக்குத் தோன்றியது. ஒரு வேளை ரமணர் ‘தான் யார்’ என்று நம்மிடம் கேட்கிறாரோ என்ற சந்தேகம் வேறு வந்தது.

இலக்கியம், புத்தக அறிமுகம் »

ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாட்டை’ முன் வைத்து…

1992 இல் முதற்பதிப்பாக வெளிவந்து அரிதாகவே கைக்குக் கிட்டுவதாகவும், அப்படிக் கிட்டியவர்களிடமும் பல சர்ச்சைகளை எழுப்பக் கூடியதாகவும் இருந்த இப்புத்தகம் அண்மையில் கிழக்குப் பதிப்பக வெளியீடாக மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தீவிர இலக்கியப் பார்வையற்ற மரபு வழி வாசகர்களுக்கு இவ்வாறான கருத்துக்கள் அதிர்ச்சி ஊட்டுவதாகவும், இத்தனை நாளாக அவர்கள் பேணி வந்த பிரமைகளைக் கலைத்துப் போடுவதாகவும் கூட இருக்கலாம்.

ஆளுமை, இலக்கியம், நேர்காணல் »

‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ - நேர்காணல் - இறுதிப்பகுதி

தஞ்சாவூரிலும், பாண்டிச்சேரியிலும் உள்ள எழுத்தாளர்கள், பேராசிரியப் பெருமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டம் கூட்டி, சாமிநாதன், வல்லிக்கண்ணன் எழுத்து அச்சடிக்கப்பட்டுள்ள இந்தத் பக்கங்கள் எல்லாம் மலம் துடைக்கத்தான் லாயக்கு என்று சொல்லி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தை எடுத்து அவ்வாறே செய்து, இந்தியா டுடே அலுவலகத்திற்கு பார்சலில் அனுப்பி வைத்தார்கள். இதில் பிரபல சில பேராசிரியர்களும் அடக்கம். அதில் முக்கியமானவர் அந்தோணி மார்க்ஸ் என்னும் அ.மார்க்ஸ்.

ஆளுமை, இலக்கியம், நேர்காணல் »

‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ - நேர்காணல் - பகுதி 3

“இன்றைய தமிழ் எழுத்தில் சுஜாதா ஒரு ரஜினிகாந்த். ரஜினி, தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக என்ன செய்கிறாரோ அதையே சுஜாதா தனது வாசகர்களுக்காகச் செய்கிறார்” என்று நான் ஒருமுறை எழுதியிருந்தேன். ‘சுஜாதா - தமிழ் இலக்கியத்தின் சூப்பர் ஸ்டார்’ என்று யாரோ அதை கொட்டை எழுத்தில் எடுத்து பத்திரிகையில் போட்டு விட்டார்கள். இதனால் சுஜாதா மிகவும் காயப்பட்டுவிட்டார் என்பது என் கவனத்திற்கு வந்தது.

கவிதை »

அடைக்கலம்

சாலைகளற்ற வழியில்
வருங்காலம் தேடினேன்
உயரத் தொங்கும் ஒட்டடை
நூல் பிடித்தேறி உன்னிடம்
அடைக்கலம் புகுந்தேன்

இலக்கியம் »

ஜெயமோகனின் கதைக்களனும், நகுலனின் நாவல் நடையும்

அக்கால சிறுபத்திரிகைகளில் நிறைய உருப்படியான விவாதங்களும், எண்ணப் பரிமாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. நிறைய அக்கப்போர்களும் இருந்திருக்கின்றன. மறுக்கவில்லை. ஆனால் அதையும் மீறி அங்கே பல ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. இன்றைய சிறுபத்திரிகைகளைப் பார்க்கும்போது எங்கே போயின அந்தக் காலங்கள் என்றே ஏங்கத் தோன்றுகிறது. ஜெயமோகனுடனான கலந்துரையாடலும், இரா.முருகனின் எதிர்வினையும் ஒரு சிறு நம்பிக்கையை மெல்ல எழுப்பியிருக்கின்றன.