உரையாடல் பகுதியில் பிற ஆக்கங்கள்
ஆளுமை, உரையாடல், மொழிபெயர்ப்பு »
ஆளுமை, உரையாடல் »
“ஆதவனை நான் தாழ்வாகக் கருதவில்லை. ஆனால் அவர் பெரும் ஆகிருதி உள்ள எழுத்தாளர் அல்ல. அ.மி சமகாலத்தில் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு காடா விளக்கின் புகை கக்கலில் முகம் ஒளியூட்டப்பட்டும், இருண்டும் தெரிய, உண்டிகளை விற்கும் ஒரு தெருமுனைத் தள்ளு வண்டி வியாபாரியை அ.மி தீட்டும் சித்திரத்தின் எளிய உறுதியை ஆதவனால் அடைய முடியாததற்குக் காரணம், அவர் கூடதிகமாக உளநிலைச் சிக்கல்களை இழை பிரிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தியது என்று நினைக்கிறேன்.”
உரையாடல் »
எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் சமீபத்திய நாவல் ‘கலங்கிய நதி’. அவரது ஆங்கில நாவலான ‘The Muddy River’ என்ற ஆங்கில நாவலை அவரே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு மத்திய அரசு அதிகாரியின் வாழ்க்கையினுடான பயணத்தில் பல விஷயங்களை பேசிச் செல்லும் இந்நாவலின் வடிவம் தமிழ்க்கு புதிது. இந்நாவல் குறித்து பி.ஏ.கிருஷ்ணனுடன் நடந்த ஒரு உரையாடல் இது. ’ஆங்கிலத்தில் நன்றாக எழுதுபவன் என்ற பெயரை விட தமிழில் நன்றாக எழுதுபவன் என்ற பெயர் எனக்கு வாசகர்கள் மத்தியில் கிடைத்தால் மிகவும் பெருமையாக இருக்கும்’, என்று சொல்லும் கிருஷ்ணன், இந்த உரையாடலில் தன் நாவல் குறித்து மட்டுமல்லாமல், தன்னுடைய இளவயது குறித்தும், அதிகார மட்டத்தில் நிகழும் ஊழல், காந்தியம், அண்ணா ஹசாரே முதலிய பலவற்றைக் குறித்தும் பி.ஏ.கிருஷ்ணன் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் : ‘நேசிப்பவர்களுக்கிடையே நெருக்கம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு இடைவெளியும் இருக்கிறது. இது ஒருவருக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பைச் சிறிதளவும் குறைப்பதில்லை. ஆனாலும் அன்புடை நெஞ்சங்கள் தாங்கலந்தாலும் வானம் நீரை மீண்டும் இழுத்துக் கொள்கிறது. செம்புலம் உலர்ந்து விடுகிறது. வானம் மறுபடியும் பொழியும், நீர் திரும்பச் செம்புலத்தை வந்தடையும் என்ற நம்பிக்கையே இந்த நாவலின் மைய அச்சு. கதையின் இரு முக்கியமான பாத்திரங்களான சந்திரனும், சுகன்யாவும் இந்த நம்பிக்கையை வெவ்வேறு பாதைகளில் பயணம் சென்று சேர்ந்தடைகிறார்கள் அவர்களது பயணங்களைப் பற்றிப் பேசும் ஒரு சிறிய முயற்சியே இந்த வடிவம்.’
உரையாடல் »
ஏராளமான படைப்புகளைப் படித்துப் படித்து மனம் ஒருவிதமான மொழிசார்ந்த தளத்தில் பக்குவமாக இருக்கிறது. இதனுடன் நமது சொந்த அனுபவங்கள் சேரும்போது படைப்பு வெளியாகிறது என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் சிறுகதையான ‘மண்ணின் மலர்கள்’ என்ற சிறுகதை, சாலையோர மரம் ஒன்று வெட்டப்படுவதைப் பற்றியது. இது ஒரு உண்மைச் சம்பவம். பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பலருக்கும் நிழல் தந்த மரத்தை எதனாலோ வெட்டினார்கள். அது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அந்த மனநிலையைத்தான் சிறுகதையாக எழுதினேன்.
உரையாடல் »
ஒரு நல்ல நாளன்று நான் வாய்ப்பாட்டையும் வீணையையும் கிருஷ்ணசாமி நாயுடுவிடமும், மிருதங்கத்தை பீதாம்பர தேசாயிடமும் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். இப்போதெல்லாம் ஒருவரே பல துறைகளில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். அந்த நாட்களில் ஏதோ ஒன்றில் தேர்ச்சியை அடைய வேண்டுமென்றாலும் மற்ற அனைத்தையும் விட்டு விட வேண்டும் என்று நம்பினோம். நான் வீணையையும் வாய்ப்பாட்டையும் மிருதங்கத்துக்காக விட்டுவிட்டேன்”.
உரையாடல் »
இவற்றை வெறும் “சொத்து”க்கள் என்று மட்டுமே பார்க்க முடியாது. இவை நமது கலைப் பொக்கிஷங்கள். கலைப் பொக்கிஷங்கள் சந்தையில் விற்கப்படும் பொருள்கள்(commodity) அல்ல. உதாரணமாக, தஞ்சை பெரிய கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கோவிலில் இருக்கும் ஓவியங்களை வெறும் “சொத்து”க்கள் என்று நீங்கள் கூறமுடியுமா? சோழர் கால சிலைகளை வெறும் “சொத்து” என்று வகைப்படுத்திவிட முடியுமா? ”இவற்றையெல்லாம் அரசாங்கம் கைப்பற்றி அதை சந்தையில் விற்று விட வேண்டும். அந்த பணத்தைக் கொண்டு மக்கள் நலப்பணித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்ற சொல்லத் துணிவது எத்தகைய முட்டாள்த்தனம்!
உரையாடல் »
காவிரின்னா சங்கீதம்னு சொல்றபடி இருக்கு. இது நமக்கு பிதுரார்ஜிதம், நீங்க எழுத ஆரம்பிச்சபோதும் சரி… இப்போதும் சரி… சுற்றியிருக்கிற எழுத்தாளர்கள் இந்தக் காவிரிக் கரையிலிருந்து வந்தவர்கள் தான். உங்க எழுத்தில வர்ற சங்கீதம் ஒரு சூழலா ஒவ்வொருத்தவர் உள்ளேயும் ஒரு ஆத்மிக உத்வேகமா வந்திருக்கு. பிரமாதமான விஷயம் அது… நான் பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்டது… வியப்படைந்தது. பிரமாதமான விஷயம்.
உரையாடல் »
ஆம் என் தலைக்குள் பல எண்ணங்கள் ஓடியபடி இருக்கும். இருந்தும் எந்த புதிய எண்ணங்களும் இல்லாததைப் போல பல தினங்கள் வெறுமே கழியும். ஆனால் எதையாவது எழுத துவங்கிவிட்டால் பித்து பிடித்ததைப் போல் ஒரு வாரத்தின் ஏழு நாட்களிலும், ஒரு நாளைக்கு பத்து அல்லது பதினைந்து மணிநேரங்கள் உழைப்பேன். இப்படி நடக்கும் நிகழ்வுகளே என் கதைகளை தீர்மானிக்கும்.
உரையாடல் »
உரையாடல், பொருளாதாரம் »
2010ஆம் ஆண்டின் நிதி அறிக்கை (budget) பற்றிச் சில கேள்விகளை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (பெங்களூரு) பேராசிரியர் திரு. ரா.வைத்தியநாதனுடன் உரையாடினோம். பெருகிவரும் தாராளமயமாக்கல், கிராமப் புற வளர்ச்சித் திட்டங்கள், விவசாயம், உள்கட்டுமானம் போன்ற துறைகள் மீது இந்த பட்ஜெட்டின் கவனம் குறித்து உரையாடல் நீண்டது. “தனியார் மயமாக்குவது என்பது அதனளவிலேயே ஒரு இலக்காக ஆக முடியாது. அது ஒன்றும் மந்திரக் கோல் அல்ல. நம் அமைப்பும் மிகவும் குழப்பம் நிறைந்த ஒரு அமைப்பு. தவிர அரசு நிறுவனங்களைச் சரியான மதிப்பு போட்டு விற்பது என்பதும் எளிய செயலல்ல.”
உரையாடல் »
அடையாள, இலக்கிய மற்றும் குழு அரசியலில் இருக்கும் ஈடுபாட்டில் வெறும் கால்பங்கு நல்ல பல படைப்புகளை உருவாவதிலும் அவற்றை மேலும் மேம்படுத்தி வளர்த்தெடுப்பதிலும் இருந்தாலே போதுமானது. சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு உத்திரவாதம் கிடைத்துவிடும். இதற்கெல்லாம் இப்போதைக்கு ஆசை மட்டும் தான் படலாம். மாற்றங்கள் ஏற்படுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இசை, உரையாடல், பேட்டி »
கே.வி.நாராயணசாமி நினைவாக நடந்த அந்தக் கச்சேரியில் விரிவாக காபி ராகத்தைப் பாடி, “இந்த சௌக்ய” பாடினார். அன்றிலிருந்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேட்டு வருகிறேன். பாட்டில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி. நல்ல அழுத்தம். கனமான சாரீரம் இருந்தும், குரலின் ஆற்றல்களைக் காட்டுவதில் கவனம் செலுத்துவதை விட, பாவப் பூர்வமாய் பாடுவதில் கவனம் செலுத்துகிறார். சொல்வனத்துக்காக இவரோடு நடத்திய உரையாடல் இது.




