உயிரியல் பகுதியில் பிற ஆக்கங்கள்
உயிரியல் »
ஒரு செல்லுக்குள் புகுந்து பார்த்தால், அங்கே ஒரு மாபெரும் கெமிக்கல் தொழிற்சாலையே இயங்குகிறது. ஏகப்பட்ட மாலிக்யூல்கள் (மூலக் கூறுகள்) இணைந்தும் பிரிந்தும் சங்கிலி நடனம் ஆடுகின்றன. ஆக்டின் இழைகள் தமக்குத் தாமே பிணைந்து வயர் கூடை பின்னுகின்றன. இரண்டு சின்னஞ் சிறிய கால்களால் அடி மேல் அடி வைத்து பலூன் வியாபாரி மாலிக்யூல் ஒன்று நடந்து போகிறது. கொழுப்புக் கடலில் ஒரு லிபிட் தெப்பம் மிதந்து வருகிறது. அதன் மீது ஒரு தொண்டர் கோஷ்டியே அலப்பறை செய்துகொண்டு ஏதோ கட்சி மாநாட்டுக்குப் போகிறது.
செல்லின் நடுவில் வட்டமாக மெத்தை போட்டு, திண்டு வைத்துக்கொண்டு முகலாயச் சக்ரவர்த்தி போல உட்கார்ந்திருப்பதுதான் மையக் கரு. அதற்குள் சுருட்டிய இரட்டை வடச் சங்கிலி போன்ற டி.என்.ஏ. இதில்தான் நம் பாட்டன், முப்பாட்டன் கொடுத்த மரபு வழிச் செய்திகள் அனைத்தும் பதிவாகி இருக்கின்றன. நம் சைடு வழுக்கை, சப்பை மூக்கு எல்லாவற்றுக்கும் ஆதி காரணம் டி.என்.ஏ.
உயிரியல் »
உயிரினங்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு பல அடிப்படையான கேள்விகள் யோசிக்க யோசிக்க பெரும் வியப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். உதாரணமாக, பிறந்த குழந்தைக்கு தாயின் மார்பில் வாய் வைத்து பால் உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது? மனிதரில் மட்டுமல்ல எல்லாப் பாலூட்டிகளிலும், கண்ணைக் கூட திறக்காத குட்டிகள் தங்கள் உயிர் வளர்க்கும் உணவு அன்னையின் முலையில் இருப்பதாக அறிந்து எப்படி நேராக ஊர்ந்து சென்று சேர்கின்றன? பறவைகள் கூடு கட்டுவது எப்படி? சிலந்தி வலை பின்னுவது எப்படி?… இன்னும் இதே போன்ற “எப்படி?” என்ற கேள்விகளின் வரிசை முடிவில்லாமல் நீளும். மேலே கேட்கப்பட்டவை உட்பட இன்னும் உயிர்களின் நடத்தைகளில் பலவற்றுக்கு ‘அது அவ்வுயிரின் இயல்பு’ என்று ஒற்றை வார்த்தையில் விளக்கம் கொடுத்துவிடலாம். ‘உயிர்களின் இயல்பு’ என்பதைத் தெளிவாக, உயிரியல் சார்ந்து விவாதிக்கத் தகுந்த வகையில் புறவயமானதாக வரையறை செய்ய வேண்டுமென்றால், ‘ஒரு உயிரினத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரியல் பண்புகளில் மிக அடிப்படையானவை,’ என்று சொல்லலாம்.
உயிரியல் »
தென்னமெரிக்க கடற்கரையில் நல்ல வெளிச்சமும் வெப்பமும் உள்ள ஒரு பகல் பொழுது. கடல் அலையின் ஆர்ப்பரிப்பைத் தவிர அந்த வெளியை நிரப்பிய ஒருவித மௌனம் மட்டும். திடீரென்று வெண்மையான கடற்கரை மணல் ஆங்காங்கே அசைந்து மொட்டுவிடுவது போல சிறிய குமிழாக வளர்ந்து விரிசல் விடுகிறது. உள்ளிருந்து கரிய ஆமைக்குஞ்சுகள் முட்டையை உடைத்துக்கொண்டு தலைநீட்டுகின்றன. தலையை இருபுறமும் அசைத்து, பிஞ்சு துடுப்பை விரித்து முட்டையின் ஓட்டைக் கிழித்துக் கொண்டு மிகுந்த சிரமப்பட்டு ஆமையாக விடுபடுகின்றன. அந்த நொடியிலேயே கடலை நோக்கி சின்னஞ்சிறிய கால்களையும், துடுப்புகளையும் வீசியபடி, முதுகில் ஓட்டைச் சுமந்துகொண்டு அடித்துப் புரண்டு கொண்டு ஓடுகின்றன.
உயிரியல் »
உலகிலேயே முதல் குழந்தை, முதல் தடவை இப்படிப் பட்ட சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டவளும் இந்தப் பெண். இது புற்று நோய் சிகிச்சையில் மனிதருக்குச் சமீப காலத்தில் கிடைத்து வரும் சில வெற்றிகளின் துவக்கம். இங்கிருந்து மனித குலம் பல வகைப் புற்று நோய்களைத் தோற்கடிக்கும் காலத்துக்கான பாதை தெரியத் துவங்கி இருக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
உயிரியல் »
சிம்பன்ஸீ குரங்குகளும் யானைகளும் தங்கள் நட்பு மற்றும் சுற்ற வட்டத்தில் இழப்புகள் நேரும்போது வருந்துகின்றன. கொரில்லாக்கள் இறந்தவர்களுக்காக இரங்கி அழுகின்றன. பாஸ்டன் பிராங்க்ளின் ஜூவில் புற்றுநோயால் இறந்த தன் துணைக்காக ஒரு கொரில்லா ஓலமிட்டு தன் நெஞ்சில் அறைந்து கொண்டது. இறந்த கொரில்லாவுக்குப் பிடித்தமான பண்டத்தை அதன் கையில் தந்து அதை எழுப்பப் பார்த்தது. மாக்பை என்ற சிறு பறவைகள், தம் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும்போது அவற்றை எழுப்ப முயற்சி செய்கின்றன; அதன் அருகில் சுள்ளிகளை வைத்து அஞ்சலி செலுத்துகின்றன. இறந்த நரிகள் புதைக்கப்படுகின்றன. யானைகள் உடல் ஊனமுற்ற சக யானைக்காக நிதானித்து அதையும் தம்முடன் அழைத்துச் செல்கின்றன
உயிரியல் »
துணி வியாபாரம் செய்யும் ஆன்டன் வான் லீவன்ஹாக் (Anton Van Leeuwenhoek) என்ற டச்சுக்காரர் 1674-இல் ஒருநாள் படகில் சவாரி போய்விட்டுத் திரும்பியபோது கொண்டுவந்த தண்ணீரை, ஒரு கண்ணாடிக் குப்பியில் ஊற்றி எண்ணெய் விளக்கை ஒளி ஆதாரமாகக் கொண்டு தானே வடிவமைத்து உண்டாக்கிய நுண்ணோக்கியில் பார்த்து அதுவரை வெறும் கண்ணால் பார்க்க முடியாத நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு ’உயிரித்துணுக்குகள்’ (animalicule) என்று பெயரிட்டார்.
ஆன்மீகம், உயிரியல் »
குகைக்குப் போய்க் கல்லால் அடைத்துக்கொண்டு மாதக் கணக்கில் தனியாக உட்கார்ந்திருந்தால், புற உலகத்தின் எல்லாக் காட்சிகளும் செய்திகளும் - பற்பசை விளம்பரங்கள் உட்பட - ரத்தாகி, மனத்திற்கு அதிக பட்ச சலிப்பு (boredom) ஏற்படுகிறது. அந்த நிலையில் க்ளூக்கோஸ்-ஆக்ஸிஜன் பற்றாக் குறையும் சேர்ந்துகொண்டு மனம் கெக்கரே பிக்கரே என்று கற்பனை செய்து கொள்ள, கண் எதிரே சங்கு சக்கர உருவங்கள் தெரிந்தாலும், அசரீரிக் குரல்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.




