முகப்பு » தொகுப்பு

சமூகம் பகுதியில் பிற ஆக்கங்கள்

சமூகம் »

பலாத்கார விளையாட்டு

ஒருபுறம் குழந்தைகள் விளையாடும் குரூர விளையாட்டுக்கள், மற்றொரு புறம் அவர்களே வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் விளையாடக் கூடிய ஆபாச விளையாட்டுக்கள். இதன் இணைகோடு போல, சக மாணவியிடம் தோழமையுடன் பேசுவதையே கள்ளத்தனமாக யாரும் பார்க்காதபோது செய்ய வேண்டிய நிர்பந்தம், என சிறுவர்களையும் இளைஞர்களையும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறோம். இந்தியாவில் மட்டும் வருடத்தில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என புள்ளிவிவரம் தருகிறார்கள். கணக்கில் வராமல் இதுபோன்ற பத்து மடங்கு அதிக அளவில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு மன உளைச்சலில் வாழ்வார்கள் என்பதுதான் நிதர்சனம். இதோ சென்ற வாரம் டெல்லியில் நடந்த பலாத்காரத்தை இந்தியாவே கூர்ந்து கவனிக்கிறது. ஜனாதிபதி மாளிகை முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக நீதிகேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். அந்த சகோதரியைப் பற்றிய தற்போதைய நிலவரங்களை நாளேடுகளும் தொடர்ந்து பிரசுரம் செய்து வருகின்றன.

ஆளுமை, சமூகம், திரைப்படம் »

சாப்ளின் : செம்மையும் சமூகமும் - 1

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்த நாட்டில் அவருக்கு அபரிமித பாராட்டும் வசதிகளும் கிட்டினவோ அதே நாட்டிலிருந்து அந்நூற்றாண்டின் நடுவில் கிட்டத் தட்ட ஒரு குற்றவாளி போல நடத்தப்பட்டு, துரத்தப்பட்ட நிலையில் அவர் இருந்தார். அவருடைய அரசியல் கருத்துகளை ஏற்க முடியாத வலது சாரிப் பீதி அமெரிக்காவிலிருந்து அவரைத் துரத்தியது. அவரை அது மட்டும்தான் துரத்தியது என்று சொல்லி விட முடியாது.

அரசியல், சமூகம் »

இலட்சியக் கொலைகளும், அலட்சியக் கொலைகளும்

ஒரு மைல் நீளத் தெருவில் சுமார் 100 வீடுகளிருக்கும்- பூனைகள் உலவுவதால் என்ன விளைவுகள் என்று சமீபத்தில்தான் எனக்கு உறைத்தது. பூனைகள் அமெரிக்காவில் லட்சக்கணக்கான சிறு பறவைகளைக் கொல்கின்றன என்று படித்த போதுதான் எனக்குப் பிரச்சினையின் பரிமாணம் தெரிந்தது. லெனினியம்/ஸ்டாலினியம் எத்தனை லட்சம் பேரைக் கொன்றன என்பதை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால்தானே புரிகிறது? கம்யூனிசத்தின் பலிகளை லட்சிய பலிகள் என்று சொன்னால் முதலிய அமைப்பு இந்த மாதிரியான அலட்சிய பலிகொண்டு அது சம்பந்தமான குற்ற உணர்வுக்குக்கூடத் தேவையில்லாத குழந்தைமையை பாவித்துக் கொண்டிருக்கிறது.

சமூகம் »

ரோமாக்கள் - இறுதிப் பகுதி : அந்நியர்களாய் அழிக்கப்பட்ட வரலாறு

ரோமாக்கள் எங்கிருந்து வந்தனர், அவர்களுடைய மொழியின் வேர்கள் எவை என்பன குறித்த ஐரோப்பாவின் முன்நவீன காலகட்ட ஊகங்களுக்கு பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளக்கம் கிடைத்தது. அறிவியல் அடிப்படையிலான மானுடவியல் ஆய்வுகளும் மொழித்துறையின் வரலாற்று ஆய்வுகளும் ரோமாக்களின் மொழி தனித்துவம் கொண்டதாக இருப்பதையும், அதன் வேர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதையும் தெளிவாக நிரூபித்தன. ரோமாக்களின் இந்திய வேர்கள் குறித்த கண்டுபிடிப்பு ஐரோப்பியர்கள் மத்தியில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அறிவியல், சமூகம் »

செயற்கைக் கருவூட்டல் : கவனமின்மையும் பின்விளைவுகளும்

விந்தணு தானம் போன்ற செயற்கைக் கருவூட்டல் சிகிட்சைகள் அளிக்கும் மருத்துவமனைகள் இந்தியப் பெருநகரங்களில் முன்னெப்பொழுதையும் விட வேகமாகப் பெருகி வருகின்றன. விந்தணு வங்கிகள், குழந்தைபேறுக்கான மருத்துவ உதவி செய்யும் மருத்துவமனைகளின் தரம், விந்தணுக்கள் அல்லது கருமுட்டைகளில் தொற்று நோய்கள் மற்றும் மரபணுக்கோளாறுகளை கண்டுபிடிக்கும் பரிசோதனைகளைச் செய்வதில் அவற்றின் உண்மையான நடவடிக்கைகள், விந்தணு கொடையாளர்களின் தகவலட்டவனையை (Database) மேம்படுத்தி வைத்திருக்கும் விதம் போன்றவை தீவிரமாகக் கண்கானிக்கவும் நெறிப்படுத்தவும் படவேண்டும்.

அரசியல், சமூகம், விவரணப்படம் »

மதப்பிளவும் தேசப்பிரிவினையும்

சிறிய சிறிய மூட்டை முடிச்சுகளையும் கூட கீழே போட்டுவிட்டு வெறும் கூடான உடலில் உயிரை மட்டும் சுமந்து கொண்டு நடக்கிறார்கள். அதற்கடுத்து அவர் சொல்வது தான் இத்தனை ஆண்டுகள் தாண்டியும் கேட்கும் நம் நெஞ்சங்களை உலுக்குகின்றது. தாய்மார்கள் தாங்கள் நொந்து சுமந்து பெற்ற குழந்தைகளைக்கூட ஒரு கட்டத்தில் தூக்கமுடியாமல் துவண்டு, கதறி அழவும் தெம்பில்லாமல் உயிருடன் கீழே இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்.

சமூகம் »

ரோமாக்கள் - அந்நியர்கள் ஆக்கப்பட்ட வரலாறு

சல்லடைக் கண்களாய் இருந்த வேலிகள் சிறைக்கம்பிகளாய் உருமாற்றம் பெற்ற வரலாறே ஐரோப்பிய தேசியவாதத்தின் வரலாறு என்றும் சொல்லலாம். வரலாற்றில் நவீனத்துவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியோடு தேசியவாதமும் பிணைந்திருப்பது தற்செயல் நிகழ்வல்ல - பெரும்பாலும் ஐரோப்பிய காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட தேசங்கள்தான் தமக்குள்ளும் வெளியும் தீவிரமான எல்லைப் போர்களைச் சந்திக்கின்றன. தேசியவாதத்தின் வேர்கள் நவீனத்துவத்தில் இருக்கின்றன. நாகரிகம் வளர்ச்சியுற்று தேசியமாக உருவாகி ஐரோப்பிய மண்ணில் எல்லைக் கம்பங்களை நட்டு அதன் வரைபடங்களில் எல்லைக் கோடுகளைக் கீறியது. தேசியம் நிலப்பரப்புக் கோட்பாட்டைத் தழுவி, ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே மக்கள் என்ற ஒருமைப்பட்ட பண்பாட்டைத் தோற்றுவித்தது.

உலக அரசியல், சமூகம் »

பொறாமை எனும் விஷம்

இன வாதக் கோட்பாடு, தங்களைக் குறித்து சந்தேகமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டிருந்த பலவீனமான ஜெர்மானியர்களை, தாங்கள் ஒரு வலுவான மற்றும் உயர்ந்த அறிவுஜீவிகளாகக் கற்பனை செய்துகொள்ளும் கூட்டத்தினராக மாற்றியது. இனவாதம் என்பது பலவீனத்தால் உந்தப்பட்டு மந்தைக்குள் சென்று சேர்வதன்றி வேறல்ல.

சமூகம், பொருளாதாரம் »

பெருங்கொள்ளையும், அன்னிய வங்கிக் கணக்குகளும்

ஒரு முறை தன்னிடம் இருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களைக் கொடுப்பதென்று தீர்மானித்து விட்ட இந்த வங்கிகள், இதர நாடுகளின் அரசுகள் இத்தகைய கணக்குகளைப் பற்றிய தகவல் சேகரிக்க முனைந்தால் தருவதாக உறுதி கொடுத்திருக்கின்றன. ஒரு நாடு மட்டும் இந்தக் கணக்குகளைப் பற்றிச் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அது எந்த நாடு என்று யோசியுங்கள்!! ஆம், அது இந்தியாதான்.

ஆளுமை, சமூகம் »

அன்னாவும், அருணாவும்

இன்றைய கொந்தளிப்பான பொது மனநிலையில், அன்னாவின் தரப்புக்கு மாற்றுத் தரப்பு என்றாலே, “நீ யார்.. உனக்கு என்ன தகுதி” என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். அதுவும் சோனியா காந்தியின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் என்னும் போது, காங்கிரஸின் கையாள் என்பது போலத் தோன்றி விடுகிறது. ஊடகங்கள் பலவற்றிலும், அருணா அவ்வாறே சித்தரிக்கப் படுகிறார். இன்று அன்னா வெற்றி பெற்று, எல்லோரும் ஆசுவாசம் கொண்டுள்ள நிலையில், நாம் அருணா ராயைப் பற்றிக் கொஞ்சம் பேசுவது அவசியம்.

சமூகம் »

ஊழல் ஒழிப்பு : சிங்கப்பூர் குறித்து சில சிந்தனைகள்

இன்று சிங்கப்பூரில் லஞ்சம் கேட்பதோ, வாங்குவதோ கூடாது. அப்படி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்-கணிசமான அபராதம் விதிக்கப்படுவதோடல்லாமல், நீண்ட காலம் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம், ஏன், முறைகேடாகச் சேர்த்த சொத்து முழுமையும் பறிமுதலும் செய்யப்படலாம்- முறைகேடாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பதாக ஒருவர் கை விரித்தால், அதற்கு பதிலாக அவருக்குச்சிறை தண்டனை நீடிக்கப்படும்! அவரைச் சார்ந்தவருடைய வங்கி மற்றும் அனைத்து கணக்குகளையும் கூட அரசு விசாரிக்கலாம்.

சமூகம் »

கண்ணாடி வீடுகள்

சமூகத்தில் மாற்று அரசியலின் குரலாகவும், தார்மீகத்தின் அதிபதியாகவும் தன்னை முன்னிருத்தும் இந்திய ஊடகங்களுக்கு உண்மையிலேயே அத்தகைய ஒரு இடம் உண்டா என்பது விவாதிக்கப்பட வேண்டியது.

சமூகம் »

அன்புள்ள முதல்வருக்கு..

தமிழகத்தின் பாசன நீர்த் தேவையில் 60 சதத்திற்கும் மேலாக நெல்லுக்கு உபயோகப் படுகிறது. திருந்திய நெற்சாகுபடி என்னும் புது முறையில், ஒரு குத்துக்கு ஒரு நாற்று உபயோகிப்பதும், நீர் நிறுத்திப் பாசனம் செய்யாமல், காய விட்டு, மற்ற பயிர்களைப் போல் நீர் பாய்ச்சுவதும் நல்லதென்று சொல்கிறார்கள். இதனால், தண்ணீர்த்தேவை 50 சதம் குறைகிறதென்றும், மகசூல் 25-40 சதம் அதிகரிக்கிறதென்றும் சொல்கிறார்கள். ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தும் முறை இது – உபரி நீரை அதிக நிலத்தில் பாசனம் செய்ய உபயோகிக்கலாம்.

சமூகம் »

பால்வழி குற்றத் தடுப்பு

பேராசிரியர் மங்கை நடராஜன் நியுயார்க் மாநிலத்தின் சிடி யுனிவர்ஸிடி பல்கலை அமைப்பில் ஒரு அங்கமான, புகழ் பெற்ற, ஜான் ஜேய் காலேஜ் ஆஃப் க்ரிமினல் ஜஸ்டிஸ் என்ற கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்புக்கு இயக்குநராக இருக்கிறார். இந்தக் கட்டுரை, ஐக்கிய நாட்டுச் சபையின் 12ஆவது பேரவையில் குற்றத் தடுப்பும், குற்றத்துக்கு நீதியும் ஆகிய கருதுபொருளில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய ஒரு உரையின் அண்மையான தழுவலாக எழுதப்பட்டது.

சமூகம் »

பாலழித்தல்

அறுவை நிறைவேற்றப் படும் விதத்தில் வேறுபாடுகள் நிலவியிருக்கின்றன. ஆணுறுப்பையே முழுக்க அறுத்தெறியப் படுவது ஒருவகை என்றால் பீஜக்கொட்டை மட்டும் அகற்றப் படுவதுமுண்டு. தலைநகரில் இருக்கும் மிக பிரமாண்ட அரண்மனை வளாகத்தில் அரசாங்கம் அங்கீகரித்த அறுவை நிபுணர்கள் இருந்தார்கள். அரசாங்க ஊதியம் என்று ஒன்றும் இவர்களுக்குக் கிடையாது. இருப்பினும், இத்தொழிலில் ஈடுபட்டிருந்தோர் அக்காலந்தொட்டே தலைமுறை தலைமுறையாக குடும்பத்தொழிலாகவே செய்தனர். ஒவ்வொரு அறுவைக்கும் அதன் பிறகான சிகிச்சைக்கும் ஆறு பணம் வாங்கினர்.