புகைப்படத்தொகுப்பு பகுதியில் பிற ஆக்கங்கள்
புகைப்படத்தொகுப்பு »
அதி வேக புகைப்படக்கலையில் பல்வேறு பரீக்ஷார்த்தங்கள் செய்துவரும் ஜான் ஸ்மித், இங்கு பலவேறு பொருட்கள் திணிக்கப்பட்ட ‘பல்பு’களை தன் காமிரா முன் வெடிக்க வைத்து, சரியாக அவை வெடிக்கும் நொடிகளைப் பதிவு செய்திருக்கிறார்!
புகைப்படத்தொகுப்பு »
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த புகைப்பட வல்லுனர் பீடெர் மென்ஸெல், ‘Hungry Planet’ எனும் புத்தகத்துக்காக 24 நாடுகளுக்கு சென்று எடுத்த புகைப்படங்கள் இவை. சுடானில், நான்கு தலைமுறைகள் சாப்பிட 79 பவுண்டுகள் செலவு செய்யும் அபூபக்கர் குடும்பத்திலிருந்து 320 பவுண்டுகள் செலவு செய்யும் ஜெர்மானிய குடும்பம் வரை, உலகின் சராசரி உணவு செலவுகளை ஆவணப்படுத்துகிறது இத்தொகுப்பு.
புகைப்படத்தொகுப்பு »
உலகின் அதிகரிக்கும் மக்கள் தொகையாலும் விரிவடைந்து கொண்டே போகும் விவசாய நிலங்களாலும், நாம் இழந்து வருவது நமது சுத்தமான நன்னீர் நிலைகளை ஆகும். அழிந்து வரும் நீர் நிலைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க, மைக்கேல் ரோகோ என்பவர் உலகின் பல இடங்களில் இன்னும் மாசுபடாது இருக்கும் நீர் நிலைகளை தனது புகைப்படங்களில் பதிவு செய்து வருகிறார். அப்புகைப்படத்தொகுப்பை இங்கே காணலாம்.
புகைப்படத்தொகுப்பு »
அஸ்ஸாமிய புது வருடத்தையும் வசந்தத்தையும் வரவேற்கும் ரொங்காலி பிஹு கொண்டாட்டங்கள். பெங்கால், ஒரிசா, கேரளா, நேபால், பஞ்சாப், மணிப்பூர், தமிழ்நாடு என்று வெவ்வேறு மாநிலங்களில் இந்த புது வருட பிறப்பு வெவ்வேறு பெயர்களில் கொண்டாட படுகிறது. தமிழ்நாட்டில் இது சித்திரை முதல் தேதியில் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப் படுகிறது.
புகைப்படத்தொகுப்பு »
வசந்தத்தை வண்ணங்களைக் கொண்டு வரவேற்கும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களின் படங்கள் இங்கே.
புகைப்படத்தொகுப்பு »
புகைப்படங்கள் 170 நாடுகளிலிருந்து வந்தன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
புகைப்படத்தொகுப்பு »
தினம் ஒரு புகைப்படமென்ற கணக்கில் உலகின் பல நாடுகளின் சுவரஸியமான தருணங்கள் இந்த பக்கத்தில் கிடைக்கின்றன. காலம், தேசம் கடந்த மக்களின் வாழ்க்கை இதில் பதிவாகியுள்ளது.
புகைப்படத்தொகுப்பு »
David Keochkerian என்பவர் எடுத்திருக்கும் அசாத்தியமான வண்ணச்சேர்க்கையை வெளிப்படுத்திய அகச்சிவப்பு ஒளிப்படங்களின் தொகுப்பை ஸ்லேட் இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.
புகைப்படத்தொகுப்பு »
இயற்கையின் பல்வேறு இழைகளைக் காட்டும் அருமையான ஒளிப்படங்களின் அணிவகுப்பு இந்த இணைப்பில்!
புகைப்படத்தொகுப்பு »
நேஷனல் ஜியோகிரபிக் நிறுவனம் சமீபத்தில் நடத்திய புகைப்பட போட்டிக்கு வந்த புகைப்படங்களில் சில இங்கே.
புகைப்படத்தொகுப்பு »
BBC நிறுவனமும் தேசிய வரலாற்று அருங்காட்சியகமும் கானுயிர் புகைப்படங்களுக்கான ஒரு சர்வதேச அளவிலான ஒரு போட்டியை அறிவித்தது. 98 நாடுகளிலிருந்து 48,000 புகைப்படங்கள் குவிந்தன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 10 புகைப்படங்கள் இங்கே.
புகைப்படத்தொகுப்பு »
நம் வாழ்க்கை அனுபவங்கள் நம் மனதை மட்டுமன்றி புறத்தோற்றத்தையும் மாற்றும் வலிமிஅகொண்டவையா? இதோ ஆஃப்கானிஸ்தானத்தில் போரில் ஈடுபட்டுத் திரும்பிய ராணுவவீரர்களின் படங்கள் - போர் அனுபவத்துக்கு முன்பும், அதன் பின்பும். பனிரெண்டே மாதங்களில் அவர்கள் முகத்தின் மாற்றங்கள் என்ன சொல்கின்றன? அந்தக் கண்களில் என்ன தெரிகின்றன?
http://www.slate.com/blogs/behold/2012/10/17/claire_felicie_s_photographs_marines_faces_before_during_and_after_afghanistan.html
புகைப்படத்தொகுப்பு »
இந்த வாரம் தில்லி ஃப்ரெஞ்ச் கலாசார மையத்தில் பார்வையிழந்தவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உடையவர்கள் எடுத்த ஒளிப்படங்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இப்படங்களில் சிலவற்றின் தொகுப்பை பிபிஸி இணையதளம் வெளியிட்டிருக்கிறது. ஒலியின் நகர்வு, தொடுவுணர்வு ஆகியவற்றைக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கும் இப்படங்கள் வெகு நேர்த்தியாக இருப்பதோடு, பார்வையிழந்தவர்கள் உலகைப் பார்க்கும் விதத்தை ஓரளவுக்கு உணர்த்துவதாகவும் இருக்கிறது.
ஒளிப்படங்களை இங்கே பார்க்கலாம்.
புகைப்படத்தொகுப்பு »
நேஷனல் ஜியோகிரபிக் நிறுவனம் பயணப் படுவோரின் புகைப்பட போட்டி ஒன்றை நடத்தி அதன் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. பிரமிக்க வைக்கும், லயிக்க வைக்கும் காட்சிகள். இங்கே பார்க்கலாம்.
புகைப்படத்தொகுப்பு »
போட்டியை நடத்துவது சொல்வனம் அல்ல, வேறு ஒரு ஆங்கில பத்திரிக்கை. கூகுள் நிறுவனத்தின் வரைப்படங்களை அளிக்கிறது. அப்படங்களில் உள்ள நிலப்பரப்பு எந்த நாட்டை சேர்ந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். சுவரஸியமான விளையாட்டு. ஆச்சரியமான நிலப்பரப்புகள். முழுத் தொகுப்பையும் இங்கே காணுங்கள்.




