முகப்பு » தொகுப்பு

வீடியோ பகுதியில் பிற ஆக்கங்கள்

வீடியோ »

அணுக்களில் தகவல் சேமிக்கும் தொழில் நுட்பத்தைப் பற்றி ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கும் IBM ஆய்வகத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் ‘உலகின் மிகச் சிறிய’ படம் இது! இந்த தின் ஒவ்வொரு காட்சியையும், அணுக்களை ஒவ்வொன்றாக நகர்த்தி பல மில்லையன் அளவு பெரிதாக்கி உருவாக்கியிருக்கிறார்கள்.

வீடியோ »

கோயமுத்தூரில் ஒரு சிகிச்சைக்காக ஆர்ய வைத்யசாலாவில் தங்கி இருக்கையில் லால்குடி ஜயராமன் இயற்றிய யமன் கல்யாணி தில்லானா இது. இது உருவாகியதும் அந்த சந்தோஷத்தில் தனது சிஷ்யர்களுக்கெல்லாம் போஸ்ட் கார்டில் பாடல் வரிகளை அனுப்பினாராம். பின்பு 2011 ல் சௌடையா ஹாலில் அவரது மகள் விஜயலக்ஷ்மி லால்குடியின் தில்லானாக்களைக் கொண்ட கச்சேரியை தன் தந்தை/ குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நிகழ்த்தியபோது லால்குடி நெகிழ்ந்துபோனாராம்: ‘நான் இவற்றை இயற்றியபோதுகூட இவை ரசிகர்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் என உணர்ந்திருக்கவில்லை. என் படைப்புகள் பாடகர்களாலும், நடனக்கலைஞர்களாலும் பரவலாய் பாடப்படுகின்றன. அவர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்” என்றாராம். மதுவந்தி, ரேவதி, தேஷ் போன்ற ராகங்களில் இவர் இயற்றியுள்ள தில்லானாக்களில் இவர் என்றும் வாழ்ந்திருப்பார்.

வீடியோ »

தமிழரின் பெருமைகளில் ஒன்றான 1000 ஆண்டு பழைமையான தஞ்சைப்பெரிய கோவிலின் கட்டுமானத்தை, சோழர் பாணி ஐம்பொன் நடராஜர் சிலை உருவாக்கத்தை, பெரியகோயிலின் உள்ளிருக்கும் பெரிய சுவரோவியத்தை, மகாபலிபுரம், ஸ்ரீரங்கம், என இந்திய கட்டட, சிற்பக்கலையை விளக்கும் ஆவண படம்.

வீடியோ »

ஒரு மனிதன், தன் அறையில் ஓடும் ஒரு பூச்சியை பிடிக்க பார்க்கிறான். தன் ஷூ-வை கழட்டி அதை அடிக்க முயல்கிறான். ஒருவழியாக அப்பூச்சி அகப்படுகிறது, ஆனால் அவன் தொடர தொடர காட்சி விபரீதமாக மாறுகிறது…

வீடியோ »

ரிச்சார்ட் டாக்கின்ஸ் பிரபல நாத்திகர். அவர் இறந்த பிறகு கடவுளை சந்திக்கிறார். பிறகு…

வீடியோ »

தற்போதைய டிஜிடல் புகைப்படக்கருவிகளின் மூதாதைகளை நாம் அறிந்திருப்போம். அந்த மூதாதைகளை உயிர்ப்புடன் வைத்திருந்தவை Kodachrome படச்சுருள்கள்.
Kodak நிறுவனம் இந்த Kodachrome படச்சுருள்களை தயாரிப்பை கைவிடுகிறது. தன்னுடய தொழிற்சாலையில் தயாரான் இத்தகைய படச்சுருளின் கடைசி சுருளை உலகின் பிரபலமான புகைப்படக் கலைஞரான ஸ்டீவ் மக்கரியிடம் அளித்து, அந்த கடைசி 36 ஃபிரேம்களை கெளரவப்படுத்த வேண்டுகிறது. ஸ்டீவ் மக்கரி தனது பயணத்தை துவங்குகிறார். இந்த ஆவணப்படம் அவருடைய அந்த பயணத்தை பதிவு செய்கிறது. அந்த 36 ஃபிரேம்களை ஸ்டீவ் மக்கரி எப்படி பயன்படுத்தினார்? இந்த ஒளிப்படத்தை பாருங்கள்.

வீடியோ »

சென்ற 12-ஆம் தேதி (12-1-2013) அன்று சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளாகும். விவேகானந்தர் குறித்ததொரு அரிய ஆவணப்படத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

அஞ்சலி, வீடியோ »

சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர் இவ்வாண்டு டிசம்பர் 11ம் தேதியன்று தனது 92வது வயதில் காலமானார். இந்திய செவ்வியல் இசையை உலக அளவில் எடுத்துச் சென்று அதன் நவீன பரிமாணங்களும் வெளிப்படக் காரணமாக இருந்த இந்த தலைசிறந்த இசைக்கலைஞரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பெருஞ்சோகம். பண்டிட் ரவிசங்கரின் மறைவுக்கு சொல்வனத்தின் அஞ்சலி.

வீடியோ »

நாம் பலமுறை பார்த்து உதாசீனமாகக் கடந்து சென்ற எறும்புகளைப் பற்றிய சுவாரசியமானதொரு விவரணப் படம்.

வீடியோ »

தீபாவளி - நன்மைகளின் எழுச்சியும் திருவிழா. இந்திய கலாச்சார ஒற்றுமையின் சின்னங்களில் ஒன்று.
வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வீடியோ »

இயற்கைசக்திகளை தம் அறிவால், ஞானத்தால் தமக்கு சாதகமாய் வளைத்திருப்பதாய் மனிதகுலம் இறுமாந்திருக்கையில், தாவரங்களும், சிறிய பாக்டீரியாக்களும் சூரிய ஒளியை உபயோகித்து இப்பூமியில் உயிரினம் உருவாக எப்படி வழி வகுத்தன, நம் முன்னோர் தோன்ற அவை எப்படி காரணமாய் இருந்தன என்பதை விளக்கும் அருமையான வீடியோத் தொடரின் முதல் விடியோ இது:

வீடியோ »

தில்லி (DILLI) என்ற இந்த விவரணப்படம், பிற மாநிலங்களிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும், தில்லி பெருநகருக்குப் பிழைப்பு தேடி வரும் கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது. வெகுசிறப்பான ஒளிப்பதிவுடனும், நேர்த்தியான இசையுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் வெற்றி, விவரணப்படங்களுக்கு இந்தியாவில் இருக்கும் தேவையைச் சுட்டுவதாக இருக்கிறது.

வீடியோ »

பிரபல வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன் தனது குழுவினருடன் கர்நாடக இசையில் அமைந்த ‘மோக்‌ஷமு..’ என்ற பாடலை மேற்கத்திய Quartet பாணியில் இசைக்கிறார். மனதை லயிக்க செய்யும் கலை வடிவம்.

வீடியோ »

தினசரி நாம் உறவாடும் வாடகை ஆட்டோவின் ஒரு நாள் வாழ்க்கை.