முகப்பு » தொகுப்பு

அஞ்சலி பகுதியில் பிற ஆக்கங்கள்

அஞ்சலி, அறிவியல் »

மார்ட்டின் கார்ட்னர் என்றொரு மாயப்புதிர்

‘சயிண்டிஃபிக் அமெரிக்கன்’ பத்தி ஒரு புரட்சியையே செய்தது எனலாம். அதில் அவர் ஒவ்வொரு இதழிலும் ஒரு புதிரைக் கேட்பார். அப்புதிர் கணிதம் தொடர்பானதாகவோ, ஜியாமெட்ரி தொடர்பானதாகவோ, வார்த்தை விளையாட்டாகவோ இல்லை வித்தியாசமான யோசிப்புமுறையைக் கோருவதாகவோ இருக்கும். அப்புதிருக்கான விடையை அதற்கு அடுத்த இதழில் வாசகர்கள் எழுதி அனுப்புவார்கள். புதிருக்கான விடையை கார்ட்னரும் விளக்கி பதிலெழுதுவார்.

அஞ்சலி, வீடியோ »

சென்ற ஞாயிற்றுக்கிழமை (மே 09, 2010)  தன்னுடைய  92 வயதில் மரணமடைந்த லீனா ஹார்ன் (Lean Horne) ஒரு சிறந்த அமெரிக்க ஜாஸ் இசைப்பாடகி. நிறவெறி உச்சத்தில் இருந்த காலத்தில் அதைத் தகர்த்தெறிந்து தனக்கென தவிர்க்க முடியாதொரு இடத்தை அடைந்தவர் லீனா ஹார்ன். வெள்ளை மேலாண்மையைத் தகர்த்து ஹாலிவுட்டில் இடம்பிடித்த முதல் கருப்பினப் பெண் இவர். நிறவெறிக்கெதிரான வெளிப்படையான பேச்சுக்காக 1950-ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட இவர் தொடர்ந்து இரவு விடுதிகளில் பாடியும், தனிப்பட்ட இசைத் தொகுப்புகள் மூலமாகவும் பிரபலமாக இருந்தார். கருப்பின மக்களுக்கு சம உரிமை கோரி நடைபெற்ற அமெரிக்கக் குடியுரிமைப் போராட்டங்களுக்காக உரக்கக் குரல் கொடுத்தபடியே இருந்த இவர் மீண்டும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தது 1969-ஆம் ஆண்டுதான். மயக்கும் குரலுக்கும், வசீகரமான அழகுக்கும் சொந்தக்காரரான லீனா ஹார்ன் தன்னுடைய சமுதாயப் பார்வைக்காகவும் உலகெங்கும் …

அஞ்சலி, புகைப்படக்கலை »

நூலை மீறும் பொம்மைகள்

தெருவில் கோஷமிட்டபடிச் சென்ற போராளிகள் மீது, காவலர்கள் நாய்களை ஏவிவிட்டு கடிக்க வைப்பது, இரண்டு வெள்ளை இன ஆட்கள் கருப்பினப் பெண்களை உருட்டுக்கட்டையால் தலையில் அடிப்பது போன்ற புகைப்படங்கள் பலத்த அபாயங்களுக்கு நடுவே எடுக்கப்பட்டவை. சில வெள்ளை இன அதிகாரிகள், தங்கள் கல்லூரியில் சேரவிருக்கும் முதல் கருப்பு மாணவரை எப்படித் தாக்குவது என்று சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது மறைந்திருந்து எடுத்த புகைப்படமும் பிரபலமான ஒன்று.

அஞ்சலி, ஆளுமை, இசை »

பட்டம்மாள் - ஒரு சமூக நிகழ்வு

பட்டம்மாளின் முயற்சிக்குத் தன் பரிபூரண ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணசாமி தீட்சிதரே பட்டம்மாளின் கச்சேரிகளுக்குத் தம்பூராவும் மீட்டினார்! பட்டம்மாள் இறுதிவரை ஒரு பெரும் தேசியவாதியாகவே இருந்தார். 1947-இல் சுதந்திரதினத்தன்று ஆல் இந்தியா ரேடியோவில் அவர் பாரதியாரின் தேசபக்திப்பாடல்களைப் பாடினார். அதற்காக அவருக்குத் தரப்பட்ட சம்பளத்தை வலுக்கட்டாயமாக வாங்க மறுத்து விட்டார். அப்பாடல்களைப் பாடியதைத் தன் தேசக்கடமையாகக் கருதினார் பட்டம்மாள். ஆணாதிக்க சமூகத்திலிருந்து மீண்டெழுந்த பட்டம்மாள் தன் குடும்பத்திலேயே இசைக்கு ஒரு பெரிய குருவாக விளங்கினார். தன் சகோதரர்கள் டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் இருவரையும் தேர்ந்த இசைக் கலைஞர்களாக்கினார். பட்டம்மாளின் குரல் நமக்குக் கேட்கக் கிடக்காத ராஜம்மாளின் குரல்; சமையலறைக்குள்ளேயே சிறு முனகலாகவும், ஆலாபனையாகவும் முடங்கிப்போன பெண்களின் குரல்; சமூக மாற்றத்தை முன்வைத்ததொரு தலைமுறையின் எளிய மனிதர்களின் குரல்.

அஞ்சலி, ஆளுமை, விளையாட்டு »

111

சமீபத்தில் மறைந்த நடுவர் டேவிட் ஷெபர்ட் குறித்த கட்டுரை இது: டேவிட் ஷெபர்ட் தன் சிறுவயதில் கிராமத்தில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே அவருக்கும் இந்த ‘நம்பிக்கை’ ஏற்பட்டிருக்கிறது. நெல்சன் நம்பரால் ஏற்பட்ட துரதிர்ஷ்டம் நீங்க வேண்டுமென்றால் செய்ய வேண்டிய பரிகாரம், பேட்டிங் அணியின் வீரர்கள் அனைவரும் ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு நிற்பது.

அஞ்சலி, இலக்கியம் »

முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்

ராஜ மார்த்தாண்டனுக்கு பிடித்தமான உலகம், அவருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தரும் உலகம், மரங்களின், பறவைகளின், பூக்களின், குழந்தைகளின் உலகம் தான். அவரது சிறந்த கவிதைகள் இவற்றைப் பற்றியன தான். இந்த உலகில் அவர் ஆழ்ந்து விடும் போது அவரிடமிருந்து பிறக்கும் கவிதைகள் ஒரு ஜென் ஞானியின் உலகிற்கு நம்மை இட்டுச் செல்லும்.