முகப்பு » தொகுப்பு

வேளாண்மை பகுதியில் பிற ஆக்கங்கள்

அறிவியல், சூழலியல், வேளாண்மை »

தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்

காலங்காலமாக வேளாண் உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக விளங்குபவை தீங்குயிரிகளே. இவற்றை அழிப்பதற்கெனப் பூச்சி கொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை சம்பந்தப்பட்ட தீங்குயிரிகளை அழிப்பதோடு மட்டும் நின்றுவிடாது சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தி விடுகின்றன. மேலும், பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தும் மனிதர்கள், அண்மையில் வாழும் ஏனைய உயிரினங்கள் முதலியனனவற்றுக்கும் இவை தீமை விளைவிக்கின்றன.

வேளாண்மை »

மண்ணை வளர்த்த மாமனிதர்கள்

மண்ணை வளப்படுத்துவதுதான் நலவாழ்வு விவசாயம். ரசாயனம் இட்டு மண்ணைச் சுரண்டுவது நோய் விவசாயம். மண் என்பது வெறும் ரசாயனங்கள் மட்டும் நிரம்பிய பொருள் அல்ல. அது உயிருள்ள, மேலும் உயிரினங்கள் நிரம்பிய ஒரு பொருள். அதை வெறும் ரசாயனச் சத்துகளால் நலமாக வைத்திருக்க முடியாது. அதில் வாழும் உயிரினங்கள் நலமாக இருந்தாலே மண் ஆரோக்கியமாக இருக்கும்.

சூழலியல், வேளாண்மை »

டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்

ரசாயன உரமிட்டதால் இவரது பயிர்கள் நல்ல கரும்பச்சை தட்டியது. அவ்வளவுதான். பூச்சித்தாக்குதல் தொடங்கின. பயிர்களுக்கு ஏராளமான நோய்கள் வந்தன. மளமளவென்று மேலே ஏறி விண்ணைத் தொட எண்ணியவர் நிற்கமுடியாமல் நிலை குலைந்து மண்ணில் சாய்ந்தார். அந்த அளவுக்கு நஷ்டம். நாலாவது நிக்கோலசின் புதல்வர்தான் நமது கதாநாயகர். அவர்தான் டாக்டர் ஜோ.நிக்கோல்ஸ்.

வேளாண்மை »

தாவரங்களுடன் பேசிய அற்புத விஞ்ஞானி - கார்வர்

ஒரு தோட்டக்கலை நிபுணராக அமர்ந்து கார்வர் யோசித்தபோது மிகவும் வளம் இழந்த மண்ணுக்கு ஏற்ற பயிர் என்ற வகையில் வேர்க்கடலையே அவர் கண்முன் நின்றது. ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறநாட்டில்?’ என்று எம்.ஜி.ஆர் பாடியது போல் இந்தக் கார்வரும் ‘என்ன வளம் இல்லை இந்த வேர்க்கடலையில், ஏன் செய்ய வேண்டும் பருத்தியை சாகுபடி?’ பாட்டுப்படித்தார். ஷூட்டிங் முடிந்தவுடன் எம்.ஜி.ஆர். தூங்கியிருப்பார். கார்வர் கையில் கடலையை வைத்துக்கொண்டு ஏழு இரவுகள் ஏழு பகல்கள் தூங்காமல் ஆய்வு ஆய்வு ஆய்வு என்று ஆராய்ந்தார்.

வேளாண்மை »

மண்விழுதில் நுண்ணுயிரிகள்

ஆனால் ஒரு தாவரத்துடன் எந்த இனவகையிலும் பொருந்தாத ஒரு பூஞ்சையை, ஒரு கிருமியை அதன் பாரம்பர்ய குணக்கூறை மலடாக்கிவிட்டு அதைச் செலுத்துவது மரபியல் ஒழுக்கமா? இப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட விதைதான் மரபணு மாற்ற விதை. தமிழ்நாட்டில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், மாலிக்யுலர் பயாலஜி கற்றவர் - பிட்டி கத்தரிக்காய் விஷமில்லை என்று கூறியதற்கு சந்திராயன் மயில்சாமி அண்ணாத்துறை ஒத்து ஊதியுள்ளார். மயில் சாமிக்குச் சந்திரனைப் பற்றித் தெரிந்த அளவு, பூமியைப் பற்றி எதுவும் தெரியாது என்று புரிகிறது. பூமியைப் பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும்? சந்திரனில் தங்க இடம் ஒதுக்கிவிட்டாரோ!

வேளாண்மை »

விதைகளின் கதைகள்

இந்தியாவின் பாரம்பர்ய நெல் விதைகளை அந்நிய சக்திகளுக்கு வழங்கியது உண்மையானால் அது போற்றக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை. அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட இந்திய நெல்ரகங்கள் in Situ-வாகக் காப்பாற்றப்பட்டு உலகில் எந்த நாட்டிலாவது சாகுபடி செய்யப்பட்டிருந்தால், அதைப் பாராட்டலாம். யாருக்கும் பயனில்லாமல் அமெரிக்க விதை வங்கிகளில் உகந்த குளிர்சாதன வசதியுடன் நைட்ரஜன் நீர்ம ஆவிக்குள் முடங்கிக் கிடந்தால் யாருக்கு என்ன லாபம்? ஒரு காலனி நாடாக இருந்த இந்தியாவிலிருந்து இந்தியச் செல்வங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்குக் கொள்ளை போனது சரி. 20-ம் நூற்றாண்டில் இந்திய விடுதலைக்குப்பின் நிகழ்ந்த விதைக்கொள்ளைக்கு என்ன சொல்லித்திட்டுவது?

வேளாண்மை »

வேளாண்மை உயில்: ருஷியாவில் மண்ணுயிர் ஆய்வு

பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த ஸ்பேரயர் கொண்டு காடுகளில் ‘மருந்து’ அடிப்பதில்லை. காடுகளில் உள்ள விலங்குகளும் தாவரங்களுக்கும் நோய் வருவதுண்டு. ஆனால் மருத்துவ உதவியின்றி அவை குணமாகின்றன. விலங்குகளும் தாவரங்களும் பூச்சி பூசணங்களிலிருந்து தாமாகவே காப்பாற்றிக் கொள்கின்றனவே. எவ்வாறு? இழந்துவரும் மண்வளம் மீட்கப்படவேண்டும். நவீன விவசாயத்தில் மண்வளம் இழப்பது மட்டுமல்ல. மண்ணில் மக்குப் பொருள் இல்லாததால் மண்ணே அரிப்புகளுக்கு பலியாகிப் பாலையாகிவிடுகிறது.

வேளாண்மை »

உலக இயற்கை வேளாண்மையில் இந்தியப் பங்கு

‘இயற்கை விஞ்ஞானி’ என்று கருதப்படும் தேர்ந்த வேளாண் எழுத்தாளரான ஆர்.எஸ்.நாராயணன் இயற்கை வேளாண்மையில் இந்தியப் பங்கு குறித்து விரிவாகப் பேசுகிறார்: “உணவே மருந்து” என்ற குரல் இன்று ஓங்கி ஒலிக்கின்றது. ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல; அன்றைய இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் மக்கள் நோய் நொடியில்லாமல் நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான காரணம் பாரம்பரிய உணவு முறை என்பதை மெக்காரிசன் பகுத்துரைத்தவர். வருத்தப்படக்கூடிய விஷயம் எதுவெனில் இந்தியாவில் மெக்காரிசனின் ஆய்வுக் கட்டுரைகளும் அரசாங்க வெளியீடு கோப்புக் குப்பைகளில் புதையுண்டதுபோக, எஞ்சியதிலிருந்து சேகரிக்கப்பட்ட விவரங்கள் குறைவானவை.