ஓவியம் பகுதியில் பிற ஆக்கங்கள்
ஓவியம் »
Futurist உத்தியில் ஒரு உருவத்தின் தொடரசைவு என்பது கித்தானில் அதன் வேகம் வெளிப்படும் விதத்தில் ஓவியமாயிற்று. Vorticism அதிலிருந்து மேலும் பயணப்பட்டு அறிமுகமற்ற இருண்மை மிகுந்த ஒரு சூழலில் பார்வையாளனைக் கொண்டு சென்று செருகியது. Futurist இயக்கம் இயந்திரப் பயன் பாட்டால் நிகழவிருக்கும் வருங்கால நன்மைகளென்று கணித்தவற்றில் மனித சக்தியின் மெத்தனம் என்பது நீக்கப்பட்டு மனித இனம் புதிய எல்லைகளை தொடும் என்பது முக்கியமானது.
ஓவியம் »
ஓவியர் கே.மாதவன் தமிழ்நாட்டின் மிக முக்கியமான சினிமா, நாடக பின்னதி, பேனர், பத்திரிகை, காலண்டர் ஆர்ட்டிஸ்ட். கே.மாதவன் பொங்கல் வாழ்த்து அட்டைகளின் வண்ண அழகும் தூரிகை வீச்சும், அனாயசமான அவரின் வேகமும், அலாதியான பாணியும், எவரையும் ஈர்க்கும். ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் அவருடைய படைப்புகள் மிகுதியாக வெளிவந்து ரசனைத் தன்மையையும் ஊட்டின.
ஓவியம் »
‘ப்லூம்ஸ்பரி’ இயக்கம் பெரும்பாலும் ஒரு குடும்பத்தையே சுற்றியிருந்தது. உறுப்பினர் பலரும் அக்குடும்பத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தனர். அவரவர் தேர்ந்தெடுத்தத் துறையில் பின்னர் அவர்கள் பெரும் புகழ் பெற்றாலும் தொடக்கத்தில் அங்கு நிலவிய உறவு என்பது சமுதாய ஒழுக்கங்களுக்கு ஒவ்வாததான, எப்போதும் கண்டனங்களுக்கு உட்பட்டதாகவே இருந்தது. ஓரினச் சேர்க்கையும், கட்டுப்பாடில்லாத படுக்கைப் பகிர்வும் அவர்களிடையே இயல்பானதாக இருந்தது.
ஓவியம் »
என்றாலும் காலப்போக்கில் இந்த இயக்கத்தில் கலைஞனின் படைப்புத் திறனுக்கு முக்கியத்துவம் கூடிவிட்டது. அதனால் பொருள்களின் விலை கூடி, பொது மக்களுக்காக என்னும் நோக்கம் அடிபட்டுப் போயிற்று. செல்வந்தர் மட்டுமே அவற்றை வாங்க முடிந்தது. கலைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து போயிற்று. அதன்பின்னர் இந்த இயக்கம் ‘ஏஸ்தடிக் ஸ்டைல்’ (Aesthetic style) என்னும் புதிய பெயருடன் தொடர்ந்தது. அவ்வமயம் பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பிரபலமாக இருந்த ‘ ஆர்ட் நோவோ’ (Art nouveau) என்னும் இயக்கத்துடன் அது பெரிதும் ஒத்துப் போயிற்று.
ஓவியம் »
ஓவியர்கள் தங்கள் ஓவியங்களில் உருவங்களைத் தத்ரூபமாக -இயற்கைக்கு வெகு அண்மையான நுணுக்கங்களுடன்- படைத்தனர். ஓவியங்களில் அனைத்துப் பொருட்களும் (உருவங்கள் / வடிவங்கள்) ஒரே விதமான அக்கறையுடனும், தெளிவுடனும் தீட்டப்பட்டன. முன்னர் ஓவியத்தின் கீழ்பகுதியில் பெரும்பாலும் உருவங்கள் நிழலில் தெரியும் தெளிவில்லாதவிதமாகவே படைக்கப்பட்டன. அதை மாற்றி அவற்றையும் தெளிவாகத் தெரியும் விதமாக ஒளிரும் வண்ணங்கள் கொண்டு அமைத்தனர்.
ஓவியம் »
முதலாம் உலகப் போருக்குப்பின்பு ஜெர்மன் நாட்டில் ‘ஓடொ டிக்ஸ்’, ‘ஜார்ஜ் க்ரோட்ஸ்’ (Otto Dix, George Grosz) என்ற இரு ஓவியர்களால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இதை எக்ஸ்ப்ரெஷன் (Experssion) பாணியின் போலி (Pseudo- Expressionist) என்று அடையாளப் படுத்தினர் அன்றையக் கலை திறனாய்வாளர். கடுமையான சமூக விமர்சனம், குறை கூறி வெறுக்கும் அணுகு முறை, தத்துவார்த்த நிலைப்பாடு, இவற்றுடன் தத்ரூபப் பாணி கலந்த ஒரு புதிய உத்தியாக அவர்கள் படைப்புகள் அமைந்தன. இந்த இயக்கத்தில் இரண்டு முக்கிய வழி அணுகல்கள் கவனம் பெற்றன.
ஓவியம் »
சமகாலக் கட்டிடக்கலை ஜெர்மனியில் 20ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ஒரு புதிய பொலிவைப் பெறத் தொடங்கியது. வைமா(ர்) (Weimar) நகரில் 1919இல் நிறுவப்பட்ட பாவ்ஹவ்ஸ் (Bauhaus) பள்ளியின் தாக்கம் வலுவானதாக இருந்தது. லூட்விக் மீஸ் வான் டெர் ரோஹ் (Ludwig Mies Van der Rohe) என்னும் கட்டிடக் கலைஞரின் வழிகாட்டுதலுடன் பள்ளியின் பாணி உலகின் மூலைகளுக்கும் பரவியது.
ஓவியம் »
1909 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் மூனிச் (Munich) நகரில் ‘புதிய கலைஞர் குழுமம்’ (New Artist Assiociation) என்னும் பெயரில் ஒரு ஓவியர் குழு தோன்றியது. ‘வாஸ்லி கண்டின்ஸ்கி’ (Wassily Kandinsky) என்னும் ஓவியர் அதற்குத் தலைவராய் இருந்தார். ஓவியர் ‘பால் க்லீ’ (Paul Klee) யும் அதில் ஒரு உறுப்பினர். அந்தக் குழுவின் இலட்சியம் வெறும் உணர்வு சார்ந்த கருப் பொருளை மையமாகக் கொண்ட ஓவியங்களைவிடவும் மற்ற தளங்களில் இயங்கும் விதமாகப் படைப்பதுதான்.
ஓவியம் »
1906 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தினர் ஓவியம் பற்றின தங்களின் நிலைப் பாட்டை ஒரு பிரகடனத்தின் மூலம் அறிவித்தனர். அதில் “கலப்படமற்ற படைப்புத் திறன் கூடிய, தெளிவும் நேர்மையும் கொண்ட எந்த ஒரு படைப்பாளியும் எங்கள் இயக்கத்தில் ஒருவர் என்றே கருதுகிறோம்.” என்று வலியுறுத்தினார்கள். வரையறுக்கப்படாத படைப்புத் திறன், ஆழ் மனதின் மர்மங்களை நேரிடையாக வெளிக் கொணரும் உத்தி, எந்தவொரு பாணியையும் பின்பற்றாத அணுகுமுறை ஆகியவை அவர்களது பொதுத்தன்மையாக இருந்தது.
ஓவியம் »
வடக்கு ஐரோப்பியப் பகுதிகளில் ‘பாஃவ்’ (Fauves) களின் வண்ண அணுகு முறை வெற்றியடைந்து புதிய உணர்வுகளாகவும், ஆழ்மன உளைச்சல்களாகவும் விரிவடைந்தன. எக்ஸ்ப்ரஷனிசம் (Expressionism) என்று பொதுவாக அறியப் பட்ட அது ஒரே காலகட்டத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் வளரத் தொடங்கியது. அந்தப் படைப்புகளில் வண்ணங்கள் குறியீடுகளாகவும், (Symbolic Colours) இயற்கைக்கு ஒவ்வாத கற்பனை உருவத் தோற்றங்களும் (Imagery) மேலோங்கி இருந்தன.
ஓவியம் »
1930 களில் ஐரோப்பிய நாடுகளில் வேற்று நாட்டுக் குடிமகன் என்பவனை அச்சத்துடன் வெறுக்கும் மனோபாவம் தோன்றி வளர்ந்தது. பிரான்ஸ் நாட்டிலும் பாரிஸ் பாணி ஓவியர்களிடம் முன்னர் காட்டப்பட்ட அன்பும், சகிப்புத் தன்மையும் மறைந்து போயிற்று. தங்கள் நாட்டின் கலை மரபைக் குலைக்கும் விதமாக அந்த ஓவியர்கள் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டனர். முன்னர் அவர்தம் படைப்புகளைப் போற்றி, உதவிகள் செய்தவர் இப்போது அவர்களிடமிருந்து விலகிச் சென்றனர்.
ஓவியம் »
இக்கலைஞர்கள் உலகை ஒரு பயன்பாட்டுப் பொருளாகவே நோக்கினர். அதிலிருந்து தமக்குத் தேவையான பகுதியைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமது படைப்புகளில் பொருத்தி ஓவியங்கள் தீட்டினர். வாழ்க்கை, கலை இரண்டையும் அருகருகே கொணரும் முயற்சிதான் அது. தங்களுக்குள் இருக்கும் தாம் சார்ந்த சிந்தனைகளை மீறி ‘ஒன்றிணைந்த சிந்தனை’ என்னும் குறிக்கோளை முன் நிறுத்தி வேற்றுமைகளிடையே ஒற்றுமை என்பதாக இயங்கினர். கலை விமர்சகர் ‘பியெர் ரெஸ்டனி’ இதை, “விளம்பரம், தொழில், நகரவாழ்க்கை கியவற்றின் கவிதுவம் கூடிய மீள் சுழற்சி” கூறினார்.
ஓவியம் »
எந்தக் கலையும் இரு பகுதிகளை உள்ளடக்கியது. ஒன்று, இணைத்தல் அல்லது கூட்டுதல்; மற்றது பிரித்தல் அல்லது கழித்தல். இதில் இணைந்த கலைஞர்கள் படைப்பை எளிமைப் படுத்துதல் என்னும் வகையில் இசை, ஓவியம், சிற்பம் போன்றவற்றில் புதிய உத்திகளைப் புகுத்தி நவீனப் படைப்பு களை அறிமுகப்படுத்தினர். கவிதையில் இடைவெளிகளைப் புகுத்தி வரிவடிவங் களை நீக்கி புதிய வடிவம் கொண்ட கவிதை படைப்பது என்று இப்பாணி வளர்ந்தது. அக்கவிதைகள் குழுவாகப் பாடப்பட்டன (Choral Groups). பின்னர், இப்படைப்புதளம் திரைப்படத் துறையிலும் நுழைந்தது.
ஓவியம் »
பெண்ணியவாதிகள் ஸர்ரியலிஸ இயக்கத்தைப் பற்றி விமர்சிக்கையில் அடிப்படையில் அது ஒரு ஆணாதிக்க சிந்தனை இழை ஓடிய இயக்கம் என்னும் எதிர் கருத்தை முன் வைத்தனர். ஸர்ரியலிஸ குழு உறுப்பினர்களும் மற்ற எல்லா ஆண்களையும் போலவே பெண்ணைத் தேவையற்றுப் போற்றுவதும், பெண்களை உடல்ரீதியாக அணுகுவதும், பெண் எப்போதும் ஆணின் காம உணர்வுடன் கூடிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஜீவன் என்பதாகத்தான் இயங்கினர், என்று கடுமையாகச் சாடியபோதிலும் இயக்கத்தில் சில பெண்கவிஞர்களும் பெண் ஓவியர்களும் இருக்கத்தான் செய்தனர்.
ஓவியம் »
க்யூபிசம் பாணியில் அறிவு ஜீவி பார்வை கூடிய, வண்ணங்கள் விலக்கப்பட்ட ஓவியங்கள்தான் படைக்கப்பட்டன. ஆனால் ஓர்ஃபிஸம் பாணியில் மிளிரும் வண்ணங்கள் கொண்ட விதத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. கவிதைக்கும் இசைக்கும் அதிபதியான ஆர்பியஸ் (Orpheus) என்னும் கிரேக்க புராண நாயகனிடம் ஈர்ப்புக் கொண்ட அவர்கள் தமது படைப்புகளில் அதன் அனுபவத்தைக் கொணர்ந்து, வரண்டு இருந்த க்யூபிசம் பாணியில் உயிரூட்ட முனைந்தனர்.




