முகப்பு » தொகுப்பு

புத்தக அறிமுகம் பகுதியில் பிற ஆக்கங்கள்

புத்தக அறிமுகம் »

மீட்பரிடம் தம்மை ஒப்புக்கொடுக்கும் ஆடுகள்

அவுட்டர் ஹார்னர் நாட்டின் ஜனாதிபதிக்கு ஏழு வயிறுகள், ஐந்து மீசைகள், இன்னர் ஹார்னர் நாடோ ஒரே ஒரு ஆள் மட்டும் நிற்கக்கூடிய அளவிற்கு சிறிய நாடு. என்னடா இது என்று நீங்கள் திடுக்கிட்டால் , நீங்கள் ஸாண்டர்ஸின் உலகிற்குப் புதியவராக இருப்பீர்கள். தயக்கமில்லாமல் இந்த உலகில் நீங்கள் நுழையலாம், நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத உருவகங்களாகவும், குறியீடுகளாகவும் விரியும் ஒரு அபத்தமான, ஆனால் அலாதியான உலகு அவர் விரிப்பது. அதே நேரம் நம் உலகிற்கும் நெருக்கமான, அதனாலேயே பீதியளிக்கும் உலகை அதில் நீங்கள் காண்பீர்கள்.

கட்டுரை, தத்துவம், புத்தக அறிமுகம், வரலாற்றாய்வு »

சமயங்கள், சமயமற்ற இந்துக்கள், சமயசார்பற்ற அரசுகள்

சமூக விஞ்ஞானியாகவும், சுதந்திரச் சிந்தனையாளராகவும், பண்பாட்டு ஆய்வாளராகவும் வகைமைப்படுத்தி நான் அறிந்திருந்த பாலகங்காதராவின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அவரை இந்துத்துவ சார்புச் சிந்தனையாளராகவும் நினைத்திருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை, அவர் செமிட்டிய சமயங்களையும் காலனியாதிக்கத்தையும் எதிர்மறை விமரிசனத்துக்கு உட்படுத்துக்கிறார் என்ற அளவில் அவரது சிந்தனைகள் இந்திய சிந்தனையை நவீன காலத்தோடு உரையாடும் சுதந்திர சிந்தனையாக மீட்டெடுக்க விரும்புவோருக்கு உதவலாம். மேற்குலகின் சமூக ஆய்வுத் துறைகளின் அணுகல்களின் அடிப்படைகள் பல நிலப்பகுதிகளின் சிந்தனையாளர்களாலும், மக்களாலும் விமர்சனம் செய்யப்பட்ட பின்னும், மறுபரிசீலனை செய்யப்படாது,‘உண்மைகளாக’க் கருதப்பட்டுப் பயன்படுத்தப்படும் முறைமையைக் கண்டனம் செய்வது கொஞ்சம் சாதகமான விஷயமாக இருக்கலாம். ஆனால் உலகின் அதுவரை சமயமற்றிருந்த பிற மக்கள் அனைவரையும் வெவ்வேறு சமயங்களாக செமிட்டியமும் அதன் வெளிப்பாடான காலனியாதிக்கமும்தான் திரட்டின என்று அவர் சொல்வது நிச்சயம் இந்துத்துவர்களுக்கோ, இந்திய சிந்தனையைப் புனருத்தாரணம் செய்ய விரும்புவோருக்கோ உதவாது. அதே சமயம், கருத்துலகில் முரணியக்கத்தை பாலகங்காதரா நிராகரிப்பது எதிர்பாராத ஒரு கொடையாக இருக்கலாம்.

புத்தக அறிமுகம் »

புத்தக அறிமுகம் - தலையணை மந்திரோபதேசம்

“இன்றிரவு சாப்பாடு நன்றாயில்லை! நாளை நானே நன்றாயில்லை என்பீர்கள்!! இப்பொழுது இந்த வீட்டில் உங்களுக்கு எதைப் பார்த்தாலும் நன்றாகப் புலப்படவில்லை! நான் நாளைப்போழுது விடிய வேண்டுமே என்று காத்துக் கொண்டிருக்கிறேன். என் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நான் வெளியே போய் விடுகிறேன். உங்களுக்கு யார் சமையல் செய்தால் நன்றாக இருக்குமோ அவர்களை அழைத்து வந்து ருசியாக சமையல் செய்யச் சொல்லி சுகமாக சாப்பிடுங்கள்”

புத்தக அறிமுகம் »

நூல் அறிமுகம் - வாழ்வு தரும் மரங்கள் - ஆர்.எஸ்.நாராயணன்

மரங்கள் குறித்த நூல் என்றால் ஏதோ நாம் பள்ளி, கல்லூரி காலங்களில் படித்த பாட்டனி பாட நூல்கள் போல கடினமாகவும் வறட்சியாகவும் இல்லாமல் மிகவும் சுவாரசியமான நடையில் ஒவ்வொரு மரம் குறித்தும் முழுமையான தகவல்களுடனும் ஏராளமான சுவாரசியமான உப தகவல்களுடனும் இந்த நூலை எழுதியுள்ளார். அரச மரம், ஆல மரம் துவங்கி கோங்கு மரம் வரையிலான 78 மரங்கள் குறித்தான முழு விபரங்கள் அடங்கிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே வாழ்வு தரும் மரங்கள்

புத்தக அறிமுகம் »

பனுவல் போற்றும் பனுவல் போற்றுதும்

ஏன் இன்னும் நாம் புத்தகங்களை கொண்டாட வேண்டும்? காரணம் மிக எளிதானதுதான். சினிமா, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என மீடியாக்கள் அனைத்தும் செய்திப்பகிர்வையும், பொழுதுபோக்கையுமே பிரதானமாகக் கொண்டு இயங்கிவருகின்றன. ஆக செய்திகள், அனுபவங்கள் மீதான தொடர் சிந்தனைகள், ஆய்வுகளை நிகழ்த்த நமக்கு இருப்பது புத்தகங்கள் மட்டுமே.

புத்தக அறிமுகம் »

பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா - இரு காந்தியர்கள்

பி.எஸ். ராமையாவின் சிறுகதைகளின் இலக்கியத்தரம் இன்று கேள்விக்குரிய ஒன்றாகக்கூட இல்லாத நிலையில், அவரது கதைகளைப் பற்றிய திறனாய்வுக்கு என்ன இடம் இருக்க முடியும்? ஒன்று, சி.சு. செல்லப்பாவின் கணிப்பு சரியானது என்று காலத்தால் மெய்ப்பிக்கப்படக்கூடும், அல்லது, செல்லப்பா தான் சரியென்று நினைத்த விஷயத்தை நிறுவுவதில் எத்தகைய அர்ப்பணிப்பு கொண்டவராக இருந்தார் என்பதற்கான இலக்கிய ஆவணமாக இது அமையக் கூடும். வாசகர்களும் விமரிசகர்களும் காலமும் மட்டுமல்ல, ராமையாவாலும்கூட கைவிடப்பட்ட கதைகள் இவை.

நேர்காணல், புத்தக அறிமுகம், மொழிபெயர்ப்பு »

குழந்தை மனம் : ஆலிசன் கோப்னிக் நேர்காணல்

குழந்தை உளவியல் பற்றி பல கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியிருக்கும் ஆலிசன், குழந்தைகளின் அகவுலகைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண முடியும் என்று வாதிடுகிறார். குழந்தைகள், சீர்திருத்தப் படவேண்டிய சிறிய மனிதர்கள் எனும் மேற்கத்திய பார்வை மாறிவரும் அதே நேரத்தில், குழந்தைகளை சிறிய தெய்வங்களாகக் கொண்டாடும் இந்திய மரபார்ந்த பார்வையும் சிதைந்துவிட்டதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.

ஆளுமை, புத்தக அறிமுகம் »

தரம்பால் எழுதிய ’காந்தியை அறிதல்’

‘காந்தியை அறிதல்’ எனும் தரம்பாலின் புத்தகத்தில் ஏழு கட்டுரைகள் உள்ளன. எப்படிப்பட்ட சுயராஜ்ஜியம் காந்தியின் லட்சியமாக இருந்தது? தொழில்நுட்பம் குறித்த எத்தகைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் காந்தியின் சிந்தனையின் அடிப்படையாக இருந்தன? காந்திய லட்சியம் எப்படிப்பட்டது? காந்தியின் வாழ்வு நமக்கு உணர்த்தும் படிப்பினைகள் எத்தகையவையாக இருக்கின்றன? எதிர்காலத்தில் காந்தியம் எவ்வகைப்பட்ட வளர்ச்சி காண்பதாக இருக்க முடியும்? இந்நூலில் காந்தியம் குறித்த பல முக்கியமான, அடிப்படை கேள்விகளை விவாதிக்கிறார் தரம்பால்.

ஆளுமை, புத்தக அறிமுகம் »

பகத்சிங்கின் மரணம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

பிரிட்டிஷ் அதிகாரிகளின் உதவியுடன் ‘ஆபரேஷன் ட்ரோஜான் ஹார்ஸ்’ என்னும் ரகசியத் திட்டம் வகுத்து சாண்டர்ஸின் உறவினர்கள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர் என்று அந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. பகத்சிங்கும் அவரது நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் கழுத்து மட்டும் முறிக்கப்படும் வரை தூக்கிலடப்பட்டு அரைமயக்கத்தில் இருந்தவர்களை இறந்துவிட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது.

புத்தக அறிமுகம் »

அகிம்சையின் வெற்றி

வன்முறையைத் தவிர்க்கும் அமைதிவழி எதிர்ப்புகள், குடிமக்கள் சமுதாயத்தின் எழுச்சிகள், ஒத்துழையாமை இயக்கங்கள் ஆகியன வரலாற்றில் என்ன பங்கு வகித்திருக்கின்றன, என்ன மாறுதல்களைக் கொணர்ந்திருக்கின்றன என்பனவெல்லாம் முறையான சோதனைக்கோ, ஆய்வுக்கோ ஆட்படுத்தப்படவில்லை. மாறாக ஆயுதப் புரட்சிகளெல்லாம் இறுதியில் வெல்கின்றன என்பது போன்ற ஒரு கருத்து சகஜமாக வன்முறை எழுச்சிகளையே அரசியலாகக் கொண்டவர்களிடமும் இருப்பதை நாம் எங்கும் காண்கிறோம். அது தற்செயல் இல்லை.

ஆளுமை, புத்தக அறிமுகம் »

ஆதவனுக்காக…

சாலையில் முதன் முறையாகச் சந்தித்துக் கொள்ளும் ஆணும் பெண்ணும், உரையாடுகிறார்கள். தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்குள்ளேயே ஒருவர் மற்றொருவரை எடை போடுகிறார்கள். ஒன்றாக நீந்துகிறார்கள். நடன விடுதிக்குச் செல்கிறார்கள். காமத்தைப் பற்றி எழுதுவதும் காமத்தை தூண்டுவதுபோல் எழுதுவதும் ஒன்றல்ல. ஆதவன் பின்னதைச் செய்யவில்லை.

புத்தக அறிமுகம் »

கூந்தப்பனை - வேர்களின் நீரூற்று

சு.வேணுகோபாலைக் குறித்து என் மனதில் ஆழப் பதிந்திருந்த எண்ணம் இதுதான்: சமகால எழுத்தாளர்களில் அவர் மட்டுமே காமத்தின் உக்கிர அனுபவத்தை முழுமையாகத் தன் எழுத்தில் வெளிப்படுத்துகிறார் என்று ஒரு நண்பர் கூறியிருந்தார். கூந்தப்பனையை வாசிக்கும்போதும், அது குறித்து சிந்திக்கும்போதும் காமத்தை மையமாகக் கொண்டே இதிலுள்ள கதைகளை வாசித்துப் புரிந்து கொண்டிருந்தேன். ஆனால், காமத்துக்கு அப்பால், அதன் அறம் குறித்த அக்கறையும் மனித ஆன்மாவின் மெய்ப்பாடு குறித்த கவலையும் சு.வேணுகோபாலின் எழுத்தின் உள்ளார்ந்த (ஆனால் நேரடியாகப் பேசப்படாத) உணர்வாக இருக்கிறது என்று அறிகிறேன். [...] இத்தொகுப்பில் உள்ள கதைகளை நீதிக் கதைகள் என்று சொல்ல முடியாது என்றாலும், இவற்றின் அடிப்படையில் உள்ள நீதி விசாரணையே இவற்றை இலக்கியமாக்குகிறது என்று நினைக்கிறேன். பிரபஞ்ச நியதியை மனித வாழ்வோடு பிணைக்கும் எழுத்து அபூர்வமாகவே காணக் கிடைக்கிறது. சு.வேணுகோபாலின் கூந்தப்பனை, அதன் அத்தனை குறைகளோடும், இன்றைய காலகட்டத்தில் அவ்வகைப்பட்ட எழுத்தின் உயர்ந்த சாத்தியங்களைத் தொடுகிறது என்று சொல்லலாம்.

புத்தக அறிமுகம் »

ஒரு மகாராணியின் நினைவுக் குறிப்புகள்

மகாராணியும், அவர் குடும்பமும் வருடத்தின் பாதியை ஐரோப்பாவில் கழிக்கின்றனர். அவர்களது பேச்சுகள் முழுக்க Bentley கார்களும், சூதாட்ட விடுதிகளும், விருந்தினர்களுக்கான முடிவிலா கேளிக்கைகளும் நிறைந்திருக்கின்றன. ஐரோப்பாவில் அவர்களுக்கென்று விருந்தினர்கள் யாரும் இல்லாதபோது இந்தியாவிற்குத் திரும்பி இங்குள்ள விருந்தினர்களை உபசரிக்கின்றனர். தனி விமானத்திலோ அல்லது தங்களுக்கென்றே பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட P&O நிறுவனத்தின் கப்பலிலோ பயணிக்கின்றனர். இந்த களேபரங்களுக்கிடையே தங்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ள அவர்களுக்கு எப்படி நேரமிருந்திருக்கும்?

புத்தக அறிமுகம் »

முறுக்கேறும் உண்மைகள் - அகலிகை எதிர்கொள்ளும் உருக்குலைவும் உறைநிலையும்

கல்லிகையில் கௌதமரை சமயமாகவும் இந்திரனை முதலாளித்துவமாகவும் உருவகித்திருக்கிறார் ஞானி. அகலிகை உழைக்கும் வர்க்கத்தின் உருவகமாக இருக்கிறாள். இந்த உருவகத் தன்மைகளுக்கு ஏற்றபடி ஞானியின் அகலிகை பகலில் கௌதமருக்கு மனைவியாகவும் இரவில் இந்திரனின் காதலியாகவும் இருக்கிறாள். கௌதமரிடம் கிடைக்காத இன்பத்தை இந்திரனிடம் பெற்றுக் கொள்கிறாள் அவள்.

அரசியல், புத்தக அறிமுகம் »

இந்தியத் துண்டாட்டம் : உட்பகைகளின் அந்நிய வேர்கள்

ஒரு நாட்டின் வரலாற்றை ஆராயத் தேவையான கோட்பாடுகளை வழங்குவதன் மூலமும், அந்த ஆய்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும், அந்த ஆய்வு முடிவுகளை தகுந்த பிரச்சார அமைப்புகள் மூலமாக உலகரங்கில் முன்வைப்பதின் மூலமுமே தனக்கான ஆதாயங்களை மேற்குலகால் இன்று பெற்றுவிட முடியும். இந்த வகையில், ஒரு நாட்டின் வரலாறும், கலாச்சாரமும், மதமும் அந்நாட்டின் நலனுக்கு எதிராக உபயோகப்படுத்தக்கூடிய ஆயுதமாக ஆகின்றன. ஆக ஒரு நாட்டைக் கட்டுப்படுத்த போர், பொருளாதாரம் ஆகிய பழைய காலனிய கருவிகளைத் தாண்டிய ஒரு கருவி தற்போது மேற்கத்திய நாடுகளின் கையில். அது, பண்பாட்டு ஆய்வுகள்.