முகப்பு » தொகுப்பு

பயணக்கட்டுரை பகுதியில் பிற ஆக்கங்கள்

பயணக்கட்டுரை »

நியூஸிலாந்து - மவுரிகள் என்னும் முன்னோடிகள் - 3

மவுரியின் கிராமம் அல்லது குடியிருப்பு ‘பா’(Pa) எனப்படும். ‘பா’ பெரும்பாலும் குன்றின் உச்சியில் இருக்கும். அங்கிருந்து அடிவாரத்தில் உள்ளோர் நடமாட்டத்தைக் காணும்படியாக இருக்கும். ‘பா’வைச் சுற்றிலும் வேலி போடப்பட்டு இருக்கும். அதைச்சுற்றி அகழி வெட்டப்பட்டிருக்கும். பகைவர் நடமாட்டத்தை அறிய உயர்ந்த பரணும் மறைவாக அமைக்கப்பட்டிருக்கும்.

பயணக்கட்டுரை »

நியூஸிலாந்து - மவுரிகள் என்னும் முன்னோடிகள் - 2

துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் அறிமுகம் ஆகுமுன் மவுரி நீண்ட தடிகளையும் குறுந்தடிகளையும்(Clubs) போராயுதங்களாகப் பயன்படுத்தினான். மரத்தாலும் பச்சைக் கற்களாலும் (Jade) ஆன இந்த ஆயுதங்கள் ஆபத்தில்லாதவை போலத் தோன்றினாலும், மவுரியின் கைகளில் பயங்கரமாகச் செயல்பட்டன. வில், அம்பு மவுரி அறியாதவை. வில்லம்புகளுக்கு உரிய மூலப்பொருள்க்ள் இங்குக் கிடைப்பனவாக இருந்தும் இந்தப் போர்க்கருவியைப் பற்றி மவுரி அறியாது இருந்தது கவனிக்கத் தக்கது.

பயணக்கட்டுரை »

நியூஸிலாந்து - மவுரிகள் என்னும் முன்னோடிகள்

சிலசமயங்களில், கப்பல்கரையில் நின்றுகொண்டிருக்கும்போது, காட்டிலும் கரையிலும் வேட்டையாடிக் கொண்டிருந்த மாலும்கள் மவுரிப் பெண்களோடு தற்காலிகக் குடும்பம் நடத்துவதும் உண்டு. இத்தகைய உறவுகளால் கலப்பினக் குழந்தைகள் பிறந்தன. கப்பல் கரைகளை விட்டுத் தத்தம் நாட்டுக்குத் திரும்பியபோது, குழந்தைகளின் தந்தையரும் போய்விட்டனர். குழந்தைகள் மவுரித் தாய்மார்களிடம் மவுரிகளாகவே வளர்ந்தனர். மவுரிகளின் சமூக அமைப்பும் (Tribal Organaisation) மவுரிப் பெண்ணுக்கு இருந்த சில உரிமைகளும் கலப்பினக் குழந்தைகள் தந்தையின்றியும் வாழ வசதி அளித்தன.