முகப்பு » தொகுப்பு

ஆளுமை பகுதியில் பிற ஆக்கங்கள்

ஆளுமை, இலக்கியம் »

சி சு செல்லப்பா - தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு - நிறைவுப் பகுதி.

வேடிக்கையாகத் தான் இருக்கிறது. இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன? இருப்பார்கள் தான் - அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை காந்தி பக்தராகவே இருந்ததும் தவிர அவர் வாழ நினைத்தது ஒரு எழுத்தாளராக. எழுத்தாளராக வாழ்வது சாத்தியமாகத்தான் அவர் சென்னைக்கு வந்ததும். அவர் பழகியதும் உடன் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்ததும் எழுத்தாளர்களோடு தான். சிறு கதைகள் அவர் மனத்தை ஆக்கிரமித்திருந்தன. க.நா.சு. அந்த காலகட்டத்தில் விமர்சனத்தின் தேவையை வலியுறுத்திப் பேசி வந்த காலத்தில் எல்லாம் அவர் பிச்ச மூர்த்தி போல், இன்னும் மற்ற சக எழுத்தாளர்கள் போல் அதை ஏற்க மறுத்தே வந்திருக்கிறார். க.நா.சு. குளவியாகக் கொட்டிக் கொட்டித் தான் செல்லப்பாவும் குளவியானார்.

ஆளுமை, இலக்கியம் »

‘லா.ச.ரா’ - எஸ்.ரங்கராஜன்

இன்னா செய்தாரை என்னவோ செய்தல் பற்றி ஒருத்தர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ராமாமிருதத்தின் கவனம் எங்களிடமிருந்து மெதுவாக நழுவுகிறது. எங்கள் கோஷ்டியில் சேர்ந்துகொண்ட நண்பரின் 5 வயது பெண்ணை அடர்த்தியான புருவங்களின் நிழலில் இருக்கும் தன் சௌகர்யமான பூனைக் கண்களால் பார்க்கிறார். “அவரை வரைவது சுலபம் என்று நினைக்கிறேன். She seems to be all lines”.

ஆளுமை »

சுப்பையாவின் மருமகன்

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்ததிலிருந்தே சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா மடைதிறந்த வெள்ளமாக, தேவாரமும், திருவாசகமுமாகப் பாடி வந்தார். இடையிடையே கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் வேறு. மரபின் மைந்தன் பாடிய ஒவ்வொரு பாடலும் எனக்கும் தெரியும் என்பதாகக் காட்டிக் கொள்வதற்கு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. சில இடங்களில் கண்மூடி பக்தியில் மூழ்கிக் கிடப்பதான பாவனையில் சமாளித்தேன். உடன் வந்த ‘இசைக்கவி’ ரமணன் அவர்கள் ஒருபடி மேலே போய், மரபின் மைந்தனின் குரலுக்கு வாயசைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்.

ஆளுமை, இலக்கியம் »

சி.சு.செல்லப்பா - தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு - பகுதி 9

அவர் படித்த காலத்திலிருந்து புயலாக வீசிய விடுதலைப் போராட்டத்தில் அவரைச் சுற்றிய எல்லோரும், அதில் கலந்து கொண்டவர்கள். அவரும் தான். படிப்பை விட்டு சிறை சென்றவர். அந்த உணர்வு, காலமும் வெளியே நாட்டு மக்களும் மறந்தாலும், அவரிடம் நான் பார்த்த எண்பதுக்களிலும் கூட அவரிடம் உயிர்ப்புக்கொண்டிருந்தது. வெளியே ஓட்டு கேட்டு போகும் ஊர்வலத்தைப் பார்த்ததும் தன் வீட்டு நடை பாதையிலிருந்தே,” என் வோட்டு உங்களுக்குத் தான்” என்று உற்சாகத்தோடு சத்தம் போட்டுச் சொன்னதை நான் உடன் இருந்து பார்த்தவன். எனக்கு அப்போது கொஞ்சம் அதீதமாகத் தான் பட்டது. செல்லப்பாவின் அந்த ஆளுமை அதீதம் என்று தான் சொல்ல வேண்டும்.

அனுபவம், ஆளுமை »

விருந்தோம்பல்

பேராசிரியர் சாப்பிட்டு விட்டு வந்து, தாம்பூலம் தரிக்க ஏற்பாடு செய்தார். தான் எழுதிய புத்தகங்களை எடுத்து வந்து கையெழுத்திட்டு எங்களுக்குக் கொடுத்தார். எனக்குக் கொடுக்கும் போது மட்டும், அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. காரணம், ஏற்கனவே எனது ’தாயார் சன்னதி’ புத்தகத்தை அவருக்கு நான் கொடுத்திருந்தேன். பழிக்குப் பழி வாங்கிவிட்ட திருப்தி, பேராசிரியரின் முகத்தில் தெரிந்தது. ‘இனி நீங்க தப்பிக்க முடியாது’ என்றார். ‘ஏன்? அதான் குடுத்துட்டீங்களே! எப்படியும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருவேன். நம்புங்க’ என்றேன். ‘அதெல்லாம் அவ்வளவு லேசுல தட்டிக்களிச்சுர முடியாது. ரெண்டு நாளைக்கு ஒருக்க ஃபோன் பண்ணி அந்தந்த புஸ்தகத்துல இருந்து கேள்வி கேப்பேன்’ என்றார்

ஆளுமை, இலக்கியம் »

சி. சு. செல்லப்பா - தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு- பகுதி 8

வத்தலக்குண்டுக்கு அழிந்த சரித்திரம் இன்னும் பல உண்டு. அவற்றையெல்லாம் தான் சுதந்திரப் போராட்டத்தின் போது வாழ்ந்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் அவர் நினைவு கொள்கிறார் சுதந்திர தாகம் நாவலில். அவர் நினைவு கொள்ளும் அந்த மனிதர்களும் இல்லை. அந்த சூழலும் இல்லை. வத்தலக் குண்டும் அந்த பழைய பிள்ளைப் பிராய வத்தலக்குண்டு இல்லை.

ஆளுமை »

பிரமீள்- மேதையின் குழந்தைமை

விமர்சனத்தை ஒரு கலை வடிவாக அமைத்தவர் பிருமீள். அழகியல் ரீதியிலான அனுபவத்தை சொல்லும் ஒரு தோரணையாக விமர்சனத்தை மாற்றினார். சுயமான விமர்சனச் சித்தாந்தத்தை உருவாக்கிக் கொடுத்தார்.

அஞ்சலி, ஆளுமை, இசை »

சீனா குட்டி

சுத்த தன்யாஸி வர்ணம் அறை நிரம்பி ஓய்ந்த போது, “இது மிருதங்க கலைஞர் அமைத்த பாட்டா”, என்று ஆச்சர்யப்பட்டேன். ஒரு வாய்ப்பாட்டுக்காரரோ, வயலின் கலைஞரோ கடினமான கணக்குகளை உபயோகித்து பாடல்களை புனைந்தால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு மிருதங்க கலைஞர் கணக்கு வழக்குகளை பின்னுக்குத் தள்ளி ராக பாவம் சொட்டச் சொட்ட பாடல்களைப் புனைந்திருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

ஆளுமை, இலக்கியம் »

சி.சு.செல்லப்பா - தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு - பகுதி 7

என் அனுபவத்தில் எத்தனையோ வேறுபட்ட செல்லப்பாக்களைப் பார்த்திருக்கிறேன். முதல் முறையாக தன் நேர்ப்பார்வையிலும் சிக்கனமாகவும் அதோடு எந்த வித ஆடம்பர அருவருப்புகளும் அற்ற எளிமையும் நல்ல கட்டமைப்பும் கொண்ட புத்தகங்களை எழுத்து பிரசுரமாக அறிமுகப்படுத்தியது. அந்த நாட்களில் எழுத்து பிரசுர புத்தகங்கள் எளிமைக்கு நேர்த்திக்கும் ஒரு எடுத்துக்காட்டு.

ஆளுமை, இசை »

எஸ்.ஜானகி - பத்மபூஷன் இழந்த கெளரவம்

ஜானகி பாடிய பல்வேறு முக்கிய பாடல்களை/ ஒவ்வொருத்தரின் தனி விருப்பபாடல்களை நான் சொல்லாமலே விட்டிருக்கிறேன். காரணம் ஜானகி என்பவர் ஒரு சகாப்தம்/ சரித்திரம் என்றெல்லாம் மார்பு தட்டுவதோ அல்லது அவரின் வாழ்க்கை/தொழில் வரலாற்றை அலசி ஆராய்வதோ இது வரை வாங்கிய விருதுகளை பட்டியலிடுவதோ இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்தியாவின் இரண்டாவது பெரிய கௌரவத்தை புறக்கணிக்கும் அளவிற்கு அவருக்கு இருக்கும் நேர்மையான நிலைப்பாட்டை அங்கீகரிப்பது மட்டுமே.

ஆளுமை, கலை, விவரணப்படம் »

சகல கலா ஆசார்யர் - வித்வான் எஸ்.ராஜம் ஆவணப்படம்

எஸ்.ராஜம் கர்னாடக சங்கீதத்தின் ஒப்பற்ற கலைஞர், ஓவியர், சங்கீதக் களஞ்சியம் என பல முகங்கள் கொண்டவர் என்றாலும், நமது பாரம்பரியக் கலையின் கடைசி ஆன்மா என அவரது ஆவணப் படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது. கலையின் அணையாத கங்கு கலைஞர்களின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டில் அடங்கியுள்ளது. அது என்றும் நீடித்திருக்கும் பெரும் தீ. காலகாலத்துக்கும் கலையின் எண்ணிலடங்கா முகங்களை உயிர்ப்போடு வைத்திருப்பது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம்.

அனுபவம், ஆளுமை, இலக்கிய விமர்சனம் »

சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார  நிகழ்வு - பகுதி 6

செல்லப்பா எழுத்துக்கு வகுத்துள்ள எல்லைக்கோட்டுக்குள் நான் எழுத ஆரம்பித்த எந்த கட்டுரையும், எல்லாக் கலைகளையும், இலக்கியத்தை பாதிக்கும் அறிவுத்துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பார்வை, எதையும் தனித்துப் பார்க்க இயலாது என்ற பார்வை, ஒன்றின் வறட்சியோ, வளமோ தனித்து எந்தத் துறையிலும் வரம்பு கட்டிக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்பது போன்ற அணுகுமுறை எல்லாமே எழுத்து பத்திரிகைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதை செல்லப்பா வரவேற்றார்.

அனுபவம், ஆளுமை »

க.நா.சு.வும் சி.ஐ.ஏ.வும்

(க.நா.சு.)உலக இலக்கியவாதிகளை தமிழ்நாட்டில் உலவவிட்டவர். நாங்கள் அவருடைய உலக இலக்கிய வரிசை நூல்களைத் தேடித்தேடிப் போட்டிபோட்டுக் கொண்டு படித்தோம். (உபயம் – கோணங்கி). மிகப் பரந்த வாசிப்பும், மிகச் சிறந்த ரசனையும் கொண்ட, இலக்கியத்துக்காகவே வாழ்ந்து தீர்த்த க.நா.சு.வை இங்ஙனம் செய்யும்படி எது இயக்கியது? கடைசி காலம் வரை அவருடைய ஒரே துணையான அந்த டைப்ரைட்டர் அவரிடம் என்ன சொல்லியிருக்கும்? தன்னை விளம்பரப்படுத்தும் கலைநுட்பம் மலிந்த இன்றைய இலக்கிய உலகில் அவருடைய படைப்புகளின் மதிப்பீடு என்ன? காற்றில் அலையும் கேள்விகள்!

ஆளுமை, தொழில்நுட்பம் »

காட்டோடைகளும் கங்காணிகளும்

என் மகனுக்கு, ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பெரும் சூப்பர் ஸ்டார். எனவே அவன் பிறந்த நாளுக்கு, வால்டர் ஐசக்ஸன் எழுதிய ஸ்டீவ் ஜாப்சின் சரிதத்தை வாங்கிப் பரிசளித்தேன். அதன் தடிமனைப் பார்த்ததும், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆக வேண்டுமென்ற ஆசையையே விட்டு விட்டான். எனவே, வாங்கி விட்ட பாவத்துக்குப் படிக்கத் துவங்கினேன். ஆனால், அது ஜெயமோகன யட்சி போலப் பிடித்துக் கொள்ளும் என்று அப்போது தெரியவில்லை.

அனுபவம், ஆளுமை, இலக்கிய விமர்சனம், இலக்கியம் »

சி.சு.செல்லப்பா - தமிழகம் உணராத வாமனாவதாரம் - பகுதி 5

இந்த சூழல் மாற்றமெல்லாம் 12 ஆண்டுகள் விடாப்பிடியாக சில நூறு பிரதிகளுக்குள் சுருங்கி விட்ட ஒரு எளிமையிலும் எளிய முன்னுதாரணம் ஏதுமற்ற ஒரு பத்திரிகையின் விளைச்சல்கள். அது கொணர்ந்த மாற்றங்கள். இன்று மரபுக் கவிதை சென்ற இடம் தெரியவில்லை. இன்று மரபுக் கவிதையை கருணாநிதியும் மறந்தாயிற்று. வைரமுத்து, அப்துல் ரஹ்மான், கனிமொழி எல்லாருமே மறந்தாயிற்று.