முகப்பு » தொகுப்பு

பன்னாட்டு உறவுகள் பகுதியில் பிற ஆக்கங்கள்

உலக அரசியல், பன்னாட்டு உறவுகள் »

சீறும் சீனத்து டிராகன்

சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் வரை சென்று தாக்கும் திறனுள்ள சீனாவின் இந்த குறிப்பிட்ட ஏவுகணை சற்று மாறுபட்டது. இதில் அணுகுண்டிற்கு பதிலாக கடலில் உலாவும் விமானந்தாங்கிகளை துல்லியமாகத் தேடி அழிக்கும் திறன் படைத்த குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. யாருமே யோசிக்காத மிகவும் சிக்கலான இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்டு இந்தப் புதியவகை ஏவுகணையை உருவாக்கியதன் மூலம் கடற்போரின் அடிப்படைகளையே சீனா மாற்றிவிட்டதாக கடற்போர் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

உலக அரசியல், தீவிரவாதம், பன்னாட்டு உறவுகள் »

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் - 2

எந்த பாகிஸ்தான் மக்களின் நலனுக்காக அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் தானமாக வழங்கி வருகிறதோ, எந்த பாகிஸ்தானின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கி வருகிறதோ, அதே பாகிஸ்தான் ஒருபுறம் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை வாங்கி முழுங்கிவிட்டு, யாரைப் பிடிப்பதற்காக அமெரிக்கா அந்த நிதியை வழங்கியதோ அதே பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தானம் கொடுத்த அமெரிக்காவின் அடி மடியிலேயே கை வைக்கிறது என்பதுதான் அமெரிக்க அரசின் பல்வேறு அமைப்புகள் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்த உண்மைகள்.

உலக அரசியல், பன்னாட்டு உறவுகள் »

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ்

ஜூலை 25ல் இருந்து விக்கி லீக்ஸ் என்ற பெயரே இணையத்தில் அதிக அளவு தேடப் பட்ட ஒரு சொல்லாக, அமெரிக்க தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் அனைத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு பெயராக இருந்தது. அதே வேகத்தில் ஒரு வார காலத்திற்குள்ளாகவே அந்தப் பெயர் மீடியாக்களின் கவனத்தில் இருந்து திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டும் விட்டது. ‘விக்கி லீக்’ யார், அவர்கள் எதை வெளியிட்டார்கள்? ஏன் வெளியிட்டார்கள்? அமெரிக்காவில் அதன் தாக்கம் என்ன? இந்தியாவுக்கு அந்தக் கசிவினால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன? அதன் முக்கியத்துவம் ஏன் அமெரிக்க அரசால் அமுக்கப் படுகிறது?

அரசியல், பன்னாட்டு உறவுகள் »

பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமா?

பாகிஸ்தான் ராணுவத்தின் இலக்கு என்ன? இலக்கற்ற இலக்கு அது. இந்தியாமீது வன்மம்; அவ்வளவுதான். ஐ.எஸ்.ஐயின் இலக்கு? இந்தியா பற்றி எரியவேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களின் நோக்கம் என்ன? இந்தியா உலகில் எந்தவிதத்திலும் முன்னேறிவிடக் கூடாது. மும்பை 26/11 போல மேலும் பல அநியாயங்களை ஜிஹாத் என்ற பெயரில் செய்யவேண்டும். இப்படி எண்ணற்ற இலக்குகள் இருக்கும்போது குரேஷி என்ன செய்வார்? எந்தப் பேச்சுவார்த்தை நடந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாதவகையில் இழுத்தடிப்பது மட்டும்தான் அவர்களது நோக்கமாக இருக்கும்.

உலக வரலாறு, ஜனநாயக இயக்கங்கள், பன்னாட்டு உறவுகள் »

துயரில் விளைந்த ஜனநாயகம் - போலந்து

சென்ற வார இறுதியில் - சனிக்கிழமையன்று, போலந்து நாட்டின் அதிபர் லெஹ் கசின்ஸ்கியும், அவருடன் சுமார் 95 போலிஷ் தலைவர்களும், பல முக்கியஸ்தர்களும் பயணித்த ஒரு விமானம் ரஷ்யாவில் ஒரு விமானதளத்தில் இறங்க முயற்சித்தபோது ஏற்பட்ட விபத்தில் இறந்தார்கள். போலந்தின் தற்போதைய அரசின் பல முக்கிய தலைவர்கள் இதில் இறந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த போலிஷ் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா ஏதோ சதி செய்து தம் அதிபரைக் கொன்றதாகப் போலிஷ் மக்கள் கருதுகின்றனர் எனத் தெரிகிறது. இது குறித்து மாஸ்கோ டைம்ஸ் என்கிற ரஷ்யப் பத்திரிகையே கூட ரஷ்ய அரசு ஏதோ சதி செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டு, அந்த சம்பவம் திறந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்று சொல்கிறது.

போலந்தில் சமீபத்தில் ஷேல் எனப்படும் மண்ணடுக்குகளில் எரிவாயு கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. யூரோப்பின் எரிவாயுச் சப்ளை மீது ரஷ்யாவுக்கு இன்று இருக்கும் இரும்புப்பிடி பயனற்றுப் போய்விடும்.

அரசியல், பன்னாட்டு உறவுகள் »

…மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி

காகிதங்களை நீட்டிய போதெல்லாம் கையெழுத்திடுவது நடிக/நடிகைகளுக்கு அழகு. ஆனால் பிரதமருக்கு அது அழகல்ல. கடந்த சில தினங்களில் உலக நாடுகள் நீட்டிய அனைத்து காகிதங்களிலும் நமது பிரதமர் கையெழுத்திட்டுள்ளார். ”அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? நாட்டின் எதிர்காலத்தை எந்த அளவிற்கு அது பாதிக்கும்? இந்தியாவின் வளர்ச்சியை இது எவ்வகையில் பாதிக்கும்?”, என்ற எந்த பிரக்ஞையும் அவரை உறுத்தியதாகத் தெரியவில்லை.

அரசியல், பன்னாட்டு உறவுகள், மொழிபெயர்ப்பு »

சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி?

பிரிவினை மற்றும் உரிமை கோரலுக்கான பொறி எந்தப் பகுதியிலாவது தோன்றினால், அதைச் சமாளிப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் வழிமுறை ஒன்றே தான் - கோரிக்கையாளர்களைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்குவது, தொடர்ந்து தாக்கி ஒடுக்குவது. உறுதியுடன் தாக்கி ஒடுக்குவது. திபெத்தில் அவர்கள் செய்வதைப் போல.

அரசியல், பன்னாட்டு உறவுகள், பொருளாதாரம், மொழிபெயர்ப்பு »

பேரரசின் தொலைந்த தொடுவானங்கள்

மத்திய அரசுடைய நிதிப்பற்றாக்குறை நாட்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைச் சமாளிக்க வேகம் வேகமாக அரசுடைய கடன் பத்திரங்களையும், பண நோட்டுகளையும் அச்சடித்துத் தள்ளுவார்கள். இதனால் ஏற்படும் பணவீக்கம் சமூகத்தைக் குதறி எடுத்து விடும். கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக விற்ற பொருள் என்ன தெரியுமா? கைத்துப்பாக்கிகளும், ரைஃபிள்களும்தான்.