பொருளாதாரம் பகுதியில் பிற ஆக்கங்கள்
நேர்காணல், பொருளாதாரம், மொழிபெயர்ப்பு »
எண்ணை விலை (ஒரு பேரல் விலை டாலர்களில்) மூன்றிலக்கமாகும் போது, உலகமயமாக்கலுக்குப் பின்னடைவு ஏற்படும். அது உள்ளூர்ப் பொருளாதாரங்கள் மறுமலர்ச்சி அடைய வழி வகுக்கும். நாம் எதிர்கொள்ளப் போகிற உலகில், தூரம் விலையேற்றத்தை ஏற்படுத்தும். குறைவான ஊதியம் ஏற்கும் உழைப்பாளர் கிடைப்பதால், சீனாவில் உற்பத்தி செய்து, அந்த சரக்குகளை மேற்கு ஐரோப்பாவிற்கோ அல்லது வட அமெரிக்காவுக்கோ ஏற்றுமதி செய்வது பல சமயங்களில் விவேகமான செய்கையாக இருக்காது. சரியாகச் சொன்னால், உழைப்பின் விலையால் நீங்கள் சேமித்ததை விட அதிக தொகையை போக்குவரவில் இழந்திருப்பீர்கள்.
கட்டுரை, சமூக அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் »
நம்மை சுற்றிக் காணப்படும் எல்லா பொருட்களும் ஏதோ ஒரு தனி வடிவமைப்பாளரின் அல்லது வடிவமைப்புக் குழுவின் கற்பனையில்தான் முதலில் உருவாக்கப்பட்டவை. இயந்திர வழி உற்பத்தியின் காலத்திற்கு முன்னால் வடிவமைப்பாளனே ஒரு பொருளை உருவாக்கினான். இயந்திர உற்பத்தியின் அறிமுகத்திற்கு பின் வடிவமைப்பாளனின் பொறுப்பு மாதிரிகளை உருவாக்குவதில்தான் கோரப்பட்டது.
பொருளாதாரம் »
உற்பத்தி இல்லாமல் லாபம் மட்டும் வருகிறதென்றால் எங்கோ யாரோ நட்டப்படுகிறார் என்பது எளியமொழி. உண்மைதான் 1971ல் 200ரூபாய்க்கு விற்ற தங்கம் 2011ல் 25000ரூபாய்க்கு உயர்ந்துள்ளது என்றால் நாற்பது ஆண்டுகள் 125 மடங்கு லாபம் என்று பொதுபுத்தியில் எட்டலாம். ஆனால் 1981ல் 10000 ரூபாய் முதலீட்டில் ஒரு நிறுவனம் 2011ல் 7 பில்லியன் டாலர் மதிப்புடையதாகிறது(இன்ஃபோசிஸ்) என்றால் காரணம் முதலீடு உழைப்பு சார்ந்த, உற்பத்தி சார்ந்த துறையில் அமைந்துள்ளதே காரணம். மாறாக 10000 ரூபாயை 1981ல் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் அதிகபட்சம் 3ஆயிரம் டாலர் 2011ல் கிடைத்திருக்கும். அந்த உற்பத்தி மூலம் எத்தனை பேர் வருமானம் ஈட்டிருப்பார்கள்? அரசுக்கு எத்தகைய லாபம்? என்று யோசித்தால் இது எவ்வளவு பெரிய நட்டம் என்பது புலப்படும்.
சமூகம், பொருளாதாரம் »
ஒரு முறை தன்னிடம் இருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களைக் கொடுப்பதென்று தீர்மானித்து விட்ட இந்த வங்கிகள், இதர நாடுகளின் அரசுகள் இத்தகைய கணக்குகளைப் பற்றிய தகவல் சேகரிக்க முனைந்தால் தருவதாக உறுதி கொடுத்திருக்கின்றன. ஒரு நாடு மட்டும் இந்தக் கணக்குகளைப் பற்றிச் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அது எந்த நாடு என்று யோசியுங்கள்!! ஆம், அது இந்தியாதான்.
பொருளாதாரம் »
நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் விளம்பரப் படுத்தி, சிகரெட் வியாபாரத்தில் கொண்டிருந்த வலிமையை உபயோகித்து, பொருளை எளிதாகச் சந்தைப் படுத்தவும் செய்தது. கார்ட் வீல் பல்டி அடித்து வந்து அன்னையைத் தழுவிக்கொள்ளும் குட்டிப் பையன் விளம்பரம் அன்று மிகப் பிரபலம். 90களின் இறுதியில், ஐ.டிஸி, எண்ணெய்த் தொழிலை, கான் அக்ரா என்னும் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றது. ஏன்?
அனுபவம், பொருளாதாரம் »
குப்புற விழுந்து, மூஞ்சியும் முகரையும் பெயர்ந்த பின்பு, அந்நிறுவனம், தொலைபேசிக் கட்டணம், ஒரு தபால் கார்டை விட மலிவானதாக இருக்க வேண்டுமென்று எங்கப்பாரு சொன்னாருன்னு ஒரு புதுக் கதை சொன்னது.. நுகர்வோருக்கான மாபெரும் சலுகை என்று அலைபேசிக் கருவிகளை ஐந்நூறு ரூபாய்க்குத் தந்தது.. பல ஆயிரம் கோடிகள் நஷ்டம்……தேவைப் பட்டால், விதிமுறைகளையும் அரசாங்கங்களையும் மாற்றும் வல்லமை படைத்தவர்கள். ஆனால், பாவம் பத்து ரூபாய் ப்ரீபெய்ட் வாங்கும் ஒரு சாதாரண நுகர்வோரை வீழ்த்த முடியாமல் போயிற்று.
அனுபவம், பொருளாதாரம் »
ஒரு ப்ரசெண்டேஷனுக்கு ஆறு கோடியா? சொக்கா என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த 45 நாட்களுக்குள் 1000 டன்னையும் வாங்கி ஒரு பெரிய எண்ணெய் டாங்கில் சேமித்துவைத்தோம். மே மாதம் துவங்கி, ஊர் எல்லை மைல்கல்லில் காத்திருக்கும் பாரதிராஜாவின் கதாநாயகி போல் ஓணம் வரக் காத்திருந்தேன். ஓணம் முடிந்தபின் விலைகள் எகிறும் என்பதே எங்கள் தாரக மந்திரம். 60 ஆண்டுகளின் புள்ளிவிவரம் எங்களுக்குச் சொன்னது அஃதே. ஓணம் வரை விலை 60லிருந்து 63க்கு எழுந்தது. எங்களுக்கு லேசான பெருமிதம். நாங்க யாரு?
பொருளாதாரம் »
முதலில் ஹாட்மெயில், பிறகு யாஹூ மற்றும் ஜிமெயில் மின்னஞ்சல் வந்து இன்று பல கோடி மக்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வியாபார சம்மந்தப்பட்ட செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பல கோடி மக்களின் மின்னஞ்சல் மற்றும் புகைப்படங்களை சேகரிப்பதற்கு ராட்சச வழங்கி கணினி வயல்கள் (server farms) தேவை. அவற்றைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எதற்காக இலவசமாக இவர்கள் இந்தச் சேவையைக் கொடுக்கிறார்கள்? இவர்களுக்கு வருமானம் எப்படிக் கிடைக்கிறது?
பொருளாதாரம், விவரணப்படம் »
இந்த ஊழலின் விளைவுகளை இன்றும் உலகம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட உலகப் பொருளாதாரச்சரிவால், குறைந்தபட்சம் 1.5 கோடி பேர் மீண்டும் வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்கள் உலகெங்கும் வேலை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஒரு நிதி நிறுவனத் தலைமை அதிகாரி கூட இன்றுவரை சிறை செல்லவில்லை. இதைக் குறித்து அழகாக விளக்குகிறது ‘Inside Job’ என்ற விவரணப்படம்.
உரையாடல், பொருளாதாரம் »
2010ஆம் ஆண்டின் நிதி அறிக்கை (budget) பற்றிச் சில கேள்விகளை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (பெங்களூரு) பேராசிரியர் திரு. ரா.வைத்தியநாதனுடன் உரையாடினோம். பெருகிவரும் தாராளமயமாக்கல், கிராமப் புற வளர்ச்சித் திட்டங்கள், விவசாயம், உள்கட்டுமானம் போன்ற துறைகள் மீது இந்த பட்ஜெட்டின் கவனம் குறித்து உரையாடல் நீண்டது. “தனியார் மயமாக்குவது என்பது அதனளவிலேயே ஒரு இலக்காக ஆக முடியாது. அது ஒன்றும் மந்திரக் கோல் அல்ல. நம் அமைப்பும் மிகவும் குழப்பம் நிறைந்த ஒரு அமைப்பு. தவிர அரசு நிறுவனங்களைச் சரியான மதிப்பு போட்டு விற்பது என்பதும் எளிய செயலல்ல.”
அறிவியல், பொருளாதாரம் »
தென் கொரியாவில் டூப்ளிகேட் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்றுச் செல்வ வளம் கொழிக்கிறது. இரவு நேரத்தில் சாட்டிலைட்டிலிருந்து பார்த்தால் ஜோதி மயமான முந்திரிப் பருப்பு மாதிரி இருக்கிறது. ஆனால் பாவம், கம்யூனிஸ்ட் பிடியில் சிக்கிய வட கொரியாவோ இருளடைந்து கிடக்கிறது. அதிகாரிகள் வசிக்கும் வீடுகளில் மட்டும்தான் விளக்கு எரிகிறது.
அரசியல், பொருளாதாரம் »
அரசியல், பன்னாட்டு உறவுகள், பொருளாதாரம், மொழிபெயர்ப்பு »
மத்திய அரசுடைய நிதிப்பற்றாக்குறை நாட்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைச் சமாளிக்க வேகம் வேகமாக அரசுடைய கடன் பத்திரங்களையும், பண நோட்டுகளையும் அச்சடித்துத் தள்ளுவார்கள். இதனால் ஏற்படும் பணவீக்கம் சமூகத்தைக் குதறி எடுத்து விடும். கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக விற்ற பொருள் என்ன தெரியுமா? கைத்துப்பாக்கிகளும், ரைஃபிள்களும்தான்.




