முகப்பு » தொகுப்பு

திரைப்படம் பகுதியில் பிற ஆக்கங்கள்

அஞ்சலி, இந்திய சினிமா »

தாகூரின் பேரன்

சொல்லிவைத்தாற்போல அநேகமாகத் தன்னுடைய எல்லா படங்களுக்குமே தேசிய விருது பெற்றவர் ரிதுபர்ண கோஷ். இந்திராணி ஹல்தார், ரிதுபர்ண சென்குப்தா, கிரண் கேர், சுதிப்தா சக்ரபர்த்தி, ராக்கி என ரிதுபர்ண கோஷின் படங்களில் நடித்த நடிகைகளுக்கும் தேசிய விருது தேடி வந்தது. வங்காள சினிமாவின் பெருமைமிகு கலைஞர் அவர்.

ஆளுமை, கலை, விவரணப்படம் »

சகல கலா ஆசார்யர் - வித்வான் எஸ்.ராஜம் ஆவணப்படம்

எஸ்.ராஜம் கர்னாடக சங்கீதத்தின் ஒப்பற்ற கலைஞர், ஓவியர், சங்கீதக் களஞ்சியம் என பல முகங்கள் கொண்டவர் என்றாலும், நமது பாரம்பரியக் கலையின் கடைசி ஆன்மா என அவரது ஆவணப் படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது. கலையின் அணையாத கங்கு கலைஞர்களின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டில் அடங்கியுள்ளது. அது என்றும் நீடித்திருக்கும் பெரும் தீ. காலகாலத்துக்கும் கலையின் எண்ணிலடங்கா முகங்களை உயிர்ப்போடு வைத்திருப்பது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம்.

திரைப்படம் »

ஒழிமுறி - உறவெனும் புதிர்

தொழில்நுட்ப உத்திகள் மலிந்த இன்றைய திரை உலகிலும் கூடக் கதையும், திரைக்கதை அமைப்பும், கூர்மையான உரையாடல்களும் வலுவாக இருந்தால் ஒரு படத்தால் மொழி கடந்தும் ஒரு பார்வையாளனைக் கட்டிப்போட முடியும் என்பதை மெய்ப்பித்திருக்கும் ஒழிமுறி, ஒரு கதையின் படம்; ஒரு கதாசிரியனின் படம்; உரையாடல்களாலும் அவை முன் வைக்கும் எளிய தருக்கங்களாலும்,வாழ்வியல் உண்மைகளாலும் தொடுக்கப்பட்டிருக்கும் படம்.

திரைப்படம் »

நிசப்தத்தில் பிறந்த இசை

மண்ணில் புரட்டியெடுக்கப்படும் காந்தத் துண்டு மற்ற அனைத்தையும் உதறி இரும்புத் தூசியை மட்டும் உடலெங்கும் அப்பியெடுத்துக் கொண்டு வருவது போல, இரைச்சலான ஓசைகள் மிகுந்த புற உலகில் இருந்து இனிய இசைக்கான தூய ஒலிக்குறிப்புக்களை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கும் நுண்மையான செவித் திறன் கொண்ட குர்ஷித்தின் இசை எப்படி நிசப்தத்தில் இருந்து பிறந்த இசையாக இருக்க முடியும்?

திரைப்படம் »

எறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானியப் படம்

கங்கையில் குளிக்கும் போது அந்தப் பெண் தான் விரும்பியவாறே அன்னையாகிறாள். நிர்வாண சாதுக்களுக்கும், அவளுக்கும் உடல் என்னும் தடை இல்லை. பின்னணியில் அன்னையைப் போற்றும் பாடலில் இது உணர்த்தப்படுகிறது. கூடவே பயணம் செய்தும் தருக்க மனம் வாதங்களின் அக்கப்போரில் சிக்கி கரையிலேயே தங்கி விடுகிறது. உண்மையான தேடலும், நம்பிக்கையுமுள்ள உணர்வு பூர்வமான மனம் கங்கையில் மூழ்கி எழுந்து தன் ஞானத்தை கண்டடைகிறது. பரிபூரண மனிதர் எழுதித் தந்த “தோட்டத்துப் பனித்துளிக்குள் முழு உலகம்” என்னும் வரிகளின் மூலம் கடவுள் புறத்தே தேடவேண்டிய விஷயம் இல்லை, உள்ளேயே இருப்பது தான் என்னும் இரண்டற்ற அத்வைத நிலை உணர்த்தப்படுகிறது.

திரைப்படம் »

இங்க்லீஷ் விங்க்லிஷ்: எளிதாகப் புரியும் மொழி

ஆங்கிலம் தெரியாத ஒருவர் படும் சிரமங்களை வைத்து முழுநீளப் படமாக வெளிவந்திருக்கிறது இங்க்லீஷ் விங்க்லிஷ். தெற்கில் பெரும் வெற்றி பெற்று வடக்கில் வாகை சூடிய நடிகை ஸ்ரீதேவி பல வருடங்களுக்குப் பின்னர் நடித்திருக்கும் படம், சீனி கம் மற்றும் பா படங்கள் மூலம் ஹிந்தியில் அழுத்தமாக முத்திரை பதித்த இயக்குனர் பால்கியின் தயாரிப்பு என்று நிறைய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கிறது படம்.

திரைப்படம் »

ஹிரோஷிமா, என் காதலே! - பகுதி 2 - பித்தும் போதமும்

இசையும், குரலும், ஒலிகளும் ஒரு இணைசித்திரமாகத் திரையைப் பின்தொடர்கின்றன. எடுத்துக்காட்டாக, அவள் தேனீர் விடுதியில் அவனுடன் தன் நுவெர்ஸ் கதையைப் பகிர்ந்து கொள்ளும்பொழுது இயக்குனர் பின்னணி இசையைக் கொண்டு காலத்தோடும் இடத்தோடும் விளையாடுகிறார். திரைக்கு வெளியிலிருந்து செயற்கையாய் ஒலிப்பது போல தோன்றும் இசையை(non-diegetic), ஒருவர் விடுதியில் இசைப்பெட்டியில் பணம் செலுத்தி ஒலிப்பதாய் இடையில் செருகுவார் (diegetic*). அவ்விசை, விடுதியின் குரல்கள், ஜன்னல் வழியே தெரியும் நதியிலிருந்து ஒலிக்கும் தவளைகள் எல்லாம் கலந்தொலிக்க, அவள் தன் கதையை ஆரம்பிக்கிறாள்.

திரைப்படம் »

ஹிரோஷிமா, என் காதலே!

இப்படத்தில் இறந்த காலமும் நிகழ் காலமும் ஒன்றினுள் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. நினைவுகளுக்கும் அனுபவங்களுக்கும் தனிச் சொந்தம் கொண்டாடத் துடிப்பவர்களே அதைப் பிறர் மீது சுமத்தவும் செய்கின்றனர். அவள் அவனது அனுபவங்களை, ஹிரோஷிமாவின் நினைவுகளைத் தனதாக்கிக் கொள்ள முயல்கிறாள்; ஹிரோஷிமாவின் இறந்தகாலத்தைத் தன் நிகழ்காலமாக அனுபவிக்கிறாள், அந்த அனுபவத்தையே தனது நுவெர்ஸ் அனுபவமாக மொழிபெயர்க்கிறாள்.

ஆளுமை, திரைப்படம் »

சாப்ளின் - பகுதி 2

நவீனத்துவம் துவங்கிய பொழுதிலிருந்து மனிதர் துரிதத்தையும் வேண்டி நிற்கிறார். நவீனத்துவத்தின் கடைக்கால்களான கருத்தியல்கள் உலகெங்கும் பரவி, தேர்ந்த விசாரணையற்று அனைத்து நிலங்களிலும் நடைமுறைப்படுத்தப் படுவதன் விளைவு, படைப்பூக்கம் என்பது வளர்வதன் கதியை விட, அழிப்பின் கதி கூடுதலாக உள்ளது. விளைவு, செம்மை என்றும்போல் தொலை வானாகவே இருக்கிறது மானுடருக்கு.

ஆளுமை, சமூகம், திரைப்படம் »

சாப்ளின் : செம்மையும் சமூகமும் - 1

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்த நாட்டில் அவருக்கு அபரிமித பாராட்டும் வசதிகளும் கிட்டினவோ அதே நாட்டிலிருந்து அந்நூற்றாண்டின் நடுவில் கிட்டத் தட்ட ஒரு குற்றவாளி போல நடத்தப்பட்டு, துரத்தப்பட்ட நிலையில் அவர் இருந்தார். அவருடைய அரசியல் கருத்துகளை ஏற்க முடியாத வலது சாரிப் பீதி அமெரிக்காவிலிருந்து அவரைத் துரத்தியது. அவரை அது மட்டும்தான் துரத்தியது என்று சொல்லி விட முடியாது.

திரைப்படம் »

பருவங்களின் பார்வையாளர் ஓஸூ

ஓஸுவின் படங்கள் என்றுமே பிரச்சாரத்திற்கு உதவாதவை; அவரே முயன்று ஜப்பானியத் தரப்பில் போர் எழுச்சிக்காக இயக்கியப் படம் முற்றிலுமாக எதிர்மறை விளைவையே ஏற்படுத்தியது. காரணம் அவரது வடிவியல் அடைவு அவரது உலக-நோக்கின் நுண்மையான வடிவமே. எடுத்துக்காட்டாக அவர் படங்களில், பான்ஷுன் உட்பட, கதைத் திட்டம் அனேகமாகத் தகர்க்கப் பட்டிருக்கும்; கதை நெடிய நீள்வட்டங்களில் (ellipses) ‘காட்டப்’ படுவதன் மூலம்.

திரைப்படம் »

கஹானி

வெறும் திரைக்கதையையும், தேர்ந்த நடிப்பையும் மட்டும் முக்கியமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பெறும் வெற்றியும், ஷாரூக் கான் போன்ற சூப்பர் ஸ்டார்கள் கூட கோடிக்கணக்கில் செலவு செய்து படமெடுத்து, ஒரு வருடம் விளம்பரப்படுத்தி எடுக்கும் படங்கள் படுதோல்வியும் அடைவதைப் பார்க்கும்போது இவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தப் பொய்யைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்று ஆச்சரியப்படவைக்கிறது.

அரசியல், சமூகம், விவரணப்படம் »

மதப்பிளவும் தேசப்பிரிவினையும்

சிறிய சிறிய மூட்டை முடிச்சுகளையும் கூட கீழே போட்டுவிட்டு வெறும் கூடான உடலில் உயிரை மட்டும் சுமந்து கொண்டு நடக்கிறார்கள். அதற்கடுத்து அவர் சொல்வது தான் இத்தனை ஆண்டுகள் தாண்டியும் கேட்கும் நம் நெஞ்சங்களை உலுக்குகின்றது. தாய்மார்கள் தாங்கள் நொந்து சுமந்து பெற்ற குழந்தைகளைக்கூட ஒரு கட்டத்தில் தூக்கமுடியாமல் துவண்டு, கதறி அழவும் தெம்பில்லாமல் உயிருடன் கீழே இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்.

திரைப்படம் »

அஷானி சங்கேத் - தொலைதூரத்து இடியோசை

1943யில் வங்காளத்தில் ஏற்பட்ட பிரம்மாண்டமான செயற்கைப் பஞ்சத்தின் பின்புலத்தைச் சித்தரிக்கும் இப்படம், ராயின் அரிதான வண்ணப் படங்களில் ஒன்று. பெரும்பாலும் கல்கத்தாவின் நகர வாழ்க்கையைக் கருப்பு வெள்ளையில் தீட்டிக் கொண்டிருந்த ராய், ஏறத்தாழ பத்தாண்டுகள் கழித்துத் திரும்பவும் நாட்டுப்புறச் சூழலுக்கு வண்ணங்களோடு திரும்பிய படம் இது.

திரைப்படம் »

அழிவிலிருந்து மீண்ட மிருணாள் சென்னின் திரைப்படம்

மிருணாள் சென்னின் படைப்புகள் திரையிடப்படமுடியாமல் போனதையடுத்து, பல கண்டனக்குரல்கள் எழுந்தன. அதையடுத்து இந்திய அரசு கிட்டத்தட்ட அழிந்த நிலையிலிருக்கும் முக்கியமான இந்தியத் திரைப்படங்களை மீட்கும் ஆணையைப் பிறப்பித்தது. அந்தத் திட்டத்தின் கீழ் சரிசெய்யப்பட்டுவரும் பல திரைப்படங்களில் மிருணாள் சென்னின் திரைப்படங்களும் அடக்கம். அவ்வாறு மீட்கப்பட்ட மிருணாள் சென்னின் திரைப்படங்களில் ஒன்றான “கண்டர்” திரைப்படம் 2010-ஆம் ஆண்டு கேன் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.