முகப்பு » தொகுப்பு

இசை பகுதியில் பிற ஆக்கங்கள்

இசை, ரசனை »

இசைமேதையின் புகைப்படம்

பிற்பாடு இசைவகுப்புகளில் ஹார்மோனியம் வாசிக்கும் போது ராகங்களை இனங்கண்டு எளிதாக பயில முடிந்ததற்கு சிறுவயதிலிருந்தே கேட்டுக் கேட்டுப் பழகியிருந்த ஜி.ராமனாதனின் பாடல்களே காரணமாயிருந்தன. குறிப்பாக சாருகேசி. ’ஆடமோடிகலதே’ என்னும் தியாகராஜ கீர்த்தனையை பாடமாக எழுதிக் கொண்டு மலைத்தபடியே சாருகேசியை வாசிக்க முயலும் போது மெல்ல பிடிபட ஆரம்பித்தது. என்ன ராகமென்றே தெரியாமல் ஏற்கனவே வாசித்துப் பழகியிருந்த ‘வசந்தமுல்லை போலே வந்து’ பாடலின் ஸ்வரங்களுக்குள் விரல்கள் சென்று திரும்பின. வெற்றிலை புகையிலையைத் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்த இசையாசிரியர் கிருஷ்ணன்ஸார் சொன்னார். ‘அப்பிடியே மன்மதலீலையை வென்றாரும் வாசிச்சுரு. வெளங்கிரும்.’ நிமிர்ந்துப் பார்க்க தைரியமில்லாமல் ஹார்மோனியத்திலேயே தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.

இசை »

செல்லோ இசைப்புரட்சி: 02 - மீண்டெழுந்த நாட்டுப்புற இசை

செல்லோவை இசைக்கும் முறையும் மிக வித்தியாசமானதுதான். இரண்டு கால்களுக்கு நடுவே வயலினைத் தலைகீழாகப் பிடிப்பது போல் பிடிக்க வேண்டும். செல்லோவைப் பிடிப்பது மட்டுமல்ல இசைப்பதும் ஆரம்பகட்ட ரசிகர்களுக்குச் சிக்கலானதுதான். கிட்டத்தட்ட நம் முகமிருக்கும் உயரத்துக்கு எந்தவித பிடிமானமும் இல்லாமல் இடது கை அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். தந்தியை இசைக்கத் தொடங்கினால் முழு கையை அங்குமிங்கும் ஓடிப் பிடிப்பது போல் தோற்றமளிக்கும். ஒரு ஸ்டைலான வாத்தியக்கருவியைப் போல் பார்த்தவுடன் நம்மை ஈர்க்காதது என்னவோ உண்மைதான்!

இசை, வரலாறு »

மிருதங்கம் - ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்

இன்றிருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம் முதலே தமிழகத்தில் தாள இசைக் கருவிகள் பல இருந்தன என்பதும், அவை ஆடலுக்கும், திருமணம் போன்ற விழாக்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன என்பதும் தெளிவாகின்றன. மராட்டியர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோலிசைக் கருவிகளும், அவற்றை முழக்கும் முறைகளும் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தன.

இசை »

செல்லோ இசைப்புரட்சி - பாப்லோ கசல்ஸ்

யார் மறந்தாலும் மறைத்தாலும் கலைப் படைப்புகள் தகுதியுடையவர்கள் கையில் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்பது உண்மைதான் போலும். நாதமுனிகள் நாலாயிரப்பிரபந்தத்தைத் தொகுத்தது போல், இச்சிறுவன் தன் கையில் கிடைத்த இக்குறிப்புகளை ஒருங்கிணைக்கத் துவங்கினான். பதிமூன்று வயதில் இக்குறிப்புகளை கொண்டு தன் பயிற்சியைத் தொடங்கினான். அடுத்த பன்னிரண்டு வருடங்களுக்கு வேறெந்த எண்ணமும் குறிக்கிடாமல் செல்லோ பகுதிகளை மனப்பாடமாக இசைக்கக் கற்றுக்கொண்டான்.

அனுபவம், இசை »

கீதம், சங்கீதம், தேசியகீதம்

சென்றவாரம் கொண்டாடப்பட்ட 64-ஆவது இந்திய சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்படும் சிறப்புக் கட்டுரை:
“பெரிய ஆகிருதியைக்கொண்டதொரு மனிதருக்குப் பொருத்தமில்லாத மெல்லிய குரலில் பாடத் தொடங்கினார் தாகூர். அந்தப்பாடலின் முதல் பகுதியில் இந்தியாவின் மாநிலப் பகுதிகளைக் குறித்தும், மலைகளை, நதிகளைக் குறித்தும் ஒரு புவியியல் குறிப்பைத் தந்தார். அடுத்த பகுதியில் இந்தியாவின் பல்வேறு மதங்களைக் குறித்துப் பாடினார். அப்பாடலின் முதல் பகுதியின் கோஷம் எங்கள் காதுகளைத் திறந்தது. இரண்டாம் பகுதியின் கோஷம் எங்கள் தொண்டைகளைச் சரிசெய்ய வைத்தது. அவரை மீண்டும் மீண்டும் அப்பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டோம். இறுதியில் நாங்களும் பெருமிதத்தோடு ’ஜயஹே, ஜயஹே!’ என்று வாய்திறந்து பாடினோம்”.

இசை »

ராகம் தானம் பல்லவி – பாகம் நான்கு

முதலில் கூன் போடாமல், நிமிர்ந்து சம்மனம் போட்டு (சப்ளாமூட்டி) உட்காருங்கள். முகத்தை சீரியஸாய் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் உள்ளங்கையால் தொடையில் செல்லமாக ஒரு தட்டு (நம் தொடையில் கொசு உட்கார்ந்திருந்தாலோ, தொடை அடுத்தவரதென்றாலோ படார் என்று அடித்துக்கொள்ளலாம்). பிறகு சுண்டுவிரலில் தொடங்கி மூன்று விரல்களை கட்டைவிரலால் தொட்டு எண்ணிக்கொள்ளுங்கள்.

இசை »

ராகம் தானம் பல்லவி – பாகம் மூன்று

இப்படியாப்பட்ட கர்நாடக சங்கீத கலைஞர்கள் சாதாரணமாய் அப்படி ஆட்டோவில் வந்திறங்கி அலட்டிக்கொள்ளாமல் பாடிவிட்டு கொடுப்பதை வாங்கிகொண்டு போவார்கள். உழைக்கத்தெரிந்த பிழைக்கத் தெரியாதவர்கள். உழைக்கசோம்பும் பிழைக்கத்தெரிந்த பல அல்பசங்கதிகள் அரைமணி (ஏதோ ஒரு) மேடையேற ஆங்கிலத்தில் பேரம்பேசி ஆயிரக்கணக்கில் முன்பணமாய் கேட்கிறது. கொடுக்கிறோம். பாரம்பர்யம்மிக்க ப்ரத்யேகமான கலையின் உண்மையான உன்னதமும், அதை நாம் இன்று போஷிக்கும் விதமும் நிதர்சனமாகுகையில் கண்களில் ஜலமும் மனதில் ஆங்காரமுமே மிச்சம்.

இசை »

ராகம் தானம் பல்லவி – பாகம் இரண்டு

முன்னர் குறிப்பிட்டபடி வேதவல்லி மத்தியமகால தானத்தில் நிரம்ப அப்பியாசம் பெற்று தேர்ந்தவர், சிறந்தவர். கேட்கையில் நம்மை அறியாமல் கண்ணைமூடியபடி எழுந்து ஆடவைத்துவிடுவார். ராகங்களுக்கு ஏற்றவாறு தானத்தின் வெளிப்பாடு சற்று மாறும். நாட்டை ராகத்தை உடைத்து உடைத்து ஸ்வரத்துண்டுகளாய் தானம் பாடுவது நன்று. எளிது. ஆனால் வராளியை இழுத்து இழுத்துதான் பாடவேண்டும்.

இசை »

இந்திய இசையில் முதல் சிம்பொனி?

சிறுகதை ஆசிரியன் நாவல் எழுத முயற்சிக்கும்போது சந்திக்கும் தடைகளுடன் இதை ஒப்பிடலாம். மற்ற இசை வடிவங்களை விட சிம்பொனிக்கு விரிவான மற்றும் ஆழமான படைப்புத் திறமை தேவை. இசைக்கோவைகள் எழுதுவதால் மட்டும் சிம்பொனி படைத்துவிட முடியாது. பல கருவிகளைப் பற்றிய அறிவு, அவற்றில் உண்டாகும் ஒலி அமைப்புகள், வாத்தியக்கருவிகள் ஒன்றாக ஒலிக்கும்போது உண்டாகும் ஒத்திசைவு, அரங்கின் ஒலிக்கட்டுப்பாடு (Hall acoustics) என பல்துறை பற்றிய விரிவான அறிவு அவசியமாகிறது. இது தொழில்நுட்பம் சார்ந்த சவால்.

இசை, புத்தக அறிமுகம் »

விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் - ஒரு பார்வை

சடங்குக்காய் திருமதி வித்யா சங்கரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையை அமைக்காமல், அவர் மறைந்த இவ் வேளையில் அவர் எழுதியுள்ள அற்புத புத்தகங்கள் இரண்டினைப் பற்றி பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யக் கூடிய சிறந்த அஞ்சலி என்றெண்ணுகிறேன்.

இசை, பேட்டி, மொழிபெயர்ப்பு »

வித்யா சங்கர் - ஒரு பேட்டி

நான் வீணை கற்றுக் கொள்ள துவங்கியபோது என் வயது எட்டு. ஒரு சுவாரஸியமான சம்பவம் இருக்கிறது. ஒரு முறை, ”எளியேனே” எனும் ஆனய்யாவின் கீர்த்தனையை சபேச ஐயர் பாடப்பாட, என் தந்தை ஸ்வரப்படுத்த முயன்றார். சரணத்தில், ஒரு குறிப்பிட்ட வரியை ஸ்வரப்படுத்துவதில் என் அப்பா சற்று திணறினார். நான் என் உள்ளுணர்வு சொன்னபடி உடனடியாக ஸ்வரப்படுத்தினேன். உடனே சபேச ஐயர் என் தந்தையிடம் நான் பாடிய விதமே ஸ்வரப்படுத்தும்படி சொன்னார்.

இசை »

ராகம் தானம் பல்லவி – பாகம் ஒன்று

ஜி.என்.பி. காலத்தில் ஷண்முகப்பிரியா ராகத்தில் முக்கால் மணிநேரம் இருந்திருக்கிறது. இன்று இத்தெம்பு இள வித்வான்கள் பலரிடம் இல்லை. அப்படியே ஒரு 15 நிமிடம் உழைத்துப் பாடினாலும் ரசிகர்கள் சிலரிடமே ஒருமுகப்படுத்தி கேட்கும் தெம்பும் இருக்கிறது. தலை ஆடுவது நின்று, கால் ஆடி, பிறகு கை நடுங்கி, வாவ், ஃபுல் ஸெட் மா என்று எஸ்ஸெம்மெஸ்ஸிக் கொள்கிறார்கள். இல்லை தரஸ்தாயியில் ஆசுவாசிக்க பாடகர் சற்று மூச்சுபிடித்து நின்றால், அவசரமாய் கைதட்டி நடுக்கத்தை குறைத்துக்கொள்கிறார்கள்.

இசை »

காற்றில் கரைந்த கரஹரப்ரியா

சென்ற டிசம்பர் சீஸனில் ஒரு சபா விழாவுக்கு, டாக்டர்.ஜெகத்ரட்சகனைத் தலைமை தாங்க அழைக்கிறார்கள். அவர் மேடையேறி, ‘மிருதங்க வித்வான் டி.என்.கிருஷ்ணன் அவர்களே!’ என்று முழங்குகிறார். டி.என்.கிருஷ்ணன் என்ற அந்த 81 வயது “வயலின்” மேதை முன்வரிசையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. எதற்காக ஒரு இசை விழாவுக்குத் தலைமை தாங்க, வித்வானின் இசைவகையைக் கூட அறிந்திராத ஒரு அரசியல்வாதியைக் கூப்பிட வேண்டும்? அப்படி என்னவிதமான சூழ்நிலைக் கட்டாயம்?

இசைத்தெரிவு »

கந்த கானாமுதம்

ஒவ்வொரு ராகமாகக் கையைப் பிடித்து இழுத்து வந்து “இதோ பார்த்துக்கொள்” என்று காட்டும் அனுபவம் எஸ்.ராஜம் அவர்கள் பாடி ஸ்வாதிசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘கந்த கானாமுதம்’ என்ற இசைத்தொகுப்பைக் கேட்டால் கிடைக்கிறது. மொத்தம் 72 ராகங்களை இத்தொகுப்பில் ஒரு சிறு ஆலாபனையாகவும், ஒரு எளிய கீர்த்தனையாகவும் பாடியிருக்கிறார் எஸ்.ராஜம். தேர்ந்த ஓவியரும், மிகச்சிறந்த பாடகருமான எஸ்.ராஜம், ஒவ்வொரு ராகத்தைக் குறித்தும் ஒரு தெளிவான, அழுத்தமான சித்திரத்தைத் தன்னுடைய ராக வெளிப்பாட்டில் தருகிறார்.

இசை »

மௌனத்தின் ஓசை

“கடந்து போகும் காலத்தை எதிர்த்து போராடும் இரு காதலர்கள் தங்களை இனம் கண்டுகொள்ளும் சமயம். அவர்கள் வாழ்வின் அந்த கடைசி வினாடிகள் தம் உயிரின் மேலானது என அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவை கவித்துவத்திற்காக சொல்லப்பட்ட வெறும் வார்த்தைகள் அல்ல. உண்மையிலே அந்த வினாடிகளுக்குப் பின் அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்”. ஏறக்குறைய இப்படித்தான் பாலச்சந்தர் இந்த பாட்டின் சிச்சுவேஷனை இளையராஜாவிடம் விளக்கியிருப்பார். அந்த உணர்வை இந்தப் பாடலில் இளையராஜா சொல்வதற்கு எடுத்து கொண்ட ஆயுதம் - மௌனம்.