முகப்பு » தொகுப்பு

அரசியல் பகுதியில் பிற ஆக்கங்கள்

உலக அரசியல், பன்னாட்டு உறவுகள் »

சீறும் சீனத்து டிராகன்

சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் வரை சென்று தாக்கும் திறனுள்ள சீனாவின் இந்த குறிப்பிட்ட ஏவுகணை சற்று மாறுபட்டது. இதில் அணுகுண்டிற்கு பதிலாக கடலில் உலாவும் விமானந்தாங்கிகளை துல்லியமாகத் தேடி அழிக்கும் திறன் படைத்த குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. யாருமே யோசிக்காத மிகவும் சிக்கலான இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்டு இந்தப் புதியவகை ஏவுகணையை உருவாக்கியதன் மூலம் கடற்போரின் அடிப்படைகளையே சீனா மாற்றிவிட்டதாக கடற்போர் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

அனுபவம், அரசியல், ரசனை »

இசைபட வாழ்…

செந்தில் குமார் என்னிடம் பேசிய முதல் வரி, “நான் சொல்வதை மட்டும்தான் எழுதவேண்டும்.எனக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதுவும் எழுதுவது எனக்கு பிடிக்காது”. எனக்கு அவரை உடனே பிடிக்கத் துவங்கியது. இவரின் ஒன்பது தேர்வுகளை இரண்டாண்டுகள் நான் எழுதினேன். தேர்வு முடிந்து, அந்த வேப்பமரம் நிறைந்த, வேப்பம்பழங்கள் இறைந்த பள்ளியின் சாலை வழியே நாங்கள் பசுமலை பேருந்து நிறுத்தம்வரை நடந்து வருவோம். சரியான இடங்களில், தேவைக்கு ஏற்றவாறு வளைந்து, மேடுபள்ளங்களில் சரியாக கால் வைக்கும் அவரின் புலன்களின் நுண்ணறிவு என்னை வியக்க வைக்கும். இவர், பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாடலை “ஹம்” செய்வார். அதில் பெரும்பான்மை இளையராஜாவுடையதாக இருக்கும்.

உலக அரசியல் »

ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும்

ஒரு நிருபர் பென்யா நியதோவிடம் அவரது வாழ்வை மாற்றிய மூன்று புத்தகங்களைக் குறிப்பிடும்படி கேட்டார். அவருடைய தடுமாற்றமான பதில், பின்னால் யு ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது, முள் முனையில் நிற்பது போன்ற துன்பம் தரும் நான்கு நிமிடங்கள் நீடித்தது. முதலில், அவர் தனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி குழறினார், ஆனால் அவற்றின் தலைப்புகள் அவருக்கு நினைவில்லை. அவர் மொத்த பைபிளையும் படித்ததில்லை என்ற போதும், அதில் சில பத்திகள் அவரது இளம்பருவத்தில் மிக நம்பிக்கையூட்டுவதாக இருந்தன என்று யோசித்துச் சொன்னார்.

அரசியல், அறிவியல் »

ஒரு முடிவை மாற்ற எத்தனை பேர் தேவை?

பொதுவாகவே நம் அனைவருக்கும் மனச்சாய்வுகள் உண்டு என்பதையும் ஒரே பண்பாட்டைச் சேர்ந்த அறிவியலர்கள் தம் பண்பாட்டையொட்டிய மனச்சாய்வுகளைத் தாண்டி வருவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் மனச்சாய்வுகளின் இயல்பை அறிந்தவர்களும்கூட அதற்கு பலியாகின்றனர் என்பதையும் இணையத்தில் அண்மையில் வாசிக்கக் கிடைத்த சில கட்டுரைகள் சுட்டுகின்றன. மொத்தத்தில், பல பண்பாடுகள் கொண்டதாக மானுட இனம் இருப்பதே அறிவியலையும் சிறப்பிக்கிறது.

அரசியல், சமூகம் »

இலட்சியக் கொலைகளும், அலட்சியக் கொலைகளும்

ஒரு மைல் நீளத் தெருவில் சுமார் 100 வீடுகளிருக்கும்- பூனைகள் உலவுவதால் என்ன விளைவுகள் என்று சமீபத்தில்தான் எனக்கு உறைத்தது. பூனைகள் அமெரிக்காவில் லட்சக்கணக்கான சிறு பறவைகளைக் கொல்கின்றன என்று படித்த போதுதான் எனக்குப் பிரச்சினையின் பரிமாணம் தெரிந்தது. லெனினியம்/ஸ்டாலினியம் எத்தனை லட்சம் பேரைக் கொன்றன என்பதை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால்தானே புரிகிறது? கம்யூனிசத்தின் பலிகளை லட்சிய பலிகள் என்று சொன்னால் முதலிய அமைப்பு இந்த மாதிரியான அலட்சிய பலிகொண்டு அது சம்பந்தமான குற்ற உணர்வுக்குக்கூடத் தேவையில்லாத குழந்தைமையை பாவித்துக் கொண்டிருக்கிறது.

உலக அரசியல் »

அமெரிக்க-பாகிஸ்தான் உறவு - எங்கே செல்லும் இந்தப்பாதை?

சொல்லப்போனால், நல்ல அரசாக இருப்பதற்காக அல்ல, பயங்கரவாத அரசாக இருக்காமலிருக்க தொடர்ந்து பில்லியன் கணக்கில் டாலர்களைக்கொட்டு என்று மிரட்டி கப்பம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் ஆகியிருக்கிறது. இது உண்மையில் அமெரிக்க ஆதிக்கத்தின் வீழ்ச்சியையே சுட்டுகிறது. அமெரிக்காவிற்கு எதிராக பல சக்திகளைத் திரட்டி அமெரிக்காவைத் தடுமாற்றத்திலேயே வைத்திருப்பதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று வருகிறதென்றால் அதற்குக்காரணம் கடந்த பத்தாண்டுகளில் அடிவாங்கியிருக்கும் அமெரிக்கப்பொருளாதாரமும், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களால் அயர்ச்சியடைந்திருக்கும் அமெரிக்க மனோநிலையும்தான்.

ஃபூகுஷீமா »

அணு ஆற்றலின் அரசியல் - இறுதிப் பகுதி

ஃபுகுஷீமா பேரிடர் ஜப்பானிய மக்களுக்கு அணு ஆற்றலை நம்பியிருக்கும் தம் நிலை , கொள்கை உருவாக்கத்தில் அரசாங்கத்தின் ஆதிக்கம், இன்னும் பல விஷயங்களிலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து சிந்திக்க ஒரு “வாய்ப்பை”க் கொடுத்திருக்கிறது. இன்னொரு வகையில் சொன்னால், ஃபுகுஷீமா பேரிடர் போன்ற பெருநாசத்துக்குக் காரணமான பழைய அமைப்பைத் தொடர்வதா, அல்லது முன்னேற உதவும் ஒரு புது அமைப்புக்கு மாறிச் செல்வதா என்ற முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் ஜப்பானை நிறுத்தியுள்ளது.

அரசியல், சமூகம், விவரணப்படம் »

மதப்பிளவும் தேசப்பிரிவினையும்

சிறிய சிறிய மூட்டை முடிச்சுகளையும் கூட கீழே போட்டுவிட்டு வெறும் கூடான உடலில் உயிரை மட்டும் சுமந்து கொண்டு நடக்கிறார்கள். அதற்கடுத்து அவர் சொல்வது தான் இத்தனை ஆண்டுகள் தாண்டியும் கேட்கும் நம் நெஞ்சங்களை உலுக்குகின்றது. தாய்மார்கள் தாங்கள் நொந்து சுமந்து பெற்ற குழந்தைகளைக்கூட ஒரு கட்டத்தில் தூக்கமுடியாமல் துவண்டு, கதறி அழவும் தெம்பில்லாமல் உயிருடன் கீழே இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்.

ஃபூகுஷீமா »

அணு ஆற்றலின் அரசியல் - பகுதி 4

ஜப்பானியக் கல்வி அதிகாரத்துக்கு அடிபணிவதை வலியுறுத்துவதால், அதிகாரிகளின் உத்தரவுகள் நியாயமானவையோ இல்லையோ, அவற்றைத் தட்டிக்கேட்க ஜப்பானிய மாணவர்களுக்குப் பயிற்சி இல்லை. குழுவின் மற்ற அங்கத்தினர்களுடன் வேறுபடவும் அவர்களுக்குப் பயிற்சி இல்லை.

ஃபூகுஷீமா »

அணு ஆற்றலின் அரசியல் - பகுதி 3

விஞ்ஞானப் பிரச்சினைகளில் நிபுணர்கள் அனேகமாய் எப்போதுமே திடமான ஒத்தக் கருத்துடன் இருப்பதில்லை. இதனால்தான் இந்த இழுபறி விஞ்ஞான உண்மைக்காக என்றல்லாமல் விஞ்ஞானச் சர்ச்சையே எனப்படுகிறது. ஃபுகூஷிமா பேரிடர் மற்றும் ஜப்பானின் ஆற்றல் கொள்கை பற்றிய ஆணையங்களில் குழு உறுப்பினர்களிடையே கடுமையான உடன்பாடின்மை அபரிமிதமாய் நிலவுகிறது.

ஃபூகுஷீமா »

அணு ஆற்றலின் அரசியல் - பகுதி 2

ஜப்பான் ஒரு ஜனநாயகம் என்றாலும், பல நாடுகளோடு ஒப்பீட்டில் அது செவ்வனே இயங்கும் ஒரு அமைப்பு என்றே தோற்றமிருந்தாலும், தொடக்கத்திலிருந்தே, ஜப்பானியக் குடிமக்களுக்கு ஃபுகுஷிமா பேரழிவைப் பற்றி நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை. இதற்கு டெப்கோதான் (TEPCO) முக்கியக் காரணம். ஃபுகுஷிமா டாயீச்சியை தாக்கக்கூடிய நிலநடுக்கம், சூனாமி ஆகியவற்றின் வலிமையை டெப்கோ குறைத்து மதிப்பிட்டிருந்ததால், அணு உலைகளைக் கண்காணிப்பதற்கான அமைப்பையும், ஃபுகுஷிமாவிலும் டோக்யோவிலும் உள்ள பணியாளர்களுக்கும் இடையான தொடர்பு வழிகளையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எதையும் டெப்கோ மேற்கொள்ளவில்லை.

ஃபூகுஷீமா »

அணு ஆற்றலின் அரசியல்

ஃபூகுஷீமா அணு உலை விபத்து நடந்து ஓராண்டு இந்த வாரம் பூர்த்தியாகிறது. இக்கட்டத்தில் இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது : நாசமடைந்த அணு உலைகள் காற்று, நிலம், நிலநீர் மற்றும் கடல் நீரில் கதிர்வீச்சைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அணு உலை எரிபொருள் மேலும் உருகுவதைத் தடுப்பதற்காக டெப்கோ குளிர்விக்கும் அமைப்புகளைச் சீர்திருத்தி, அணு உலைகளைச் சுற்றிப் பாதுகாக்கும் புதிய தடுப்புச் சுவர்களை எழுப்பி விட்டதென்பது உண்மைதான். ஆனால், இந்தக் குளிர்விக்கும் அமைப்புகளும் தடுப்புச் சுவர்களும் எளிதில் பழுதடையக் கூடியவையாகவும் பல குறைகளோடும் இருப்பதால் அவற்றால் கதிர்வீச்சு வெளியே கசிவதையும் சரிவரத் தடுக்க முடியவில்லை

அரசியல் »

நாம் நம்மைப் பலரென்றுணர்ந்த அந்த எதிர்பாரா தருணம்

, அரசு உதவி கிடைக்கும் என்ற குழந்தைத்தனமான, சோவியத்திய நம்பிக்கை ஒருவழியாக குணமாயிற்று நாங்கள் எங்களுக்கு உதவி செய்து கொள்ள முடியும் என்று திடீரென உணர்ந்தோம். இது எங்கள் தேசம், இதன் எதிர்காலம் எங்கள் கையில் உள்ளது என்று உணர்ந்தோம். இது உண்மையான அரசியல் மாற்றத்துக்கு வழி செய்யக் கூடிய புரிதலாக மாற மேலும் பல காலம் ஆகும் என்பது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அதற்கான அழைப்பின் முதல் துவக்க மணி ஒலித்து விட்டது- போலோட்நயா சதுக்கத்தில் டிசம்பர் பத்தாம் தேதி ஒலித்தது அந்த அழைப்பு.

அரசியல், புத்தகப் பகுதி »

உடையும் இந்தியா? - புத்தகத்திலிருந்து ஒரு பகுதி

இந்தியாவைக் கூறுபோடுவதில் அமெரிக்காவுக்குப் பல லாபங்கள் இருக்கின்றன. மற்றொரு வலிமையான போட்டியாளர் ஏற்படுவதைத் தடுக்க முடியும். அமெரிக்க கம்பெனிகள் தங்கள் வேலைகளை இந்தியத் தொழிலாளர்களுக்கு அனுப்ப முடியும். ஒரு வலிமையான அரசு இல்லாதபட்சத்தில் அப்படி அனுப்பப்படும் தொழில்கள் முழுக்க முழுக்க அமெரிக்க லாபத்தைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத முறையில் இருக்க முடியும்.

அரசியல், புத்தக அறிமுகம் »

இந்தியத் துண்டாட்டம் : உட்பகைகளின் அந்நிய வேர்கள்

ஒரு நாட்டின் வரலாற்றை ஆராயத் தேவையான கோட்பாடுகளை வழங்குவதன் மூலமும், அந்த ஆய்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும், அந்த ஆய்வு முடிவுகளை தகுந்த பிரச்சார அமைப்புகள் மூலமாக உலகரங்கில் முன்வைப்பதின் மூலமுமே தனக்கான ஆதாயங்களை மேற்குலகால் இன்று பெற்றுவிட முடியும். இந்த வகையில், ஒரு நாட்டின் வரலாறும், கலாச்சாரமும், மதமும் அந்நாட்டின் நலனுக்கு எதிராக உபயோகப்படுத்தக்கூடிய ஆயுதமாக ஆகின்றன. ஆக ஒரு நாட்டைக் கட்டுப்படுத்த போர், பொருளாதாரம் ஆகிய பழைய காலனிய கருவிகளைத் தாண்டிய ஒரு கருவி தற்போது மேற்கத்திய நாடுகளின் கையில். அது, பண்பாட்டு ஆய்வுகள்.