முகப்பு » தொகுப்பு

சிறுகதை பகுதியில் பிற ஆக்கங்கள்

சிறுகதை »

ஆண்பெண் போட்டி

பெண் வீட்டுக்குவந்தா செல்லுலே அரட்டை, இல்லாட்டா காதிலே ஐ-பாட். நாலுதடவை கத்தினாத்தான் திரும்பிப் பாப்போ. பையன் கம்ப்யூட்டர் முன்னாலே உக்காந்தான்னா ஒரே இரைச்சல். ரெண்டுபேரும் எது கேட்டாலும் நீ பேசறது ஒண்ணும் புரியலியேன்னு முகத்தை வச்சுப்பா. ஷேக்ஸ்பியர்லேர்ந்து பெர்னாட் ஷா வரைக்கும், நாம படிக்காத இங்க்லீஷா?

உலகச் சிறுகதை »

நாசகார வலை

அன்று இரவு வீடு திரும்பியதும் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். பிரபல இணையதளம் ஒன்றில் அவள் செய்திருந்த விளம்பரத்தைக் கண்டதும் எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. ”ஆரோக்கியமான இளம் பெண்ணின் உடல் உறுப்பு(கள்) விற்பனைக்குத் தயார். கார் வாங்க இருப்பதால், காரை ஓட்டுவதற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் எந்த ஓர் உறுப்பும் விற்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள், பேசுவோம்..”

சிறுகதை »

காலம்

ஏன் இன்னும் வரவில்லை? அவனுக்கு ஆயாசமாக இருந்தது. இந்த வாட்டி வயிற்று வலியோடு ஜுரம் வந்துவிட்டது. குளிர் வேறு. பனியன், முழுக்கைச் சட்டை, லுங்கி, மேலே போர்வை. எல்லாவற்றையும் மீறி குளிரியது. கையைச் சட்டைக்குள் விட்டுக் கொள்ளலாம் என்றால் அசைக்கவே முடியவில்லை. நடு நெஞ்சில் என்னவோ உறுத்தியது, நீளமான பல்லி மாதிரி. அது ரொம்ப காலமாக நகராமல் அங்கேயே இருந்த மாதிரி தோன்றியது.

சிறுகதை »

புரை

பள்ளி வாயிற்காவலர் வைத்திருக்கும் வெளியே செல்லும் மாணவர்களைக் குறித்துவைத்துக்கொள்ளும் கோப்பிலும் அவள் பெயர் இல்லை. கவலையாக இருக்கிறது என்றார். உடனே கவனிக்கிறேன் என்று கூறினாலும் இப்போது எனக்கு ஒரு சிறு பதற்றம் வந்துவிட்டது.

சிறுகதை »

அறன் வலி உரைத்தல்

மனிதரில் பத்து சதவீத புண்ணியவான்களுக்கு இப்படியொரு சாமர்த்தியம். எஞ்சியிருக்கிற 90 சதவீதத்தினர் செக்குமாடுகள்போல சாவகாசமாக வாழ்க்கையை சுற்றிவரபழக்கப்பட்டவர்கள். அந்த அசட்டு மந்தையில் நானும் ஒருவன். இப்படி எப்போதாவது எதையாவது உளறிக்கொண்டிருக்கிறேன். நியாயங்களை அல்லது நியாயங்களென்று நம்புவதை கேட்பாரற்ற(?) வெளிகளில் உதறிவிட்டு, கோடைகால காவிரிப்படுகைபோல ஈரம் காணாமல் வெப்பத்தை உண்டு பசியாறுகிறேன்.

உலகச் சிறுகதை »

தனிமை

தங்கள் அடுக்கக கட்டட வாயிலை அடைகிறார்கள். உள்வராந்தா இருட்டிக் கிடந்தது. திடுதிப்பென்று, சொல்லப்போனால் யோசனையே இல்லாமல் அவன் தன் கையில் இருந்து கத்தியை வெளியெடுத்தான். அந்தச் சந்தில் தட்டுப்பட்டானே அவன்… ஒருவேளை எங்களைக் கொல்ல முயற்சி செய்திருந்தால்?… என யோசித்தான். கத்தியை நீட்டிக்கொண்டான். ஒரு சுத்து சுத்தி மனைவியைத் தாக்கினான். ரெண்டு முறை, ஒரு டஜன் முறைகள், பைத்தாரத்தனமாய்க் குத்தினான். ஒரு அலறல். மனைவியின் உடல் சரிந்தது.

சிறுகதை »

சூரிய நமஸ்காரம்

ரமணரின் ‘நான் யார்’ என்ற கேள்வி ஒரு வாரமாகவே சடகோபனைக் குடைந்து கொண்டிருந்தது. ஓஷோ வேறு மேத்ஸ், ம்யூசிக், மெடிடேஷன் என்கிறார். முதலிரண்டோடும் சடகோபனுக்கு சுமுக உறவு இருந்ததே இல்லை. மூன்றாவது என்ன என்று புரியவேயில்லை. ‘நான் என்றால் சடகோபன்.’ இதில் வேறு என்ன இருக்கிறது என்று அவருக்குத் தோன்றியது. ஒரு வேளை ரமணர் ‘தான் யார்’ என்று நம்மிடம் கேட்கிறாரோ என்ற சந்தேகம் வேறு வந்தது.

உலகச் சிறுகதை »

நன்றி அம்மணி

பையனின் முகத்தில் இருந்து வியர்வை கொப்பளித்தது. அவன் நெளிந்தான். திருமதி ஜோன்ஸ் நின்றாள். அவனை முன்பக்கமாக சுண்டியிழுத்தாள். அவன் கழுத்தில் இறுகப் பிடிபோட்டாள். அப்படியே தெருவில் நெட்டித்தள்ளிப் போனாள். தன்வீடு வந்ததும், அவனை அப்படியே உள்ளிழுத்தாள்.

சிறுகதை »

மூடிய கதவுகள்

இப்போது குழந்தைகள் தாமே ரயில் விட ஆரம்பித்தன. கோதைதான் எல்லோருக்கும் முதலில் வழக்கம்போல் நின்று கொண்டிருந்தாள். அவள் தெருக் கோடி வரை போய் விட்டு திரும்புகையில் அவள் முன் தாடியும், மீசையும் பரட்டை முடியும் அழுக்குப் பஞ்ச கச்சமுமாக ஒரு கிழவர் தோன்றினார். குழந்தை நிமிர்ந்து பார்த்தது. அவர் அதை வாரி அணைத்துத் தூக்கிக் கொண்டார். கண்களில் நீர் பெருக அதை இறுக்க அணைத்துக் கொண்டார்.

சிறுகதை »

சுரண்டல்

அம்மாவிடமும், மனைவியிடமும் செருப்புத் தோலைக் காட்டினான். ‘இதை எதுக்கு வாங்கிண்டு வந்தே’ என்றாள் அம்மா. ‘கொடுத்தாங்க. வாங்கிண்டு வந்தேன். எல்லாம் வழக்கமா தரதுதான். அவனவன் ஆயிரம் பண்றான். இது வெறும் செருப்புத்தோல். நூறு இருநூறுதான் இருக்கும். எங்காபீஸ்ல இதெல்லாம் எல்லாருக்கும் கிடைச்சிண்டுதான் இருக்கு’ என்றான்.

உலகச் சிறுகதை »

எலெக்ட்ரீஷியன் நவாப்தீன்

உடைந்த ரேடியோக்களை வாங்கி அவற்றை சரிசெய்து மீண்டும் விற்றான். கடிகாரங்களை ரிப்பேர் செய்யும் தொழிலைச் செய்யக் கூட அவன் தயங்கவில்லை. ஆனால் அத்தொழில் அவன் செய்த தொழில்களிலேயே மிகப்பெரிய தோல்வியைக் கண்டது. வாழ்த்துகளைக் காட்டிலும், வசவுகளையே அதிக அளவில் பெற்றுத்தந்தது. ஏனென்றால் அவன் சரி செய்த கடிகாரங்கள் அதன்பின் எப்போதுமே சரியான மணியைக் காட்டியதில்லை.

சிறுகதை »

ஆச்சரியம்

கோப்புகளின் மேல் மட்டையில் ‘அவசரம்’ ‘மிக அவசரம்’ ‘உடனே’ போன்ற ஒட்டுப்பேப்பர் குறிப்புகளை அவரே ஒட்டி அனுப்புவார். அவருடைய கட்டளைகளை ஊழியர்கள் அவர் விதித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டுமானால் அவர்கள் அன்று வீட்டுக்கு போக முடியாது. அடுத்தநாளும் முடியாது. அவர்கள் கோப்புகள் கைகளில் கிடைத்ததுமே ஒட்டுப்பேப்பரை அகற்றிவிடுவார்கள். உடனே அவை சாதாரண கோப்புகளாக மாறிவிடும்.

சிறுகதை »

பஸ் ஸ்டாண்ட்

எந்த ஊர் சென்றாலும் அவ்வூரின் பஸ் ஸ்டாண்டை தாண்டி அவன் சென்றதில்லை. சினிமா பார்ப்பதற்காக வெளியே செல்வான், அதிகபட்சம் அவ்வளவுதான். மீண்டும் வந்துவிடுவான். ஒரு ஊரில் கிடைக்கும் நண்பன் அந்த ஊரோடு சரி. அவன் எந்த ஊர் சென்றாலும் வாழ்விடமாக எப்போதும் நினைப்பது பஸ் ஸ்டாண்டைதான். வாழ்வில் காணும் சுகதுக்கங்கள், ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் பஸ் ஸ்டாண்டிலே கண்டுவிட முடியும். ஒரு நல்ல அனுபவத்தை தேடும் ஒருவன் பஸ் ஸ்டாண்டை புறக்கணிப்பதில்லை என்பது அவன் கண்டுபிடிப்பு.

சிறுகதை »

புதுக்கூடு

வீட்டுக்குப் போனதும் சொல்ல வேண்டியிருக்கிற சமாதானங்கள் குறித்து இப்போதே அவன் மனதிற்குள்ளாக கோர்வையாக்கி வைத்துக் கொண்டான். அவனது பொய்கள் எளிதாக வெளிப்பட்டுவிடும். பொய் சொல்வதற்கேயுரிய சாமர்த்தியமும், மனதின் உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டாமல் இருப்பதும் அவனுக்கு வாய்க்கவில்லை.

சிறுகதை »

வாழ்க்கையின் அர்த்தம்

நசிக்கு சமீபகாலமாக வாழ்க்கையில் அதிருப்தி. மற்றவர்களின் விருப்பத்திற்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக எதாவது செய்ய ஆசை. ஆனால், அன்றுகாலை விழித்ததிலிருந்தே அது நடக்கவில்லை. ‘காப்பகத்திற்கு வரும் மற்ற பெண்கள் பார்ப்பதற்குத் தங்களுடைய அம்மாக்களைப்போல இருக்கும்போது நான் ஏன் வித்தியாசமாக இருக்கிறேன்?’ என்று படுக்கையில் படுத்தபடி யோசிப்பதற்குள் அவளப்பா கிளப்பிவிட்டார். பான்கேக் தின்பதற்குமுன் அதற்குக் கண், மூக்கு, வாய் வைத்து அழகுபார்க்க அவளம்மா நேரம்தரவில்லை.