kamagra paypal

முகப்பு » தொகுப்பு

தோட்டக்கலை பகுதியில் பிற ஆக்கங்கள்

தொழில்துறை, தோட்டக்கலை, நிகழ்வு »

கென்யாவில் பன்னாட்டு மலர் வர்த்தகக் கண்காட்சி- 2016

“நீங்க டச்சு கத்துக்கணும் வெங்கி. இத்தனை வருஷமா இந்த பூ துறையில இருந்துகிட்டு, டச்சு இன்னும் கத்துக்கலைனா கொஞ்சம் வெட்கப்படணும்; தெரியாம இருக்கிறது தப்பில்ல; கத்துக்கிட்டா இந்த துறையிலிருக்கும் உங்களுக்கு நல்லது; உங்க உலகம் பெரிசாயிடும். நட்பு வட்டம், வாய்ப்புகள், துறைசார் அறிவு அதிகமாகும்” – ஒரு வருடம் முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது செந்தில் அண்ணா சொன்னபோதுதான் உறைத்தது. ஆமாம், இத்துறையில் இருபது வருடங்கள் அனுபவங்கள் ஆகியும் ஏன் எனக்கு இது தோணவேயில்லை என்று யோசித்தேன்.