kamagra paypal

முகப்பு » தொகுப்பு

வானிலை ஆய்வியல் பகுதியில் பிற ஆக்கங்கள்

அறிவியல், வானிலை ஆய்வியல், வீடியோ »

இந்தக் காணொளியை வாசகர்களுக்குக் கொடுப்பதில் சொல்வனம் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது. இந்தியா செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய விண்கலம் 2014 இல் செவ்வாய் கிரகத்தை அடைந்து அந்தக் கிரகத்தைச் சுற்றி சுழற்சியில் அமர்ந்தது. இதன் சிறப்பு- இது இன்னொரு கிரகத்தைச் சுற்றி வர ஒரு கலத்தை அனுப்புவதில் இந்தியாவின் முதல் முயற்சி.
இந்த முயற்சிக்குப் பின்னே இருந்த மூன்று பெண் அறிவியலாளர்கள்:
1. சீதா சோமசுந்தரம் – திட்ட இயக்குனர், இஸ்ரோ இந்திய விண்வெளி ஆய்வு மையம்
2. நந்தினி ஹரிநாத் – திட்ட மேலாளர், ஏவுகணை வடிவமைப்பு – செயல்முறை இயக்குநர்
3. மினால் ரோஹித் – அறிவியலாளர் மற்றும் பொறியாளர் – செவ்வாய் கிரகத்திற்கான மீத்தேன் உணர்கருவி திட்ட மேலாளர்
இவர்களை முன்னிறுத்திக் காட்டி, மிகச் சில நிமிடங்களில் இந்தக் காணொளி இந்தியாவுக்கும், இந்தியருக்கும் பெருமிதம் மிகும்படி செய்கிறது. வணிக ஆடம்பரங்கள் …

உயிரியல், புகைப்படத்தொகுப்பு, வானிலை ஆய்வியல் »

கண்ணுக்குத் தெரியாதத்தை அகச் சிவப்பு ஒளிப்படங்கள் (infra-red photos) மூலம் உணரவைக்கிறார் எட்வர்ட் தாம்ஸன்.

அகச்சிவப்புக் கதிர்கள் வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கப் பயன்படுகின்றன.

மருத்துவத்தில் உடலிலுள்ள கோளாறுகளை இரத்தக் குழாய்களை வெப்பத்தினால் விரிவடையச் செய்து, வலிகள், வீக்கங்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவின என்பதை ஆவணமாக்கி நினைவு கூற வைக்கிறார்:

The Unseen: An Atlas of Infrared Plates என்னும் அவருடைய புத்தகத்தில் மற்ற படங்களையும் பேய்க்கதைகளையும் சுற்றுச்சூழல் கேடுகளையும் அகச்சிவப்புக் காட்சிகளாக அறியத் தந்திருக்கிறார்.
(தகவலுக்கும் படங்களுக்கும் நன்றி: த கார்டியன் செய்திப் பத்திரிகைக்கு)

புகைப்படத்தொகுப்பு, வானிலை ஆய்வியல், வேளாண்மை »

செய்தி:
1. கங்கையையும் பிரம்மபுத்ரா நதியையும் திசைதிருப்பும் திட்டம்
2. 33 கோடி இந்தியர்களை பாதிக்கும் வறட்சி
3. இத்தனை காலமாக இந்திய அரசு தண்ணீர்ப் பஞ்சம் ஆகியன குறித்து எதுவும் செய்யாமல் நீர் நிலைகளை நாடெங்கும் வீணாகப் போக விட்டதற்கு என்ன காரணம்? இது இன்று நேற்றல்ல 8000 வருடங்களாக இந்தியருக்கு இருக்கும் பிரச்சினை என்று அடுத்த சுட்டி சொல்கிறது
4. சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததற்குக் காரணமே இப்படி நீர் வேளாண்மையைப் பராமரிக்கத் தவறியதுதான் என்பது இந்தச் செய்தி. நாம் ஏன் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகவே எதையும் கற்க மறுத்த ஒரு மக்களாக இருக்கிறோம்? Oxygen isotope in archaeological bioapatites from India: Implications to climate change and decline of Bronze Age Harappan civilization : Scientific Reports

கிரிக்கெட் ஆடுவதற்காக சண்டோளா ஏரியைக் கடக்கும் …

அறிவியல், வானிலை ஆய்வியல் »

நியூட்ரினோ

நம் சூரியனிலிருந்து கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பூமியை வந்தடைகின்றன. சூரியனில் ஏற்படும் அணுக்கரு வினைகள் ஆற்றலை உமிழ்கின்றன. வெய்யோனின் ஆழத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள்– அதாவது புரோட்டான்கள்- இணைந்து ஹீலியம் அணுக்கருவை உண்டாக்குகின்றன. இந்த வினையில் உள்ள நிறை வித்தியாசம் ஆற்றலாக வெளிப்படுகிறது. மேலும் இந்த வினையில் எலக்ட்ரானின் எதிர்துகளான இரு பாசிட்ரான் துகள்களும் மற்றும் இரு நியூட்ரினோ துகள்களும் வெளிப்படுகின்றன.

அறிவியல், புகைப்படத்தொகுப்பு, வானிலை ஆய்வியல் »

பூமிக்கு ஒரே ஒரு நிலவு. சனிக்கோளுக்கோ 62 நிலவுகள் இருக்கின்றன. சனி கிரகத்தின் இரு நிலவுகள் ஆன என்சிலாடஸ் (Enceladus) மற்றும் டெத்திஸ் (Tethys) இயைந்து தோன்றிய காட்சியை காஸினி (Cassini) விண்கலம் புகைப்படம் எடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் சனியைச் சுற்றியிருக்கும் வளையங்களையும் பார்க்கலாம்.

அறிவியல், கட்டுரை, வானிலை ஆய்வியல், வேளாண்மை »

எல் நீன்யோ – தொடரும் பருவநிலை மாற்றங்கள்

தென்மேற்குப் பருவமழையளவைக் குறைத்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எல் நீன்யோ, வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்த வரை அதற்கு நேரெதிரான விளைவையே ஏற்படுத்தி வந்துள்ளது. எல் நீன்யோ நிகழ்வு நடைபெறும் நேரங்களில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்திற்கு அதிகமாகவே பெய்து வந்திருக்கிறது. இம்முறையும் அதே போல், அதிக அளவு மழைப்பொழிவே இருக்கும் என்பது வானிலையாளர்களின் கணிப்பு. மேலும் இரு முக்கிய காரணிகளான ஐஓடியும் MJOவும் இம்முறை சாதகமாக இருப்பதால், மழையளவு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வழக்கமாக அக்டோபர் மத்தியில், ஐப்பசி முதல் வாரத்தில் துவங்கவேண்டிய வடகிழக்குப் பருவமழை இவ்வருடம் தாமதமாக, அக்டோபர் 28ம் தேதி துவங்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.