முகப்பு » தொகுப்பு

அறிவியல் பகுதியில் பிற ஆக்கங்கள்

அறிவியல் »

ராக்கெட்டில் போனவர்களின் ராஜ வைத்தியம்!

அமெரிக்க ராணுவத்தினர் அடாவடி ஆக்கிரமிப்புக்களுக்காக வெளி நாடு செல்லும்போது MRE (அப்படியே சாப்பிடத் தகுந்த உணவு) என்ற பட்டைச் சாதப் பொட்டலங்களைக் கொண்டு போவார்கள். போர் முனையில் ஃபிரிட்ஜ் இல்லாத இடத்தில்கூடக் கெட்டுப் போகாமல் இருக்க, அதிகக் காற்றழுத்தத்தில் சூடாக்கிக் கிருமி நீக்கம் செய்வார்கள். இந்த டெக்னாலஜியையும் நாசா உபயோகித்துக் கொள்கிறது. அமெரிக்க நாக்கு போர் முனையில் கூட சுடச்சுட சாப்பாடு கேட்கிறது போலிருக்கிறது.

அறிவியல், திரைப்படம் »

பெண்ணின் நெருப்பு

கண்ணகி கற்பனையும் வரலாறும் கலந்து ஒரு நீங்காத தொன்ம நினைவாக தமிழ் மனதில் வாழ்கிறாள். சலேம் சூனியக்காரி விசாரணைகளையும், சந்தையையும், அடிப்படைவாத கிறிஸ்தவத்தையும் கொண்ட அமெரிக்கப் பண்பாட்டில் ஒரு கண்ணகி வழிபாட்டை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதன் மலினப்படுத்தும் பண்பாட்டில் அடக்கப்படும் பெண்மையின் மீதான ஆண்-சமுதாயத்தின் அச்சப்பார்வை, கூடிப்போனால் க்கேரி அல்லது ஃபயர்ஸ்டார்ட்டர் போன்ற பயமுறுத்தும் திரைப்படங்களாக மட்டுமே வர முடியும்.

சமூக அறிவியல் »

வெறும் பலகையும், இரும்புத் திரையும்

மனித இயல்பு அடிப்படையில் களங்கமில்லாதது: எதுவும் போதிக்கப்படாத குழந்தைப் பருவத்திலும், நாகரீகத்தின் சுவடுகள் பதிக்கப்படாத வனவாசத்திலும் மனிதன் உள அளவில் அடையக்கூடிய வல்லமைகள் அளவிறந்து இருக்கின்றன என்ற கருதுகோளை நம்மில் பலர் ஏற்றுக் கொள்வோம் என்று நினைக்கிறேன். தரமில்லாத கல்வி அவனது அறிவை மேம்படுத்தத் தவறுகிறது, நாகரீகமயமாதல் தொழில்நுட்பச்சார்பை அதிகரிக்கின்ற காரணத்தால், அதன் தீவினையாய் அது மனித மனதை வக்கிரப்படுத்துகிறது என்ற வாதம் இந்தக் கருதுகோளின் நீட்சியே.

அறிவியல் »

மருந்து வாங்கப் போனேன், வியாதி வாங்கி வந்தேன்!

சூப்பர் கிருமிகள் வளர்வதற்கு நம் பொறுப்பில்லாத மருந்து சாப்பிடும் பழக்கங்கள் காரணம். ஒவ்வொரு ஆண்ட்டி பயாடிக்காக அளவுக்கு மீறி உபயோகித்து, அதற்கு அடங்காத கிருமிகளை உற்பத்தி செய்து தள்ளிவிட்டோம். நம்ம ஊரில்தான் மெடிக்கல் ஷாப்காரர்களே பாதி டாக்டர்கள் ஆச்சே ? அவர்களே இஷ்டத்துக்கு எடுத்துக் கொடுக்க, நாமும் பல்லி மிட்டாய் மாதிரி பிடிப் பிடியாக விழுங்கி வைக்கிறோம். ரொம்ப தப்பு !

அறிவியல், திரைப்படம் »

ஹாலிவுட் அறிவியல்: காலப்பயணம் - 2

எலெக்ட்ரான்களும் ஃபோட்டான்களும் காலப்பிரவாகத்தில் செய்யும் திசை மாற்றங்களை உங்கள் எதிர்வீட்டு பெண்ணும் செய்யமுடியுமா? செய்யமுடியும். உண்மையான கேள்வி - அதற்கான நிகழ்தகவு சாத்தியமாகுமா? உங்கள் கோப்பை தேநீர் தானாக சூடாகுமா? உங்கள் துணையின் கோபம் தானாகக் குளிரடையுமா? வெப்ப இயங்கியலின் இரண்டாம் விதியின் புள்ளியியல் ஓட்டைகளுக்குள்ளாக கால இயந்திரத்தில் நாம் பயணிக்கமுடியுமா?

அறிவியல் »

அத்தனை கேஸும் முத்தின கேஸ்!

காதலனுடன் சண்டை போட்டுக்கொண்ட இளம் பெண் மனச் சோர்வு அடைந்து, இறுகிய முகத்துடன் பார்க்கில் உட்கார்ந்து புல்லைக் கிள்ளிக் கிள்ளிப் போடுவது, கடைசியில் அந்த ராஸ்கல் செல்போனில் கூப்பிடும்போது துக்கத்தில் பேச்சு வராமல் தடுமாறுவது - இதற்கெல்லாம் பெயர் ‘அட்டென்யுவேடட் சைக்காடிக் சிம்ட்டம்ஸ் சின்ட்ரோம்’. எல்லாவற்றையும் விட விசேஷமான வியாதி, ‘டெம்ப்பர் டிஸ்ரெகுலேஷன் டிஸார்டர்’ எனப்படுவது. இது வேறொன்றுமில்லை, மனிதனாகப் பிறந்தவனுக்கு சில சமயம் கோபம் வருகிறதே, அதுதான் !

அறிவியல் »

தூணிலும் போஸான், துரும்பிலும் போஸான்!

இந்த ஹிக்ஸ் போஸான் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளுக்குப் பல வருடமாகத் தண்ணீர் காட்டி வரும் சின்னஞ் சிறு பொருள். அதைக் கண்டுபிடிக்கத்தான் 37 நாடுகளில் விஞ்ஞானிகள் பைப் புகைத்துக்கொண்டு பொறுமையில்லாமல் காத்திருக்கிறார்கள். இதில் அமெரிக்காக்காரர்களும் ஐரோப்பியர்களுக்கும் யார் முந்தி என்று போட்டா போட்டி வேறு!

அறிவியல், திரைப்படம் »

ஹாலிவுட் அறிவியல்: காலப்பயணம் - 1

ஐன்ஸ்டீன் வெற்றிகரமாக நிகழ்த்தியதொரு ஆதார இயற்பியல் கண்டுபிடிப்பை உபயோகித்து, அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 1943-இல் ஒரு கப்பலை காண முடியாமல் ஆக்கினார்களாம். இதனால் கப்பல் சிப்பந்திகள் சிலர் காலப்பயணத்துக்கு ஆட்படுத்தப்பட்டார்கள் என்றார்கள் என்றும், இதனை வெளியுலகுக்கு சொன்ன மனிதர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்லப்பட்டது.

அறிவியல், திரைப்படம் »

மாட்ரிக்ஸ்: இயந்திரம் படைத்த மாயையின் பொன்னுலகு

மாட்ரிக்ஸ் திரையமைப்பில் மற்றொரு பண்பாட்டின் பெண் தெய்வத்தை இயக்குநர் நுட்பமாக உள் நுழைக்கிறார். மேலே சொன்ன ஞானமரபுக் கதையின் வேர்களை நாம் கேனோபநிஷத்தில் காணலாம். அதில் அகந்தை கொள்ளும் தேவர்களுக்கு ஞானம் அளிப்பவள்: உமா. மாட்ரிக்ஸ் கதையில் ஞானம் அளிப்பவளாகச் சித்தரிக்கப்படுபவள் - சதி என்கிற சிறிய இந்தியப் பெண். இந்தியத் தொன்மத்தில் சதியின் மறுபிறவியே ஹிமவானின் சிறிய மகளான உமா.

அறிவியல், நகைச்சுவை »

விஞ்ஞானிகளும், நகைச்சுவையும்

விஞ்ஞானிகள் பொதுவாக மிகவும் சீரியஸானவர்கள் என்று நாம் நினைக்கிறோம். நம் புத்தகங்களில் கருப்பு வெள்ளையில் அவர்களை சோகமாக தாடியுடன் படம் போட்டு மேலும் இந்த எண்ணத்தை வளர்க்க நம் பாட நூல் வெளியீட்டாளர்கள் தூபம் போடுகிறார்கள். பாடப்புத்தகத்தில் ஏதாவது ஒரு விஞ்ஞானி தன் குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடுவதைப் போல எங்காவது யாரவது பார்த்து ‘சொல்வனத்திற்கு’ அனுப்பினால் ஹமாம் க்ருஹப்ரவேசம் வீடு கொடுப்பதாகக் கூட அறிவிக்கலாம். பல விஞ்ஞானிகள் மிகவும் தேர்ந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்.

அறிவியல், சூழலியல் »

எண்ணெய்ச் சிதறல் பற்றி : சில எண்ணச் சிதறல்கள்

முதலில் “இது ரொம்பச் சின்ன விபத்து. கவலையே வேண்டாம்” என்று சாதித்தார்கள். பிறகு கிணற்றிலிருந்து பத்து மைல் நீளம், மூன்று மைல் அகலத்தில் ராட்சச எண்ணை ஊற்று பீச்சி அடிக்க ஆரம்பித்தது. சேற்றையும் சிமெண்ட்டையும் கொட்டித் துளையை அடைக்கப் பார்த்தார்கள். பெரிய டப்பாவைக் கவிழ்த்து மூட முயற்சித்தார்கள். எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டு இரண்டு மாதமாக எண்ணெய் உற்சாகமாகக் கொப்பளிக்கிறது. இனி யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. “அமெரிக்க அரசாங்கம் அங்கே ஒரு அணு குண்டைப் போட்டால் கடலடிப் பாறைகள் உருகிக் கிணறு அடைத்துக் கொள்ளும்” என்று கூட ஒரு ஐடியா வந்தது. அடைத்துக் கொள்வதற்கு பதிலாக ஓட்டை இன்னும் பெரிசாகிவிட்டால்?

அறிவியல், இறையியல், திரைப்படம் »

மனிதனாக விரும்பிய இயந்திரர்கள்

அஸீமோவ்வின் “Robots as pathos” என்பதன் ஒரு உச்சமாகவே இந்த திரைப்படத்தை நாம் கருதலாம். இத்திரைப்படத்தின் ஊடாக ஒரு சிறிய பரிணாம வளர்ச்சியைக் காணலாம். திரைப்படத்தின் தொடக்கத்திலேயேமொரு முக்கிய கேள்வி எழுப்பப்படுகிறது. உணர்ச்சிகளை உள்ளடக்கிய ரோபாட்களை -செயற்கை நுண்ணறிவை - உருவாக்கினால் அத்தகைய உருவாக்க்கங்களுடன் மானுடத்தின் கடப்பாடு என்னவாக இருக்கும்?

அறிவியல் »

எந்தக் கடையில் வாங்கின மூக்கு?

ஒரு பக்கம் செயற்கை உயிர், அது இது என்று உதார் விட்டுக்கொண்டு அந்தப் பதினைந்து நிமிஷப் புகழ் மழையில் செயற்கையாக நனைந்துவிட்டு, ஈரம் உலர்ந்தவுடன் மறக்கப்படுகிற விஞ்ஞான ஆராய்ச்சிகளும் இருக்கின்றன. ஆனால் மருத்துவ இயலில் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான முன்னேற்றங்களும் மற்றொரு பக்கம் ஓசைப்படாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக டிஷ்யூ எஞ்சினியரிங் என்ற இயலைச் சொல்லலாம்.

அறிவியல், இறையியல், திரைப்படம் »

ரோபோட்கள்: ஞான உச்சமாகவும் விலக்கப்பட்ட கனிகளாகவும்

செயற்கை மனித இயந்திரத்தை உருவாக்குவது மானுட அகங்காரத்தின் வெளிப்பாடாக காணப்பட்டது. …மானுடனை ஆன்மாவுடன் உருவாக்குவதென்பது கடவுளால் மட்டுமே முடிந்த ஒன்று. எனவே மனிதன் உருவாக்கும் செயற்கை மனிதன் ஆத்மா இல்லாத ஒரு வக்கிரமே. எனவே ஒரு செயற்கை மனிதனை உருவாக்குவதே தீமையில் தான் முடியும் ஏனெனில் மனிதன் அறியப்படக்கூடாத இரகசியங்கள் இருக்கின்றன என்பதே மீண்டும் மீண்டும் (புனைவுகள் மூலமாக) உபதேசிக்கப்பட்டன.

அறிவியல், பேட்டி »

கடவுள் நமக்குத் தேவையா?

இஸ்லாமிய நாடுகளில் கல்வித்திட்டத்தின் மீது மத ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு அமெரிக்காவிலும் மத ஆதிக்கம் இருக்கிறது. தொழிற்வளம் முன்னேறிய (இஸ்லாமிய) நாடுகளில் நம்மை துருக்கியுடன் ஒப்பிடலாம். சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைவிடவாவது நாம் சில படிகள் மேலே இருக்கிறோம் என்றே நான் நினைக்க விரும்புகிறேன்.