முகப்பு » தொகுப்பு

தாவரவியல் பகுதியில் பிற ஆக்கங்கள்

தாவரவியல் »

நிறத்தைத் தந்தவர் யார்? - ஓர் அறிவியல் பார்வை

இலைகள் ஏன் பச்சைநிறத்தில் இருக்கின்றன என்று யாராவது கேட்டால், அதிலுள்ள பச்சையத்தால் என்று உடனே பதில் சொல்லிவிடலாம். கீரை எப்படி பச்சையாக இருக்கிறது என்றால் அதற்கும் இதே பதிலைச் சொல்லிவிடலாம். நம் கண்களில் அன்றாடம் தென்படும் கமலாப்பழத்தின் காவி நிறத்திற்கோ, கத்தரிக்காயின் கத்தரி நிறத்திற்கோ காரணி யார்? நம் அருகிலேயே இருக்கும் சில நுணுக்கமானவற்றைக் கவனிக்க மறந்துவிடுகிறோம் அல்லது தவறிவிடுகிறோம். இயற்கை பல புதிர்களை எளியமுறையில் நாளும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.