kamagra paypal

முகப்பு » தொகுப்பு

The Archives

நேர்காணல் »

எம்.கோபாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்

என்னைப் பொறுத்தவரையில் எல்லா மட்டங்களிலுமே தொழிற்சங்கங்கள் வலுவிழந்துவிட்டன என்றுதான் தோன்றுகிறது. திருப்பூரும் அதில் விதிவிலக்கல்ல. ஆனால் திருப்பூரில் பனியன் தொழிலாளிகளுக்கான அடிப்படை உரிமைகளை அமைத்துக் கொடுத்ததில் தொழிற்சங்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு. தொழிலாளர்களுக்கு இன்று சாத்தியமாகும் ஒவ்வொரு விஷயத்திலும் சங்கங்களின் பங்களிப்பு என்பது முக்கியமான ஒன்று. இன்றும் பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் நடக்கிறதா என்ற கேள்விக்கு அவசியமே இல்லை. மணல்கடிகை நாவலில் இதைப் பற்றிய எனது பார்வை தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.

ஆன்மீகம், இறையியல், இலக்கியம், புத்தகவிமர்சனம் »

வெண்முரசு – ஒரு பார்வை

எத்தனை முறை படித்தாலும், நாடகமாகவோ திரைப்படமாகவோ பார்த்தாலும் அலுக்காத ஒன்று மகாபாரதம். நவீன காலத்தில் அது பல இந்திய மொழிகளில் பலவாறு மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் நான் மொழியாக்கங்கள் வழியே படித்திருப்பவை கன்னடத்தில் பைரப்பாவின் பர்வம், மலையாளத்தில் இரண்டாமிடம் (எம் டி வி), இனி நான் உறங்கலாமா (பி.கே பாலக்ருஷ்ணன்) மராத்தியில் யயாதி (காண்டேகர்). ஆனால் ஏனோ மகாபாரதம் தமிழ் இலக்கியவாதிகளை பெரிதும் கவரவில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் ராஜாஜி எழுதியது வியாசபாரதத்தின் சுருக்கமான நேரடி தமிழாக்கம், ராஜாஜியின் தனிக்கற்பனை கலவாத நூலென்பதால் அதை மறு ஆக்கம் என்று சொல்ல முடியாது.

அனுபவம், ஆளுமை, புத்தக அறிமுகம் »

விட்டல் ராவ் – ஓர் ஆளுமை மற்றும் இரு நூல்கள்

அதேபோல் ஹோசூரில் kenilworth castle என்ற ஒன்று இருந்தது மிக அழகாக இதில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள அதே பெயருள்ள கோட்டைப் போலவே இங்கும் ஒரு வெள்ளைக்கார அதிகாரி தன காதலிக்காக கட்டினான் என்பதும் காதலில் ஏமாற்றம் அடைந்தபின் தன நாயை சுட்டுக் கொன்றுவிட்டு அந்தக் கோட்டையிலேயே தானும் தற்கொலை செய்து கொண்டான் என்பதும் அந்தக் கெனில்வொர்த் கோட்டைக்கு ஒரு காவியத் தன்மை தருகின்றன.

எதிர்வினை, புத்தகப் பகுதி »

வந்தாரங்குடி புத்தக விமரிசனம் – வாசகர் எதிர்வினை

ஆனால் இந்தப் போராட்டத்தை கண்மணி முற்றிலும் வன்னிய சாதியினரின் போராட்டமாக சுருக்கித்தான் விட்டார், வன்னியரல்லாத சமூகங்கள் இந்த நிகழ்வை எப்படி எதிர் கொண்டன என்பது குறித்த பதிவுகளே இந்த நாவலில் இல்லை.

அனுபவம், ரசனை »

சன்னமான குரல்

“எனக்கு….இந்த ஆன்மீகம், தேடல் போன்ற வார்த்தைகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. சொல்லப் போனா அந்த மாதிரி வார்த்தைகளே எனக்குக் கொஞ்சம் பயம். பாருங்கோ, நான் ஒரு நல்ல டூத் பேஸ்டையே ரொம்பக் காலமா தேடிண்டிருக்கேன் அதுவே இன்னும் கிடைச்ச பாடில்ல, இதுல ஆன்மிகமெல்லாம்எப்படித் தேடறது”.

புத்தகவிமர்சனம் »

ஒரு மாபெரும் தேடல்

இந்த நூல் பிரமிக்கத்தக்க புள்ளிவிவரங்கள் மற்றும் மேற்கோள்களின் தொகுப்பாக இருக்கிறது. பொதுவாகவே நம் அனைவருக்கும் கடந்துபோன பொற்காலத்தைக் குறித்த ஒரு மயக்கமும் நமக்குப் பின்னால் வருவது ஒரு பேரழிவே என்ற எண்ணமும் உண்டு. இந்த மனநிலையை மிகக் கறாரான புள்ளிவிவரங்களைக் கொண்டு நிராகரிக்கிறது இந்நூல். உதாரணமாக, 1776ல் ஆதாம் ஸ்மித், ஒரு சராசரி ஆங்கிலேயன் பண்ணைத் தொழிலாளி என்றும் அவனது வாழ்க்கைத் தரம் ஒரு ரோமானிய அடிமையின் வாழ்க்கைத் தரத்தைவிட உயர்ந்ததல்ல என்றும் குறிப்பிடுவது இந்நூலில் நினைவு கூரப்படுகிறது.

புத்தகவிமர்சனம் »

எல்லைகளுக்கு அப்பால் – குல்திப் நய்யார் சுயசரிதை குறித்து

தற்போது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரில் ஒரு பிரபல மருத்துவரின் மகனாகப் பிறந்த நய்யார் லாகூர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை நிறைவு செய்து வெளிவந்தவுடன் இந்தியப் பிரிவினைக்கு ஒரு நேரடி சாட்சியாக இருக்க நேரிடுகிறது. தாமும் தம்குடும்பமுமே அகதிகளாக இந்தியாவுக்கு வந்து மற்ற எத்தனையோ எண்ணற்ற அகதிகளைப்போல் தம் வாழ்வையும் புதிதாக ஆரம்பிப்பதிலிருந்து துவங்குகிறது இந்தச் சுயசரிதை. சியால்கோட் நகரிலிருந்து டெல்லிக்கு வரும் வழியில் தங்களது அனைத்தையும்க ணப்பொழுதில் இழந்து பிச்சைக்காரர்களாகவும் நாடோடிகளாவும் மாற நேரிட்ட எண்ணற்ற மனிதர்களில் ஒருவராகிறார் குல்தீப் நய்யார்.

ஆளுமை »

ஆதவனின் புனைவுலகம்

எந்த ஒரு எழுத்தாளரின் படைப்பையும் நாம் ஏன் விரும்புகிறோம்? அவர் நம் புரிதலுக்கான புதிய வாசல்களைத் திறக்கிறார் என்பது ஒன்று. இன்னொன்று, நமக்கு மிகவும் பரிச்சயமான, நாமறிந்த உலகைக் குறித்தும் அதன் மனிதர்களைக் குறித்தும் நாம் என்ன நினைக்கிறோமோ, அதையே நம்மைவிட அழகாக, மிகச் சரியான சொற்களால் படம் பிடித்துக் காட்டுகிறார். காகித மலர்களைப் படித்தபின் எனக்கு மேற்சொன்ன இரண்டுவித உணர்வுகளும் ஒரே சமயத்தில் ஏற்பட்டன. செல்லப்பாவும் விஸ்வமும் கணேசனும் பத்ரியும் எனக்கு மிக நெருக்கமானவர்களானார்கள். அவர்களில் என்னில் பல பகுதிகளைக் கண்டேன், அவர்கள் என் வெவ்வேறு முகங்களைப் பிரதிபலித்தார்கள்.