kamagra paypal

முகப்பு » தொகுப்பு

The Archives

எழுத்தாளர் அறிமுகம், குற்றப்புனைவு, புத்தக அறிமுகம் »

தன்மானத் தேடல் – ரேமண்ட் சான்ட்லரின் ஃபிலிப் மார்லோ

உண்மை எது பொய் எது என்ற தெளிவில்லாத மார்லோவின் உலகில் போலீஸ்காரர்கள் வராமல் இருக்க முடியாது. சான்ட்லரின் போலிஸ்காரர்கள் லட்சியவாதிகள் அல்ல, முழுக்க முழுக்க ஊழலானவர்கள் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட, யதார்த்தத்தை ஒட்டிய பாத்திரங்களைக் கொண்டு சான்ட்லர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையை அடைகிறார். சான்ட்லரின் கதைகளில் மார்லோ அத்தனை வகை போலீஸ்காரர்களையும் சந்திக்கிறான். சிலர் வன்முறையால்தான் குற்றங்களை ஒடுக்க முடியும் என்றால் அப்படியே ஆகட்டும் என்று நினைப்பவர்கள், சிலர் மிகவும் கடுமையான காவல்துறைப் பணியைத் தங்களால் இயன்ற அளவு நன்றாகச் செய்ய முயற்சி செய்பவர்கள்.

இலக்கிய விமர்சனம், புத்தகவிமர்சனம் »

ராக் தர்பாரி

வைத்யஜி தன் குடும்பத்தினரை மட்டும் நன்றாக கவனித்துக் கொள்கிறவர் என்று நாம் அவரைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது, அவர் தன் விசுவாசிகளின் நலனிலும் அக்கறை கொண்டவர். அரசியலில் தலைவருக்கு விசுவாசமாக இருப்பதைப் போன்ற பணம் கொழிக்கும் தகுதி வேறு எதுவும் இல்லை, விசுவாசத்தை மட்டும் வெளிப்படுத்தத் தெரிந்தால் போதும், வேறெந்த திறமையும் தேவையில்லை. விசுவாசம் என்று சொன்னால், கட்சி, கொள்கை என்று குழப்பிக் கொள்ளக்கூடாது – தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் மட்டும் போதும். வைத்யஜியின் வீட்டில் இப்படிப்பட்ட ஒரு விசுவாசமான வேலைக்காரன் இருக்கிறான்.

திரைப்படம் »

அழிவிலிருந்து மீண்ட மிருணாள் சென்னின் திரைப்படம்

மிருணாள் சென்னின் படைப்புகள் திரையிடப்படமுடியாமல் போனதையடுத்து, பல கண்டனக்குரல்கள் எழுந்தன. அதையடுத்து இந்திய அரசு கிட்டத்தட்ட அழிந்த நிலையிலிருக்கும் முக்கியமான இந்தியத் திரைப்படங்களை மீட்கும் ஆணையைப் பிறப்பித்தது. அந்தத் திட்டத்தின் கீழ் சரிசெய்யப்பட்டுவரும் பல திரைப்படங்களில் மிருணாள் சென்னின் திரைப்படங்களும் அடக்கம். அவ்வாறு மீட்கப்பட்ட மிருணாள் சென்னின் திரைப்படங்களில் ஒன்றான “கண்டர்” திரைப்படம் 2010-ஆம் ஆண்டு கேன் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.

திரைப்படம், ரசனை »

அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘நிழல்குத்து’

1940-களில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் இந்த விசித்திரமான வழக்கம் இருந்தது. மரணதண்டனை விதிக்கப்பட்ட எல்லோரின் தண்டனையையும் மகாராஜா ரத்து செய்துவிடுவார். அனால் அந்த செய்தி வரும் முன் குற்றவாளி தூக்கிலிடப்பட்டிருப்பான். மகாராஜா மரணதண்டனையை ரத்து செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும். அதைப்போல, அந்த பத்திரம் வரும் முன் குற்றவாளியைத் தூக்கில் ஏற்றி விடுவார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும். தெரிந்தே நடத்தப்படும் நாடகம் இது.

இசை »

ஹிந்தித் திரையிசையில் கஸல்

கஸல் பாடல்களில், இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் கவிதைக்கும் கொடுக்கப்படுகிறது. வார்த்தைகளின் அழகும், சந்தத்தின் நேர்த்தியும், மெட்டுகளின் இனிமையும், மனம் கவர் ராகங்களும் ஒன்று சேர இருக்கும் கஸல் பலரை மயக்கியதில் ஆச்சரியம் இல்லை. (அதே சமயம், ஒரு பாடல் மென்மையாக இருப்பதினாலோ, கவிதை நன்றாக இருப்பதினாலோ அதை கஸல் என்று சொல்லி விடமுடியாது. அந்த பாடல் வரிகள் கஸல் இலக்கணத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும்.) இந்த அருமையான வடிவம் திரையிசைக்கு உகந்ததாக இருந்தது. இருப்பினும், கஸலை திரைசையில் பொருத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல.

திரைப்படம் »

மேகத் தொப்பி அணிந்த நட்சத்திரம்

கடக் படங்கள் சமூகத்தின் அன்றைய நிலை பற்றியும், அகதிகளின் நிலை பற்றியும், அன்றைய குடும்பங்களின் நிலையை பற்றியும், இந்த சூழலில் தனிமனிதன் எதிர்க்கொள்ளவேண்டிய சவால்களை பற்றியும் பேசின. எந்த சமரசமின்றியும் எடுக்கப்பட்ட படங்கள் இவை. இவர் படங்கள் யதார்த்தவாத படங்கள் என்று சொல்லலாம். இவர் எல்லா படங்களிலும் இசையை வெகு நேர்த்தியாக பயன்படுத்தியிருப்பார். வெகு அருமையான ஹிந்துஸ்தானி மரபிசை பாடல்களும், ரபீந்திர சங்கீத் பாடல்களும், வங்க கிராமிய இசை பாடகளும் இவர் படங்களில் நமக்குக் கேட்க கிடைக்கும்.

அனுபவம், இசை »

முக்தாம்மாவுடன் ஒரு மணி நேரம்

2004-ஆம் ஆண்டு தொண்ணூறு வயது இருக்கும் முக்தம்மா கீழே விழுந்ததில் அவர் தலையில் அடிபட்டு நினைவிழந்து இருந்தார். எங்களை யார் என்று அறிந்து கொள்வது அவருக்குக் கடினமாக இருந்தது. அனால் அந்த நிலையிலும் அந்த பந்துவராளி பதத்தின் ஒரு சங்கதியும் அவர் நினைவைவிட்டு அகலவில்லை. எந்த ஒரு பிழையுமில்லாமல் பாடினார்.

நேர்காணல் »

‘இசையால் வளமாகும் ஆளுமை’ – ஆர்.கே.ஸ்ரீகண்டனுடன் ஒரு நேர்காணல்

பெங்களூரில் வசிக்கும் கர்நாடக சங்கீத மேதை ஆர்.கே.ஸ்ரீகண்டன் அவர்களுக்கு இந்த வருடத்துக்கான பத்மபூஷண் விருது கிடைத்ததைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. 91 வயதான ஸ்ரீகண்டனுக்கு எழுபது வயதுதான் என்று சத்தியம் செய்து கூறலாம். எல்லோரும் நம்பிவிடுவார்கள். மெலிந்த தேகம், கூர்மையான பார்வை, சின்ன ஓசையையும் துல்லியமாகக் கேட்கும் காது. அவர் பேச்சு, பாவனை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி. மிக அருமையாகத் தமிழ் பேசுகிறார். கையோடு எடுத்துப் போயிருந்த லாப்டாப்பில் சொல்வனத்தில் வந்த சில இசைக்கட்டுரைகளைக் காட்டினேன். ஆர்வமாகப் படித்துப் பார்த்தார். சாவகாசமாகப் படித்துப் பார்க்கவேண்டும் என்று அக்கட்டுரைகளின் ப்ரிண்ட்-அவுட்டுகளைத் தரச்சொல்லிக் கேட்டார். பின் உரையாடத் தொடங்கினோம்.

இசை »

தெலுங்கு மக்கள் மனதில் கே.வி.மகாதேவன்

தெலுங்குக் கவிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் சாஹித்யதிற்கு மேலும் மெருகூட்டியது, கே.விஸ்வநாத், பாபு போன்ற சிறந்த இயக்குனர்களின் பார்வையைப் புரிந்து கொண்டு அவர்கள் படங்களை தன் இசையால் சிறப்பித்தது, நாட்டார் இசை, மரபிசை இரண்டிலும் சிறந்த பாடல்களைத் தந்தது போன்ற காரணங்களால் கே.வி.மகாதேவன் தெலுங்கு மண்ணில் பெரிதும் கொண்டாடப்பட்டதொரு இசையமைப்பாளராகத் திகழ்ந்தார்.

இசை »

கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும்

மேற்கத்திய இசையின் பல கூறுகளை இசையமைப்பாளர்கள் கற்றுக்கொண்டு அவற்றைத் திரையிசையில் புகுத்துவது வழக்கமானது. இக்காலகட்டத்தில்தான் கே.வி.மகாதேவனின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. கர்நாடக இசையின் ராகங்களின் அழகைச் சிதைக்காமல், அவற்றின் பாவங்கள் வெளிப்படும் வகையில், மாறிவரும் நவீனத் திரையிசைச் சூழலுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகும் வகையில் அவர் பாடல்கள் அமைக்க ஆரம்பித்தார்.