kamagra paypal

முகப்பு » தொகுப்பு

The Archives

ஆளுமை, இயற்கை விவசாயம் »

அரியன்னூர் கலசப்பாக்க அற்புதங்கள்

ஜெயச்சந்திரன் பெருமையாகக் கூறும் விஷயம் அரியன்னூர் ஆல மரங்கள். அரியன்னூரின் தனிச்சிறப்பு பறவைகளால் உருவாக்கப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தால் ஏரிகளில் நீர் வற்றுவதில்லை. எல்லாம் திறந்தவெளிக் கிணறுகளே. அந்த ஊரில் யார்ம ஆழ்துளை கிணறு இறக்காமல் மழை நீர் செமிப்பால் கிணறுகள் ரீசார்ஜ் ஆகின்றன. இவர் தலைவராயிருந்தபோது அரியன்னூர் உயிர்ச்சூழல் கிராமமாக அறிவிக்கப்பட்டு மாநில அரசு பாராட்டு பெற்றுள்ளது.

இயற்கை விவசாயம் »

முகுந்தன் – முரளி: புலியின் வாரிசுகள்

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நம்மாழ்வார் செங்கற்பட்டு ஏரியின் எதிர்வாயிலில் ’கார்ட்’ என்கிற தொண்டு நிறுவனத்தில் ஒரு சக்தியாக இயங்கி வந்த காலகட்டத்தில் ஓர் இயற்கை விவசாயக் கருத்தரங்கை நடத்தினார். பசுமைப்புரட்சியின் கரிய விளைவுகளைப் பற்றி அங்கு எனக்குப் பேச வாய்ப்பு வழங்குமுன், என் சரியானபடி இயற்கை விவசாயிகளிடையே அறிமுகமும் செய்தார் அதுதான் எனது முதல் மேடைப்பேச்சு.

அனுபவம், இயற்கை விவசாயம், தாவரவியல் »

பயின்ற பாடங்கள் – சுந்தரராமன், சித்தர்

சரியான தடம் புரியாமல் தத்தளித்து வந்த சூழ்நிலையில் அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் சன் டி.வி. “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சியில் எனது பேட்டியைக் கண்டு கவனமாகக் கேட்டார். இயற்கை விவசாயத்தின் தேவையையும் எப்படி கொண்டு செல்ல வேண்டுமென்றும் சற்று விவரமாகப் பேசினேன். ஒரு மணி நேர நிகழ்ச்சி என்பதால் நிறைய பேசும் வாய்ப்பு இருந்தது. பேட்டி முடிந்த மறுகணமே என்னைத் தேடி வந்து சந்திக்க ஆர்வமாக இருந்தார்.

இயற்கை விவசாயம், கட்டுரை, மனித நாகரிகம், வேளாண்மை »

வாழ்வியல் ரகசியங்கள்

“நாம் வாழும் இந்த உலகத்தில் நல்ல கருத்துகளைக் கூறும் தலைவர்களுக்கும் அணிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஒப்பற்ற ஒரே லட்சியத்தை நோக்கி, இணையாத இரு கோடுகளாக இயக்கங்கள் செல்வதைக் கவனிக்க முடிகிறது. ஒன்றாக இயங்கத் தயக்கம் காட்டுவதும் புரிகிறது. ஒருங்கிணைந்து செயலாற்றி ஒரு வலைப்பின்னலை உருவாக்கி சாதனை செய்வது அவசியம். இயற்கை விவசாயத்தில் மாறுபட்ட சிந்தனையுள்ளவர்களை ஒருங்கிணைத்துச் செல்ல இந்த நூல் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நூல் காலத்தால் அழியாத ஒரு கருத்துப் பெட்டகமாகவும் விளங்குகிறது. இயற்கை விவசாயத்திற்குப் பாடுபட்டு வரும் முன்னோடிகளுக்கும் ஒப்புதலை இந்த நூல் வழங்குவதும் ஒரு சிறப்பு. “

இயற்கை விவசாயம், வேளாண்மை »

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் – ஆர். எஸ். நாராயணன்

நம்மாழ்வாரை நான் சந்தித்தபோது எனக்கு தாடி இல்லை. நான் வேட்டியும் அணிவது இல்லை. அரசு அலுவலர் பாணியில் பேண்ட், ஷர்ட், கிராப்புத் தலை வைத்திருந்த என்னோடு நம்மாழ்வார் நட்பு பாராட்டினார். அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களிலும் நடத்தும் மாநாடுகளிலும் என்னை முதல் பேச்சாளராகப் பேச அனுமதித்தார். அவர் ஏன் சிகை வளர்க்கிறார், தாடி வைத்துள்ளார் என்று எனக்குத் தெரியாது.

அனுபவம், வேளாண்மை »

மாடியில் ஒரு உணவுத் தோட்டம்

அடுத்த கட்டமாக பூந்தொட்டிகளுடன் சிமெண்டு சாக்கில் மண் நிரப்பி பயிர் எழுப்பும் யோசனை வந்தது. சிமெண்டு சாக்கு உயரத்தைக் குறைத்து – அதாவது, உட்புறமாக மடித்து பாதி சாக்காக மாற்றி, உள்ளே நிறைய காய்ந்த சருகுகளை அடைத்துவிட்டு அடிப்பாகத்தைச் சற்று கிழித்துவிட்டு போதிய மண் நிரப்பி இரண்டு செங்கல் வைத்து அதன்மீது வைத்தேன். நீர் வடியும். தளத்திற்கும் பாதிப்பு வராது. அவ்வாறு சிமெண்டு சாக்கில் மண் நிரப்பி பயிரிடும்போது மரப்பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

இயற்கை விவசாயம் »

சுரபாலரின் விருட்சாயுர்வேதம்

நிலத்தின் அடிப்படை வேற்றுமைகள் மூன்று. சதுப்பு நிலம், வறட்சி நிலம், சாதாரண நிலம் என்று பிரித்துள்ள சுரபாலர் மண்ணின் நிறம் மற்றும் ருசியைப் பொருத்து 12 வகைகள் என்கிறார். முவ்வகை நிலத்துக்கு ஏற்றாற்போல் மொத்தம் 36 வகைப்பட்டதாக மண்வளத்தைப் பிரிக்க முடிகிறது. மண்ணின் ஆறு நிறங்களாவன : கருப்பு, வெள்ளை, வெளிர், கரிநிறத்துக் கருமை, செம்மை, மஞ்சள். அறுசுவையான இனிப்பு, புளிப்பு, உப்பு, உரைப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகியவை மண்ணின் குணங்கள்.

இயற்கை விவசாயம் »

மண்புழு உறவு – நம் வழி வேளாண்மை

ஒரு காலகட்டத்தில் நன்கு வளர்ந்த ஒரு மண்புழு ஒரு ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டது. எனக்கு இந்த விவரமெல்லாம் தெரியாது. எல்லாருக்கும் இலவசமாக வழங்கினேன். 2001-ல் சத்தியமங்கலம் சுந்தரராமன் என் வீட்டுக்கு வந்தார். என்னிடமிருந்து புழுக்களைப் பெற்றுக் கொண்டு யாருக்கும் புழுக்களை இலவசமாக வழங்காதீர்கள், அவர்கள் அதன் மதிப்பும் தெரியாமல் வளர்க்கவும் தெரியாமல் அவற்றை சாகடித்து விடலாம் என்றுகூறி எனக்கு பணம் தர முன்வந்தார்.

அனுபவம் »

பல்லுயிர்ப் பெருக்கம் (நிலைக்கும் வேளாண்மையின் அறிமுகம்)

மனதிற்கு நிறைவு தரும் பணி என்றாலும் இதன் முக்கியத்துவம் உரிய மதிப்பைப் பெறவில்லை. தமிழ்நாட்டில் உள்ள விளைபொருள் அங்காடிகளுக்குச் சென்று விலைவாசி நிலவரம், வரத்து, வழங்கல் போன்ற புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வழங்கி பயிர் நிலவரம் மற்றும் உற்பத்தி மதிப்பீடு செய்வதுதான் பணி. அலுப்பு சலிப்பு இல்லாமல் 33 ஆண்டுகள் ஒரே மாதிரியான வேலையிலிருந்து மாறும் திருப்பமாக அவ்வப்போது எழுதும் பணி தோல்விகளுக்கு மருந்தாக அமைந்தது.

இயற்கை விவசாயம் »

குளோரியா பண்ணை

பூச்சி மருந்து என்பது உயிரைக் குடிக்கும் விஷம் என்பதும் அதைத் தேவையில்லாமல் பயிர் மீது தெளிக்கும்போது பயிர் மட்டுமல்ல, மண், விண் எல்லாமே விஷமாகி அதன் தாக்கம் தாய்ப்பால் வரை சென்று இன்று தமிழ்நாட்டில் வரும் புற்றுநோய் மிகுந்துள்ளதே சாட்சியாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இருந்தும் இறந்தும் வருகின்றனர்.

இயற்கை விவசாயம் »

பசுமை நிறைந்த நினைவுகளே…

இப்போது தொடங்குவது எனது பசுமை நினைவுகளுடன் கூடிய பல பசுமை பயணங்கள். 1990ஆம் ஆண்டிற்கு முன்னும் பின்னுமான ஒரு காலகட்டம். அப்போது நான் சென்னையில் பணிபுரிந்து வந்தேன். நான் வேளாண்மை சார்ந்த பொருளியல் துறை சம்பந்தமான கட்டுரைகளை தினமணி பத்திரிக்கையில் 1980லிருந்து வழங்கிக் கொண்டிருந்த நேரம். பி.பி.எஸ்.டி என்று சொல்லப்பட்ட, “தேசபக்தி மாணவர்கள் மக்கள் இயக்க அறக்கட்டளை” என்ற அமைப்பில் உறுப்பினரான திரு முகுந்தன் என்பவர் ஒரு நாள் வீடு தேடி வந்தார்.

இயற்கை விவசாயம் »

புண்ணாக்கிய மண்ணைப் பொன்னாக்கும் விவசாயம்

கி.பி.2012-ல் வாழும் நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை மாசுகளால் புண்ணாக்கி விட்டோம். ரசாயனங்களைக் கொட்டி மலடாக்கிவிட்டோம். விஷ உணவை உற்பத்தி செய்து விஷத்தை உண்டு உடலும் மனமும் விஷமான மனிதனுக்கு வாழ்க்கைப் பார்வையும் போய் கருத்துக்குருடன் ஆகிவிட்டான். விஷமான மனிதர்கள் வாழ்கைப் பார்வை இல்லாததால்தான் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளைப் புறக்கணிக்கின்றனர். செலவு குறைந்த இயற்கை விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டுச் செலவை உயர்த்தும் ரசாயனத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கபட்டு வருகிறது.

இயற்கை விவசாயம் »

நல வாழ்வுக்கு விவசாயம்

முற்காலத்தில் நோய் என்றால் தொற்றும் தன்மையுள்ள பிளேக், அம்மை, க்ஷய ரோகம் ஆகியவற்றுக்கு மட்டுமே அஞ்ச வேண்டியிருந்தது. அவற்றுக்கெல்லாம் கூட மருந்துண்டு. ஆனால் தொற்றிக் கொள்ளாத நோய்கள் இன்னும் பயங்கரமானவை. இவை 19, 20 ஆம் நூற்றாண்டில்தான் அதாவது விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டுக்குப்பின் தோன்றியவை.

இறையியல் »

இந்திய புராண வழக்கில் மகாபாரதம் எப்படியோ அப்படியே ஹோமரின் இலியத் – ஒடிஸ்ஸே. ஏறத்தாழ இலியமும் பாரதமும் கொண்டுள்ள ஒருமித்த கருத்துகள் வியப்பாக உள்ளன. பாரதப் போரின் தொடர்ச்சியாக ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் கதைகளில் உள்ள ஆன்மிக வாசனையை ஒடிஸ்ஸேயின் தொடர்ச்சியில் காண்பதரிது. சோகரசங்களில் ஒற்றுமை காணப்படும். பாரதப் போருக்குப் பின் அபிமன்யுவின் மகன் பரீட்சித்து மரணம் ஒரு சோகம். மகாபாரதத்தில் போர் முடிந்தபின் சாந்தி பருவ நிகழ்ச்சிகளுக்கும் இலியம் – அதாவது ட்ரோஜன் – கிரேக்க போருக்குப்பின் ஒடிஸ்ஸேயில் விவரிக்கப்படும் நிகழ்வுகளுக்கும் உள்ள ஒற்றுமைப்பண்புகள் கவனிக்கத்தக்கன. ஆனால் மிகமிக வித்தியாசமான சோகத்தை ஆடிப்பஸ் சித்தரிக்கிறது.
ஐரோப்பாவில் இடைக்கால கவிஞர்களை மிகவும் கவர்ந்த பல்வேறு கிரேக்க சொகக்கதைகளில் இரண்டை மட்டும் தேர்வு செய்து கவனிக்கலாம். முதலாவது ஆடிப்பஸ். இரண்டாவதாக நாம் கவனிக்க இருப்பது ஈராஸ் – ஸைக்கே.
ஹீராக்ளீஸ், டையோனைசஸ் …

இறையியல் »

ஆயிரம் தெய்வங்கள் – ஈராஸ் – சைக்கே காதல்

கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த தெய்வக்கதை மற்ற கிரேக்க புராணங்களிலிருந்து மாறுபட்டு விளங்குகிறது. அபூலியஸ் பிளாட்டோவின் சீடர். பிளாட்டோவை ஒரு பகுத்தறிவாளராகக் கருத இயலாது. அவர் புறப்பொருட்களுக்கு முக்கியத்துவம் தரும் உயர்ந்த குறிக்கோள்வாதி என்றாலும், உயர்ந்த குறிக்கோளின் உன்னத நிலையை அழியாத ஆன்மாவாக ஏற்றுக் கொண்டவர். மேலோட்டமாகப் பார்த்தால் பிளாட்டோவோ, அபூலியஸோ கண்ணால் பார்க்க முடியாத இரவுப் பிராணியுடன் மானுடப் பெண் உறவு கொள்ள முடியும் என்பது அறிவுக்குப் பொருந்தாது என்றாலும் சில உண்மைகளை மனித உணர்வுகளுடன் வெளிப்படுத்த தெய்வங்களைக் கையாள்கின்றனர்.