kamagra paypal

முகப்பு » தொகுப்பு

இசை »

ஜுகல்பந்தி – ஒரு பார்வை

ஜுகல்பந்திக்குச் செல்லும் இசைக்கலைஞர்கள் ஓரளவுக்காவது ஒப்பிடக்கூடிய திறனுள்ளவர்களாக இருக்க வேண்டும். படு வேகமான கர்நாடக இசைக் கலைஞரோடு, ஆழமாகவும், மெதுவாகவும் பாடக்கூடிய ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் இணைந்து ஜுகல்பந்தி செய்வது பெரும்பாலும் சரியாக அமைவதில்லை. லால்குடி ஜெயராமன் தன்னியல்பிலேயே அதிகமாக பிருகாக்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கலைஞரில்லை. சர்வலகுவாக இசைக்கக்கூடியவர். (ஆனால் பக்கவாத்தியமாக ஜி.என்.பாலசுப்ரமணியனுக்கு வாசிக்கும்போது ஜி.என்.பி பாணியிலேயே வெகு வேகமாக வாசிப்பார்). அதனால் பெரும்பாலும் இவர் பங்கு பெற்ற ஜுகல்பந்திகள் வெற்றியடைந்திருக்கின்றன.

இசை »

இந்திய இசையின் மார்க்கதரிசிகள்

ஒரு இசைக்கலைஞர் இசைப் பாரம்பரியமே இல்லாத ஒரு குடும்பத்தில் பிறக்கும் முதல் தலைமுறை இசைக்கலைஞராக இருக்கலாம். அப்படிப்பட்டவர் சிறு வயதிலேயே மேதையாக விளங்கி, ஒரு புதிய இசைக்கருவியிலோ அல்லது இசை வடிவத்திலோ சிறந்து விளங்கவும் நேரிட்டால், அந்த இசைக்கலைஞரில் நாம் இசையுலகின் ஒரு மார்க்கதரிசியைக் காண்கிறோம். இப்படிப்பட்ட மூன்று மார்க்கதரிசிகளால் நம் இசைக்கு மாண்டலின், சாக்ஸஃபோன், ஸ்லைட் கிடார் என்ற மூன்று புதிய இசைக்கருவிகள் கிடைத்திருக்கின்றன.