kamagra paypal

முகப்பு » தொகுப்பு

சிறுகதை »

கடந்து போனவர்கள்

அவனை நாங்கள் சந்தித்த அந்த அற்புதமான கோடை காலம், ஊஞ்சலின் கீரீச்சிடலாய், முற்றத்தில் வரைந்த கரிக் கோட்டு கிரிக்கெட் ஸ்டம்ப்பாய்,, நாடகத்தில் முதுகில் தொங்க விட்டுக் கொண்ட பழைய வேட்டியாய், ஆற்றங்கரையில் விளையாடிய எறி பந்தாய், கொல்லைக் கிணற்றின் பொந்திலிருந்து பறக்கும் , நீல வண்ண மீன் கொத்தியின் லாகவமான பறத்தலாய், உச்சி வெயில் வேளையின் கழுகின் கத்தலாய் விரிந்து பெருகியது.

சிறுகதை »

லோக மாயை!

எலிவேடரிலிருந்து வெளியில் வரும் பொழுது பார்த்தாள், அந்த ரஷ்ய மூதாட்டி, கட்டிடத்தின் முன் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்க் கொண்டிருந்தாள்.மேகா ஓட்டமும் நடையுமாக முன் கதவை அடைந்தாள்.

மிகச் சரியாக அதே நேரத்தில் கீழ் தளத்தைச் சேர்ந்த ஏதொ வீட்டிலிருந்து ஒரு இளம் தாய், தன் இரண்டு வயது குழந்தையுடனும், அதன் மூன்று சக்கர வண்டியுடனும்,அந்த கனமான கதவுடன் போராடிக் கொண்டிருந்தாள். இவள் கதவைப் பிடித்துக் கொண்டாள், பார்வை வெளியை விட்டு அகலவில்லை. அம்மா சைகிளுடன் வெளியே போனாள், நன்றியுடனும்,புன்னகையுடனும். அந்த குழந்தை உள்ளேயே நின்று கொண்டு வெளியே போக மறுத்தது. அம்மா,அதை வெளியே வரச் சொல்லி மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த மூதாட்டி, கட்டிட முகப்பிற்கும், நுழைவாயிலுக்கும் இடையில் இருக்கும் இருபது அடி தூரத்தில் பாதியை கடந்து விட்டிருந்தாள்.

சிறுகதை »

கலையும், இயலும்

நாங்கள் அப்போது குடியிருந்த வாடகை வீடு ரொம்ப வாகான ஒரு இடத்தில் இருந்தது. கடை,கண்ணி, பள்ளி, அப்பாவின் அலுவலகம் எல்லாம் பக்கத்தில் இருந்ததைத் தவிர இன்னுமொரு பெரிய சாதகமான விஷயம் ஒன்று இருந்தது. அதாவது வீட்டுக்குள்ளிருந்தவாறே , வெளியில் நடக்கிற வித விதமான, சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ஏதுவாக தெருவின் முனையில், நாலு தெருவும் கூடுகிற இடத்தைப் பார்த்தாற் போல் இருந்தது. அங்கே, அரசியல் கட்சிக் கூட்டங்கள், பாவிகளை அழைத்து ரட்சிக்கிற கூட்டங்கள், கம்பி மேல் நடக்கிற கழைக்கூத்தாடி வித்தைகள், அப்புறம் எங்கள் தெருவில் கொஞ்சம் பிரபலமாக இருந்த ஒரு பையனின் சினிமா பாட்டுக்கான நடன நிகழ்ச்சிகள் …

சிறுகதை »

மற்றும் அவர்கள்

எதையெல்லாமோ நினைத்துக் கொண்டே வந்ததில், சீக்கிரம் கால்வாய்க்கரையோரம் படகு வீடுகளுக்கு அருகில் வந்து விட்டாற் போல் தோன்றியது.யார், யாருடைய வீடுகளையெல்லாமோ, இப்படி உற்று உற்றுப் பார்த்துக் கொண்டே போகிறோமே, இது கொஞ்சம் அநாகரீகமோ என்று தோன்றினாலும், இந்த படகு வீடுகளைப் பார்ப்பதில் உள்ள புதுமை எனக்குப் பிடித்திருக்கிறதே என்ன செய்ய என்று சொல்லிக் கொண்டாள். தவிர, அவர்கள் யாரும் இதைக் கவனிப்பதுமில்லையே என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். ஒரு படகு வீட்டின் ஜன்னல் வழியாக சாப்பாட்டு அறை தெரிந்தது. குட்டி சாப்பாட்டு மேஜை மேல் அழகிய வண்ணப் பூங்கொத்து.

சிறுகதை »

முப்பாலுக்கு அப்பால்

பின்னால் கொல்லையில் காவேரி ஒடுகிற சல சல சத்தம், தோட்டத்து மரங்களில், கிளைகளும் இலைகளும் உரசுகிற சத்தம், சிள் வண்டுகளின் ரீங்கார சத்தம், எங்கோ தெருவில் போகிற வண்டி மாடுகளின் கழுத்து மணிகளின் சத்தம், கூடை அடைய தாமதமான ஒற்றைப் பறவையின் சத்தம், தூரத்து மெயின் ரோடில் லாரி போகிற சத்தம், ஆசிரம இரும்பு கேட்டில் கட்டியிருக்கிற தகரம் காற்றில் ஆடும் சத்தம், சமையலறையில் பாத்திரங்களின் ஜலதரங்க சத்தம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டிருக்கையில் இப்பிடியே இருந்து விட்டால் என்ன என்று தோன்றியது.

சிறுகதை »

நிறப்பிரிகை

உண்மையில் அது வரையில் அந்தப் பெண்ணோ, என் வகுப்பில் வேறு யாருமோ என்ன ஜாதி என்ற கேள்வி ஒரு போதும் என் மனதில் வந்ததேயில்லை. ஜாதிகள் பல உண்டு என்பது தெரியும். ஒவ்வொருவரும் பேசுகிற மொழிக் கொச்சையும், சாப்பிடுகிற சாப்பாட்டின் ருசியும், பழக்க வழக்கங்களும் வேறு வேறு என்று தெரிந்ததே தவிர, அதனால் மனிதர்களை வேறு வேறு மாதிரி நடத்த வேண்டும் என்றோ, நினைக்கவேண்டும் என்றோ தோன்றியதேயில்லை.

சிறுகதை »

எங்களுக்கு ஒரு பெரியப்பா இருந்தார்

பெரியப்பா என்றால் அப்பாவின் சித்தப்பா பையன். அவர் நாங்கள் வசித்த நகரத்திலிருந்து 10,15 மைல் தூரத்தில் இருந்த ஒரு சின்னக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராக இருந்தார். அனேகமாக, எல்லா வாரங்களிலும் சனிக்கிழமையோ ஞாயிற்றுக்கிழமையோ எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் எத்தனை முறை வந்தாலும், எத்தனை அடிக்கடி வந்தாலும் அவரது வருகை எங்களுக்கெல்லாம் ஒரு உல்லாசத்தையும், விடுதலை உணர்ச்சியையும், சொல்லவொண்ணா சந்தோஷத்தையும் ஒவ்வொரு முறையும் அளித்தது. இத்தனைக்கும் அவர் எங்களுக்கு ஒரு ஆரஞ்சு மிட்டாய் கூட வாங்கி வந்தது கிடையாது. அவருடைய பொருளாதார நிலை அப்படி. ஆனால் அது ஒரு பொருட்டாகவே தோன்றியதில்லை. அவர் எங்களுக்குச் சமமாக ஒரு சிறுவர் உலகத்தில் எப்பொழுதும் இருந்ததுதான் எங்களுக்கு அவர் மேல் இருந்த ப்ரியத்துக்கு காரணம் என்று தோன்றுகிறது.

சிறுகதை »

காட்சிப் பிழை

“ சே!சே! பயப் படாதே! பயப்படாதே!! அப்பிடி எதுவும் மறக்காது! இதோ இப்ப தெரிஞ்சுடும்! ரிலாக்ஃஸ் ரிலாக்ஃஸ்!!” தனக்குத்தானே சொல்லிக் கொண்டு பயத்தைப் புறந்தள்ள முயன்றான்.
சாலையின் இடது புறம் கரும் பச்சையில் ராக்ஷ்ச வளர்த்தியில் நெற் பயிர்கள் ,நெடும்தூரம் வரை.