ராஸ்ப்பெர்ரிகள்

நான் அவரிடம் பாதசாரிகள் குறுக்கே கடக்குமிடத்தில் தெருவைக் கடந்த பறவையைப் பற்றியும், உணர்கொம்புகளோடு இருந்த சிவப்பு சிலந்தி பற்றியும் சொன்னதுதான், எனக்கு இந்த நோட்டுப்புத்தகத்தை அவர் கொடுக்கக் காரணம். சிலந்திகளுக்கு உணர்கொம்புகள் கிடையாது, எனச் சொல்கையில் அவர் முறுவலித்தார், நான் சொன்னேன், இதற்கு இருந்தது என்று, அது ஒரு வேளை வேறேதோ பூச்சியாக இருக்கும், என்றார் அவர், அதற்கு நான் சொன்னேன், அப்படி இல்லை, அது சிலந்திதான், அவளிடமே நான் கேட்டிருந்தேன், அவள் தன் தலையிலிருந்து வெளியே நீட்டிய கருப்பு ஊசிகள் போல இருந்த உணர்கொம்புகளை அசைத்தாள், அது அவள் ஒரு சிலந்திதான் என்பதை எனக்கு உறுதி செய்தது என்றேன்.