kamagra paypal

முகப்பு » தொகுப்பு

The Archives

மேலாண்மை, வேளாண்மை »

உழுதுண்டு வாழ்வோம்!

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப் பட்ட கடந்த 24 வருடங்களில், இந்தியாவின் பொருளாதார நிலை, பெருமளவு மாறியுள்ளது. வறுமை குறைந்து, கல்வியறிவு பெருகி, சமூக வளர்ச்சியின் பெரும்பாலான குறியீடுகள் முன்னேற்றப் பாதையில் செல்கின்றன. ஆனால், இந்தக் கால் நூற்றாண்டில் மாறாத ஒரே விஷயம், வேளாண்மைத் தொழிலின் லாப நிலை. பணப்பயிர்களை உழவிட்டு, கடன் பட்டு, கடன் கழுத்தை நெருக்க, சுருக்குக் கயிற்றை நாடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறையாததே! இதே காலகட்டத்தில், ஒரு முக்கிய வேளாண் பொருளான பாலின் உற்பத்தி 55 மில்லியன் டன்னிலிருந்து, 140 மில்லியன் டன்னை எட்டியுள்ளது (கிட்டத்தட்ட 300%). இதற்கீடான ஒரு உணவு உற்பத்திச் சாதனை உலகில் அதிகம் இல்லை. பால் உற்பத்தியில் நஷ்டமேற்பட்டு, ஒரு உழவர் கூட தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தியில்லை. பால் உற்பத்தி செய்யும் உழவர்களில் பெரும்பாலோனோர் 2-3 மாடு / எருமைகள் வைத்து பால் உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள்தாம்.

இந்த முரண்பாடு எப்படி நிகழ்ந்தது?

இந்தியாவின் மிகப் பெரும் பால்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான அமுல், இந்த ஆண்டு 20,000 கோடி வியாபாரத்தை எட்டியுள்ளது.

அனுபவம், பன்னாட்டு உறவுகள், புத்தகவிமர்சனம் »

அம்பாஸடர்ஸ் க்ளப் – புத்தக அறிமுகம்

1991 ல் பாரதம் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்த காலத்தில், உலகில் பல நாடுகள் இதே போன்ற சிக்கல்களை எதிர்கொண்டன. அர்ஜெண்டினா போன்ற நாடுகள் பெரும் பண வீக்கத்தால் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தின. ரஷ்யா பல சிறு நாடுகளாக வெடித்துச் சிதறி, உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்தது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தம், மக்களை நேரடியாக அவதிக்குள்ளாக்கவில்லை. படிப்படையாக ஏழ்மை குறைந்து, நாடு வளமுற்றது. இதை ”மத்திமப் பாதை” என்னும் பெயரில், டாவோஸில் நடந்த வருடாந்திரப் பொருளாதார உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் முன் வைத்தார். அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து …

சிறுகதை »

ஷ்யாம லீலா

விலை: லிட்டருக்கு 23 ருபாய். மார்க்கெட் விலை – 18 ரூபாய். வாங்கும் அளவு மாதம் 5 லட்சம் லிட்டர். நிறுவனத்துக்கு நஷ்டம் வருடம் : 3 கோடி. (அன்று சென்னை கோட்டூர்புரத்தில், ஒரு கிரவுண்ட் 15 லட்சம் விலை). மும்பை நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னார். அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து, உங்களிடம் இருந்து வாங்கும் மெழுகெண்ணெயின் கொள்முதல் விலை ரூ.18 என நிர்ணயிக்கப் படுகிறது.

இருக்கையில் இருந்து குதித்தே விட்டேன். “சார், ஸ்டாம்ப் பேப்பரில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது”, என்று பதறினேன்.

அனுபவம், ஆளுமை »

இருக்கும் இடத்தை விட்டு

“மெட்ராஸ்ல நீர் இருக்கும் இடம் கொஞ்சம் மேலே.. இங்கே பரம்பரையாக, கிணறுகளும், ஏரிகளும் தான் நீராதாரம். இப்போ, ஃப்ளாட்டுகள் வந்து, காங்ரீட் போட்டு எல்லாத்தையும் மூடியாச்சு. அதனால, அந்தக் குறைந்த ஆழத்துல கிடைக்கிற நீர நாம எடுக்கறதில்லை. அதை விட ஆழமா ஓட்டை போட்டு, பாறையத் தொளச்சு, அங்கிருக்கற உப்பு நீர எடுக்கறோம்.. இந்த ரிப்போர்ட்ல பார் – 8 அடியில் மணல் இருக்கிறது. அது கிட்டத் தட்ட 30 அடி வரை இருக்கு. அதுக்கப்புறம் – களிமண். அதனால, நான் சொல்றேன் – வெட்டு என்றார்..

திரைப்படம் »

The Wolf of Wall Street – திரைப்படம்

ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்னும் பங்குச் சந்தைத் தரகரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது இப்படம். கடுமையாக உழைத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டி, தனக்கும் பணம் சேர்க்கும் கனவோடு, அனுபவமில்லா இளைஞனாக ஒரு பங்குச் சந்தை நிறுவனத்தில் சேரும் ஜோர்டானுக்கு ஞானஸ்னானம் செய்விக்கிறார் முதலாளி. முதலீட்டாளனை ஏமாற்றி, மேலும் மேலும் பங்குகளை வாங்க, விற்க வைத்து, இரண்டு முறையும் தரகு பெற்றுக் கொள்வதே அடிப்படைப் பாடம். முதலீட்டாளனை, தன் முதலை வெளியே கொண்டு செல்ல விடாமல், மேலும் மேலும் அச்சுழலில் அமிழ்த்துவதே ஒரு பங்குச் சந்தைத் தரகன் செல்வந்தராகும் வழி என்னும் “உண்மையை” எடுத்துச் சொல்லி, தொட்டுக் கொள்ள கோக்கேயினையும் இதர போதைப் பொருட்களையும் பழக்கிவைக்கிறார். தாய் முலையறியும் சேய் போலப் பிடித்துக் கொள்கிறான் ஜோர்டான்.

ஆளுமை, தொழில்நுட்பம் »

காட்டோடைகளும் கங்காணிகளும்

என் மகனுக்கு, ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பெரும் சூப்பர் ஸ்டார். எனவே அவன் பிறந்த நாளுக்கு, வால்டர் ஐசக்ஸன் எழுதிய ஸ்டீவ் ஜாப்சின் சரிதத்தை வாங்கிப் பரிசளித்தேன். அதன் தடிமனைப் பார்த்ததும், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆக வேண்டுமென்ற ஆசையையே விட்டு விட்டான். எனவே, வாங்கி விட்ட பாவத்துக்குப் படிக்கத் துவங்கினேன். ஆனால், அது ஜெயமோகன யட்சி போலப் பிடித்துக் கொள்ளும் என்று அப்போது தெரியவில்லை.

ஆளுமை, சமூகம் »

அன்னாவும், அருணாவும்

இன்றைய கொந்தளிப்பான பொது மனநிலையில், அன்னாவின் தரப்புக்கு மாற்றுத் தரப்பு என்றாலே, “நீ யார்.. உனக்கு என்ன தகுதி” என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். அதுவும் சோனியா காந்தியின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் என்னும் போது, காங்கிரஸின் கையாள் என்பது போலத் தோன்றி விடுகிறது. ஊடகங்கள் பலவற்றிலும், அருணா அவ்வாறே சித்தரிக்கப் படுகிறார். இன்று அன்னா வெற்றி பெற்று, எல்லோரும் ஆசுவாசம் கொண்டுள்ள நிலையில், நாம் அருணா ராயைப் பற்றிக் கொஞ்சம் பேசுவது அவசியம்.

அனுபவம் »

அம்மாயி

அம்மாயிக்கு பால் கறக்கும் நேரம் வந்தவுடன் சோகம் எல்லாம் பறந்து விடும். “யார்ளா அது.. போ.. போ நாம் பால் பீச்சோணும்” என்று துரத்தி விட்டு, தன் பொழைப்பைப் பார்க்கப் போய்விடும். சிக்கனத்தின் சின்னம். வருடத்துக்கு 3-4 வெள்ளைச் சேலைகள் மட்டும் தான் அம்மாயியின் அலங்காரம். பால் காசை மிச்சம் பிடித்து, சீட்டுப் போட்டு, ஓட்டு வீடு கட்டி, புள்ளைக்கும், பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைத்தது.

மேலாண்மை »

மேலாளன் என்பான்…

தன் மேலாளனுக்கு வேலை தெரியாது என்று புறம் கூறுவர் சிலர். மேலாளனைவிட தாம் அதிகத் திறன் பெற்றவர் என்று பீற்றிக் கொள்வர் சிலர். சச்சின் டெண்டுல்கர் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுள் ஒருவர். அவரளவுக்கு, பேட்டிங் திறனும், ஸ்டைலும் அற்றவர் தோனி. ஆனால், தோனிக்கு, சச்சின் டெண்டுல்கரோடு, இன்னும் ஒன்பது பேரைச் சேர்த்து, அதை ஒரு வெல்லும் அணியாக மாற்றும் திறன் உண்டு என்பதை நாம் யாவரும் அறிவோம். சச்சினின் செயல் திறனை, அணிக்குத் தேவையான பயன் திறனாக மாற்றி, இலக்கை எட்டுபவர் தோனி.

பொருளாதாரம் »

மத்தகங்கள் வீழ்ந்த காலம்!

நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் விளம்பரப் படுத்தி, சிகரெட் வியாபாரத்தில் கொண்டிருந்த வலிமையை உபயோகித்து, பொருளை எளிதாகச் சந்தைப் படுத்தவும் செய்தது. கார்ட் வீல் பல்டி அடித்து வந்து அன்னையைத் தழுவிக்கொள்ளும் குட்டிப் பையன் விளம்பரம் அன்று மிகப் பிரபலம். 90களின் இறுதியில், ஐ.டிஸி, எண்ணெய்த் தொழிலை, கான் அக்ரா என்னும் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றது. ஏன்?

சமூகம் »

அன்புள்ள முதல்வருக்கு..

தமிழகத்தின் பாசன நீர்த் தேவையில் 60 சதத்திற்கும் மேலாக நெல்லுக்கு உபயோகப் படுகிறது. திருந்திய நெற்சாகுபடி என்னும் புது முறையில், ஒரு குத்துக்கு ஒரு நாற்று உபயோகிப்பதும், நீர் நிறுத்திப் பாசனம் செய்யாமல், காய விட்டு, மற்ற பயிர்களைப் போல் நீர் பாய்ச்சுவதும் நல்லதென்று சொல்கிறார்கள். இதனால், தண்ணீர்த்தேவை 50 சதம் குறைகிறதென்றும், மகசூல் 25-40 சதம் அதிகரிக்கிறதென்றும் சொல்கிறார்கள். ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தும் முறை இது – உபரி நீரை அதிக நிலத்தில் பாசனம் செய்ய உபயோகிக்கலாம்.

அனுபவம், பொருளாதாரம் »

சந்தை என்னும் கோவில்: நுகர்வோர் என்னும் கடவுள்

குப்புற விழுந்து, மூஞ்சியும் முகரையும் பெயர்ந்த பின்பு, அந்நிறுவனம், தொலைபேசிக் கட்டணம், ஒரு தபால் கார்டை விட மலிவானதாக இருக்க வேண்டுமென்று எங்கப்பாரு சொன்னாருன்னு ஒரு புதுக் கதை சொன்னது.. நுகர்வோருக்கான மாபெரும் சலுகை என்று அலைபேசிக் கருவிகளை ஐந்நூறு ரூபாய்க்குத் தந்தது.. பல ஆயிரம் கோடிகள் நஷ்டம்……தேவைப் பட்டால், விதிமுறைகளையும் அரசாங்கங்களையும் மாற்றும் வல்லமை படைத்தவர்கள். ஆனால், பாவம் பத்து ரூபாய் ப்ரீபெய்ட் வாங்கும் ஒரு சாதாரண நுகர்வோரை வீழ்த்த முடியாமல் போயிற்று.

அனுபவம், பொருளாதாரம் »

சந்தை என்னும் கடவுள்

ஒரு ப்ரசெண்டேஷனுக்கு ஆறு கோடியா? சொக்கா என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த 45 நாட்களுக்குள் 1000 டன்னையும் வாங்கி ஒரு பெரிய எண்ணெய் டாங்கில் சேமித்துவைத்தோம். மே மாதம் துவங்கி, ஊர் எல்லை மைல்கல்லில் காத்திருக்கும் பாரதிராஜாவின் கதாநாயகி போல் ஓணம் வரக் காத்திருந்தேன். ஓணம் முடிந்தபின் விலைகள் எகிறும் என்பதே எங்கள் தாரக மந்திரம். 60 ஆண்டுகளின் புள்ளிவிவரம் எங்களுக்குச் சொன்னது அஃதே. ஓணம் வரை விலை 60லிருந்து 63க்கு எழுந்தது. எங்களுக்கு லேசான பெருமிதம். நாங்க யாரு?

அனுபவம் »

தளவாய்ப்பேட்ட சந்தையும், மேலாண்மை உத்தியும்

ஒரு சின்ன விளையாட்டில் துவங்கி, பேரம் பேசுதலின் பல்வேறு அம்சங்களை விளக்கினார். முதலில் சொன்னது – அடிப்படை உழைப்பு. எந்த ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றாலும், அதைப் பற்றிய விவரங்கள், அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை முதலில் சேகரிக்க வேண்டும் என்றார். இது பால பாடம். பங்கு பெற்ற எல்லோருமே செய்வதாகச் சொன்னார்கள். அதைக் கேட்டு ஜேம்ஸ் பாண்ட் பட வில்லி மாதிரி சிரித்த அவர் அடுத்து ஒரு புள்ளி விவரம் கொடுத்தார்.

புத்தக அறிமுகம் »

ஆர்தர் ஆஸ்போர்னின் ரமணர்

ஆஸ்போர்னின் இப்புத்தகத்தில் எழுதியுள்ள மொழி மிகப் புதிதாய் இன்றும் இருக்கிறது. ஒரு காலமின்மையை (timelessness) எவரும் உணர முடியும். சுத்தானந்த பாரதியின் மொழி இன்றில்லை. இன்று படிக்கும் ஒரு மனிதருக்குச் சலிப்பு தட்டும் நடை. ஆனால், ஆஸ்போர்னைப் படிக்கும் எவரும் அதன் ”இன்றைய” மொழிநடையினால், மிக எளிதாகப் படித்துச் செல்லமுடியும். அதே போல் வாக்கியங்களின் அமைதியும் அவரின் மொழியாளுமைக்குச் சான்று.