kamagra paypal

முகப்பு » தொகுப்பு

இந்திய தத்துவம், கட்டுரை, சமூகம் »

எழுச்சியூட்டும் நம்பிக்கை

இளைஞர் சமுதாயம் தீய வழிகளில் செல்லாமல் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க இப்படிப்பட்ட வடிகால்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பல குடும்பங்களில் விளையாட்டு, இசை, கைவேலை என்று சிறு வயது முதலே ஓய்வு நேரப் பழக்கங்களாகப் பழக்கப் படுத்திவிடுவார்கள். இன்னும் சில குடும்பங்களில் கலையார்வங்களை வளர்ப்பார்கள். ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் பலவிதக்கலைகளிலும், விளையாட்டிலும் ஆர்வங்கள் பலவிதங்களில் வளர்க்கப்படும். இவையெல்லாமே இளம் வயது ஆர்வங்களுக்கு ஒரு வடிகால் வகுக்கும் வழிமுறைகள்தாம்.

அனுபவம், கட்டுரை, சமூகம் »

உறவுக்கு ஒரு பாலம்

ஒரு நாளிதழ் கட்டுரையில் மூத்த குடிமகன் ஒருவர் எழுதியிருந்தார்; அவருடைய மனைவி காலமான பின்னர், தன் வாழ்க்கையை எப்படி சமாளிக்கிறார் என்று. மனைவி இருந்தவரை வென்னீர் வைக்ககூட மனைவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர், பின்னர் எப்படி சமையல் கற்றுக்கொண்டு, தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டு சுவாரசியமாக நாட்களை வைத்துக்கொண்டார் என்பது படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் நமது மனோபாவம்தான். இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று நம்மைநாமே சீர் படுத்திக்கொண்டும், பிறரின் சிறுதவறுகளை மறந்தும் மன்னித்தும், வாழ்க்கைப் பயணத்தில் தேவைப்படும்போது எதிர் நீச்சல் போட்டுக்கொண்டும்…

அனுபவம், கட்டுரை, சமூகம் »

மனம் ஒரு குரங்கல்ல…

இவைகளை சரி அல்லது தவறு என்று தராசில் பார்ப்பதைவிட எண்ண அலைகளின் சக்தியை புரிந்து கொள்ளும் கோணத்தில் பார்த்தால் தெளிவாகும்.. உலகில் எத்தனையோ பேர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக எத்தனையோ சாகசங்களை செய்யவதும் இது போன்ற என்ணங்களின் வலிமையால்தான். ஆழ்கடலில் குதிப்பது, நெருப்பை விழுங்குவது, பாம்பு தேள்களை உடலில் விடுவது, அதள பாதாளத்தில் பாய்வது, அந்தரத்தில் தொங்குவது… இவர்களை இப்படி செய்யத்தூண்டும் எண்ண அலைகள்தாம்…

அனுபவம், சமூகம் »

நம் நலன்…..நம்மைச் சேர்ந்தவர் நலன்…..சமூக நலன்….

பேரிடர் என்பது சொல்லி வைத்து வருவதில்லை. இயற்கையோ அல்லது மனித வெறுப்பில் உருவான தீவிரவாதத் தாக்குதலோ, எதிர்பாராமல்தான் நம்மைத் தாக்குகிறது. கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். நமக்கு ஐந்து நிமிடம் தரப்படுகிறது. அதற்குள் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளி வர வேண்டும். அதன் பின்னர் உங்கள் வீடு உங்கள் எதிரேயே தரைமட்டமாக்கப்படும். இது வேண்டும் அது வேண்டும் என்று வீடு நிறைய காலங்காலமாக சேர்த்துவைத்துள்ளவற்றில் எதை விடுவது?

அனுபவம், சமூகம், தொடர்கள் »

கொடுக்கும் கலை

இருபது வருடங்களுக்குப் பின் இவருடைய கிளினிக்குக்கு ஒரு ஆலோசனைக்காக சென்றிருந்தேன். அவருக்கு வயதாகியிருக்கும்; அவரது சந்ததியினர் யாராவது இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் உள்ளே சென்றால், சாட்சாத் அவரே வழக்கம்போல் அதே நாற்காலியில் உட்கார்ந்து வரவேற்கிறார். இன்று அவர் வயது 73. “நீங்கள் முன்பே என்னிடம் பலவருடங்கள் முன்பு வந்தீர்கள் போலிருக்கிறதே….” என்று கேட்கும் அளவு ஞாபக சக்தி. எப்படி இவரால் இந்த வயதிலும் இப்படி எப்போதும் ஒரு புத்துணர்வுடன் வேலை செய்ய முடிகிறது? அவர் சொன்னார்: “ இரண்டு வருடம் முன்பு கிட்னியில் கான்சர் இருப்பது எனக்குத் தெரிய வந்தது.

சமூகம், தொடர்கள் »

தீர்வுகள்  விரல்  சொடுக்கில் கிடைக்காது…

மொத்தத்தில், ஒரு குழந்தையை நீங்கள் எப்படி கையாளுகிறீர்களோ அந்தத் தாக்கம்தான் அந்தக் குழந்தையின் சுபாவமாக இருக்கும். மனித சமுதாயம் உருவாவதில் பெற்றோர்களின் பங்கு சாமான்யமானதல்ல. பரிட்சை நேரங்களில் தோல்வியைத் தாங்காமல் விபரீத எல்லைகளுக்குப் போகும் சில இளைஞர்களை ஆரோக்கியமான திசையில் திருப்புவது பெற்றோர்கள் கடமை.

நம் ஏமாற்றத்தின் பாரத்தையும் குழந்தைகள் மீது காட்ட வேண்டுமா என்ன?

அனுபவம், தத்துவம் »

சக்தி… மனசில்  நிறையும்போது…

1970 களில் கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் நாங்கள் குடியிருந்தபோது நவராத்திரி சமயத்தில் நம் மண் பொம்மைகள் கிடைக்காமல் குழந்தையின் விளையாட்டு பொருட்களையும் பத்திரிகைகளிலிருந்து சில படங்களைக் கத்தரித்து அட்டையில் ஒட்டி, படிகளில் நிற்க வைத்து கொலு வைத்தேன் . அப்படி நான் கத்தரித்து ஒட்டிய படங்களுள், காஞ்சிப் பெரியவர், கடவுள் படங்கள் இவற்றுடன் மோனோலிஸா படமும் ( அழகாக இருந்ததே..!)என் கொலுவில் இருந்தன. தாம்பூலத்திற்கு அழைத்திருந்த பெண்களில் அக்கம் இருந்த ஐரோப்பியர் மற்றும் ஆப்பிரிக்க பெண்களும் உண்டு. வந்திருந்த பெண்களில் ஒருவர் கேட்டார்: “பூஜை என்றீர்கள். சரிதான். ஆனால் மோனோலிஸா படத்தையும் இந்த பஸ், விமானம் போன்ற பொம்மைகளையும் கடவுள் படங்களுடன் ஏன் வைத்துள்ளீர்கள்?” என்றார்.

அனுபவம் »

உறவுகள் மேம்பட

முன் காலத்தில் பெண்கள் வெகு இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்படுவார்கள்.(அந்த காலத்தில் பெரும்பாலும் திருமணங்கள் செய்து வைக்கப்படும்; செய்து கொள்ளப்படுவதில்லை. இதில்தான்எத்தனை வித்தியாசம்?!) தங்களுக்கென்று இன்னும் ஆழமாக கருத்து ஏதும் உருவாகாத நிலையில் திருமணம் செய்துவைக்கப்படும்போது புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலையில் புகும்போது சட்டென்று அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள் அந்த தலைமுறை பெண்கள்.

அனுபவம், கட்டுரை, தத்துவம் »

குணம் நாடி, குறை தவிர்த்து

கற்றுகொள்வதும் உதவிகள் பெற்றுகொள்வதும் ஒரு கலை. கற்பது என்பது நம்மைவிட வயதானவர்களிடமிருந்துதான் என்றில்லை; நல்ல விஷயங்கள் யாரிடமிருந்தாலும் கற்றுகொள்வதில் தவறில்லை.
கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு என்பார்கள். இருந்தாலும் சிலருக்கு சட்டென்று உதவி கேட்கவோ அல்லது உதவி செய்யவோ தோன்றாது. உதவி கேட்பது சுய கௌரவத்திற்கு இழுக்கு என்பது இவர்கள் நினைப்பு. தெரியாததைத் தெரியாது ; ஆனால் கற்றுகொள்கிறேன் என்பதற்கும், தனக்கு உதவி தேவை படும் சமயத்தில் கௌரவம் பார்க்காது ஏற்றுகொள்வதற்கும், ஒரு விசாலமான மனம் வேண்டும். பிறரிடமிருந்து தேவைப்பட்டபோது உதவி பெறும்போது நமக்கும் சட்டென்று பிறருக்கு உதவும் மனப்பான்மை வரும். கொடுக்கல் வாங்கல்; பரிவர்த்தனைகள் இல்லாமல் இருந்தால் அங்கே வளர்ச்சிக்கு இடம் ஏது?

அரசியல், சமூக வரலாறு »

மல்லிகைப் பூவின் திகட்டாத மகிமை

கோடையின் வரவேற்கத்தக்க அம்சங்களில்  ஒன்று, மல்லிகைப்பூ சீசன். சாலைகளில் ஆங்காங்கே ஒரு மரப் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு பூத்தொடுத்துக்கொண்டு இருக்கும் பெண்கள் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. வருடம் முழுவதுமே ஓரளவு கிடைக்கும் மலரென்றாலும்,  இந்த சீசனில் கிடைக்கும் மல்லிகையின் – அதுவும்  குண்டு மல்லிகையின் – அதிலும் மதுரை  மல்லியின்  வாசனையே  அலாதி. தெருவில் அந்த மலர்களின் பக்கம் நடந்தாலே நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வாசனை. ஸ்ரீரங்கத்தில் இருக்கும் என் உறவினர்  ஒருவருக்கு வயது 80க்கு மேல். அவருக்கும் அவரது மனைவிக்கும் மாலை வேலைகளில் ஒரு முக்கிய பொழுது போக்கு உதிரி மல்லியை தொடுப்பது – மறு நாள் கடவுள் படங்களுக்கு சாற்றுவதற்காக. அதுவும் அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருக்கும்  சாத்தாரத் தெருவில் ஆழாக்கில் அளந்து வாங்கி வந்து கூடையில் போட்டுக்கொண்டு பெரியவர் காம்பை ஆய்ந்து கொடுக்க மனைவி வாழைநாரில் அருகருகே பூக்களை வைத்து …

அனுபவம், அறிவியல் »

பசுமைக் கட்டிடங்கள்

பசுமைக் கட்டிடங்கள் நிறைய எழும்ப ஊக்கமளிக்கும் வகையில் LEED எனப்படும் ( Leadership in Energy and Environmental Design ) விருது இந்திய Indian Green Building Council அளிக்கிறது. இந்தியாவில் பல மாநில அரசுகளும் இப்படிப்பட்ட பசுமைக் கட்டிடங்களுக்கு நிறைய ஊக்கமளிக்கின்றன. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மழை நீர் சேமிப்பு கட்டிடங்களில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

அறிவியல் »

மன அழுத்தம்

வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் மன அழுத்தம் தற்காலத்தில் அதிகமாகதான் இருக்கிறது. உலகில் நிலவி வரும் வியாபாரப் போட்டியே காரணம். ” சின்னதாக சறுக்கினாலும் அதள பாதாளத்தில் விழுவோம் என்ற நிலையில்தான் இன்றைய வேலை செய்யும் இடங்கள் இருக்கின்றன. இதற்கு முன்னாள் எவ்வளவு திறமையாக வேலை செய்தோம் என்பதெல்லாம் காணாமல் போய்விடும்,” என்கிறார் ஒரு கணிணிப் பொறியாளர்.

தொழில்நுட்பம் »

நியூ மீடியாவின் தாக்கம் 

We Media” என்ற அதிகார பூர்வமான அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும்படி அமெரிக்கன் பிரஸ் சென்டர், ஷேய்ன் போமேன், க்ரிஸ் வில்லிஸ் என்ற இரு பத்திரிகையாளர்களிடம் பணித்திருந்தது. செய்திகள் பரவும் அல்லது அளிக்கப்படும் முறைகளில் ஒவ்வொரு நுகர்வோரும் பங்களித்துக்கொண்டிருக்கின்றனர் என்று இந்த பேப்பர் கூறுகிறது. ஆன்லைன் ஜர்னலிஸம் ரெவ்யூ ஆசிரியர் ஜே. டி.லசிகா எடிட் செய்த இந்தப் பேப்பர், பொது மக்களின் பங்களிக்கும் ஜர்னலிஸம் இன்று மக்களின் வாழ்முறையையும் மாற்றி வருகிறது என்று குறிப்பிடுகிறது. இன்றைய தலைமுறையின் வாழ்க்கையும் இணையத்தைச் சுற்றியே பிணைந்திருந்து பயனீட்டாளரே பங்களிப்பவராகவும் மாறிவிடும் காலக்கட்டத்தை இந்த ஆராய்ச்சி விளக்குகிறது.

சூழலியல், சூழல் நசிவு அபாயங்கள், தொழில்துறை »

கடலில் எண்ணெய்க் கசிவு

கடலில் எண்ணெய்க் கசிவினால் ஏற்படும் விளைவுகள் என்ன? எண்ணெயில் இருக்கும் எடையில இலேசான பொருட்கள் ஆவியாகி காற்றில் கலந்துவிடும். அல்லது இயற்கையான உருமாற்றம் மற்றும் உயிரியல் தரவீழ்ச்சி (bio degradation) ஏற்பட்டு மறைந்துவிடும். ஆனால் அதிலுள்ள கனமான பொருட்கள் கடலிலேயே தங்கி, கடல் வாழ் உயிரினங்களின் உடலில் எண்ணெய்ப் பூச்சாகப் படிந்து விடுவதால், சுலபமாக நகர முடியாமலும், உணவு தேட முடியாமலும், மூச்சு முட்டியும் பல உயிரினங்கள் மடியும். அதுவும் பெட்ரோலியத்தில் பலவித நச்சுப் பொருட்கள் (toxic components) இருப்பதால் அவற்றை உட்கொள்ளும் உயிரினங்கள் இறந்து போவதொடல்லாமல் புதிய உயிர்கள் பிறப்பதையும் அவை தடுத்துவிடும். இதனால் பல உயிரினங்கள் நாளடைவில் மறைந்து போகும் அபாயம் இருக்கிறது.

சூழலியல், தொழில்நுட்பம், பண்டைத் தொழில்கள் »

முத்து – ஆழ் கடலில் ஓர் அமைதியான அழகு

இன்று இயற்கை முத்தெடுக்க முத்து குளிப்பது அறவே நின்றுவிட்டது. தமிழ் நாட்டில் தூத்துக்குடியில்தான் கடல் முத்து எடுக்க முத்துக்குளிப்பது வழக்கமாக இருந்தது. இன்று அங்கும் இந்தத் தொழில் அடியோடு காணாமல் போய்விட்டது. முத்து நகரம் என்ற பெயர் மட்டும் எஞ்சியுள்ளது.