முகப்பு » தொகுப்பு

அறிவியல் »

விஞ்ஞான முட்டி மோதல் –9

ஹிக்ஸ் போஸான் பற்றிய ஆய்வு இன்னும் சில ஆண்டுகள் தொடரும். இந்த ஆய்வின் முடிவு,நம் அணுக்கட்டுமானம் பற்றிய நம் புரிதலை உறுதி செய்யலாம். இல்லையேல், புதிய அணுகுமுறைக்கான உந்துகோலாகவும் இருக்கலாம். விஞ்ஞானிகள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள். சரி, இந்த ஹிக்ஸ் விஷயத்தை விட்டால் வேறு எந்த விஷயமும் இல்லையா?

அறிவியல் »

விஞ்ஞான முட்டி மோதல் - பகுதி 7-8

ஒவ்வொரு முறை, ஒரு புதிய அணுத்துகள் வேகப்படுத்தும் எந்திரத்தை உருவாக்கினாலும், முதலில் விஞ்ஞானிகள் செய்யும் வேலை, நியமான அணு அமைப்பு மாடல் இன்னும் சரிப்பட்டு வருகிறதா என்று பார்ப்பதுதான். பல முறை இந்த சோதனைகளைக் கடந்த 40 ஆண்டு காலமாக செய்து, இதுவரை சரியாகத்தான் உள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இத்தனைக்கும் இந்த ஆண்டு வரை ஹிக்ஸ் போஸான் தண்ணி காட்டியது.

அறிவியல் »

விஞ்ஞான முட்டி மோதல் - 5

பல வித அணு சோதனைகளுக்கும் அடிப்படை ஹைட்ரஜன் வாயு. ஹைட்ரஜன் அணுவில் சுழலும் ஒரு எலெக்ட்ரான், அணுக்கருவினுள் உள்ள ஒரு ப்ரோட்டானைச் சுற்றுகிறது. இதில் நியூட்ரான் கிடையாது. 1930 –களில் உருவாக்கப்பட்ட முதல் அணு வேகப்படுத்தும் கருவியான சைக்லோட்ரானிலிருந்து (cyclotron) இன்று ராட்சச உருவில் அணு ஆராய்ச்சிக்கு உதவி வரும் LHC-வரையில் அடிப்படை மூலப்பொருள் ஹைட்ரஜன் வாயுதான்.ஹைட்ரஜன் இயற்கையில் சேர்மங்களாகத் (compounds) தான் தோன்றுகிறது.

அறிவியல் »

விஞ்ஞான முட்டிமோதல் - தொடர்கிறது

எலெக்ட்ரான் மிகவும் சன்னமான துகள். எவ்வளவு சன்னம் என்று விளக்க, ஒரு கிலோ எடையுள்ள சர்க்கரைப் பை ஒன்றை எண்ணிப் பாருங்கள். ஒன்றரைக் கோடி பூமிகளுடைய எடையுடன் ஒப்பிட்டால், சர்க்கரைப் பை எவ்வளவு சன்னமானது என்று எண்ணிப் பாருங்கள். ஒரு கிலோ சர்க்கரைப் பையுடன் ஒப்பிட்டால் எலெக்ட்ரான் அதே அளவு சன்னமானது! இதைச் சரியாகப் புரிந்து கொண்டு, சில பல கோடி எலெக்ட்ரான்களை வேண்டியபடி நாம் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டதன் விளைவு, நீங்கள் இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்!

அறிவியல் »

விஞ்ஞான முட்டி மோதல்

குவாண்டம் பெளதிகம் என்பது ஒரு நூறாண்டுக்கு மேல் விஞ்ஞானிகளின் உழைப்பினால் உருவாக்கப்பட்டத் துறை. இதனால், நம் நுண் அளவு புரிதல் (understanding of the small) வளர்ந்துள்ளது. மின்னணுவியல் துறையின் வளர்ச்சியால் இன்று கணினி, செல்பேசி, தட்டை திரை டிவி, டிஜிட்டல் காமிரா, தொலைத்தொடர்பியல் யாவும் வளர்ந்து சமுதாயத்திற்கு உதவியுள்ளன. 20 -ஆம் நூற்றாண்டின் பெரும் மனித வளர்ச்சிக்கு உதவியது குவாண்டம் பெளதிக துறையை அடிப்படையாய் கொண்ட பல துறைகள் என்றால் மிகையாகாது.

சூழலியல் »

சர்ச்சை மூட்டும் பச்சை நிறமே - இறுதி பாகம்

பல்வேறு துறைகள் சக்தியை பலவாறும் உபயோகிக்கப்படுகின்றன. அதே போல, இயற்கை வளங்களும் பல வகைகளில் உபயோகிக்கப் படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு காகிதத் தொழிற்சாலை என்று வைத்துக் கொண்டால், அதன் நீர், மின்சாரம், மரம் மற்றும் வெப்ப உபயோகம் ஒரு வகையில் இருக்கும். ஆனால், ஒரு அலுமினியத் தொழிலில், மரம் தயாரிப்பில் உபயோகிக்க மாட்டார்கள். ஏராளமான கனி வளம் மற்றும் மின்சாரம் உபயோகிக்கப் படும். எப்படி, அலுமினியத் தொழிலையும், காகிதத் தொழிலையும் ஒரே முறையில் அளவிடுவது? அத்துடன், இந்திய காகிதத் துறைக்கும், ஸ்வீடன் நாட்டு காகிதத் தொழிலையும் எப்படி அளவிடுவது?

சூழலியல் »

சர்ச்சை மூட்டும் பச்சை நிறமே

முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி, அல் கோர், (Al Gore) புவி சூடேற்றம் மற்றும் அதனால் உண்டாகும் தீய விளைவுகளைப் பற்றி எல்லோருக்கும் புரியும்படி பவர்பாயிண்ட் காட்சியளிப்பு செய்து நோபல் பரிசையும் தட்டிச் சென்று விட்டார். அவர் தலைவலியைப் பற்றி சொல்லப் போய், உலகிற்கு திருகு வலி வந்த கதைதான் போங்கள்! ஒரு புறம் தீய விளைவுகளை விஞ்ஞானிகள் விளக்கோ விளக்கென்று விளக்குகிறார்கள். யாராவது, ஏதாவது, செய்வார்கள் என்று யாரும், எதையும், செய்யாமல் ஒரு 6 வருடம் போயே போய்விட்டது! அட, பிரச்சனையை அழகாக சாட்சியங்களுடன் சொன்ன விஞ்ஞானிகள் ஏன் அதற்கான தீர்வுகளைச் சொல்லவில்லை?

தொழில்நுட்பம் »

என்று தணியும் இந்த எண்ணை தாகம்? - இறுதிப் பகுதி

பல நாடுகளிலும், ஆற்றல் சேமிப்பு முயற்சிகள், வேறு வழியின்றி மேற்கொள்ளப் படுகின்றன. இதில், முழு மனதுடன், எந்த அரசாங்கமும் இயங்குவதாகச் செய்தி இல்லை. இதற்கு காரணம், தேவையான சக்தி உற்பத்திக்காக தடுமாறும் அரசாங்கம் ஒவ்வொன்றும், ஏதோ ஒரு வித்ததில் சக்தி விரயத்தால் பயனடைகிறது. பெட்ரோல் விலை உயர்வதால், விற்பனை வரி மூலம் அரசாங்கம் பயனடைகிறது. குடிமக்கள் கட்டுப்பாடின்றி சக்தியை வீணடித்தால், சக்தி கட்டணத்திலோ, அல்லது வரியிலோ அரசாங்கம் பயனடைகிறது.

தொழில்நுட்பம் »

என்று தணியும் இந்த எண்ணை தாகம்? - பகுதி 2

பெட்ரோலுக்கு ஒரு மாற்று மாயப் பொருள் என்று எதுவும் இல்லை. அதுவும் பெட்ரோலிடமிருந்து அனைத்து பயன்களிலும் மாற்று என்ற பேச்சுக்கு இடமில்லை. சக்தி உற்பத்தி மற்றும் சாதாரணப் பயண (எல்லா வகை பயணங்களும் அல்ல) உபயோகங்களுக்கு மாற்று வழி கண்டால் ஓரளவிற்கு சமாளிக்கலாம். சக்தி உபயோகத்தை கொஞ்சம் குறைக்க வழி இருந்தால் இன்னும் நல்லது. விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இதை அவ்வளவு எளிதான பிரச்சனையாக நினைப்பதில்லை.

தொழில்நுட்பம் »

என்று தணியும் இந்த எண்ணை தாகம்?

மாற்று சக்தி ஐடியாக்களை கடந்த 40 வருடங்களாக நம் சமூகங்கள் ஒரு சந்தேகத்துடனே பார்த்து வருகின்றன. ஏனென்றால், இவை மாணவ தொழில்நுட்ப முயற்சிகள், அல்லது நடைமுறைக்கு வராத செய்திகளாக வலம் வருகின்றன. எப்படியோ அரசாங்கங்கள், எண்ணைய் நிறுவனங்கள் இம்முயற்சிகளை செயலிழக்கச் செய்துவிடுகின்றன.

தொழில்நுட்பம் »

பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா? - இறுதிப் பகுதி

க்ரெடிட் கார்டுகள் கண்டதுக்கெல்லாம் கட்டணம் வசூலித்து வந்தார்கள். ஆரம்பத்தில் இதற்கு அவர்கள் சொன்ன காரணம், உயர்தர பாதுகாப்பான வலையமைப்பு செலவுகளை மீட்பதற்கே என்பது. இன்று வலையமைப்பு செலவு குறைந்து கொண்டே வருகிறது. கிரெடிட் கார்டு கம்பெனிகள், இடை கம்பெனிகளான processors எல்லோரும் இணைய புரட்சியால் முன்னைப் போல கட்டணம் வசூலிக்க முடியாது என்பதை உணரத் தொடங்கியுள்ளார்கள்.

தொழில்நுட்பம் »

பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா? - இரண்டாம் பகுதி

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் ஒரு வெள்ளியன்று தள்ளுபடி விற்பனை திருவிழா போல வருடம்தோறும் நாடெங்கும் நடைபெறும். இதை கருப்பு வெள்ளி (black Friday) என்கிறார்கள். சமீப காலமாக, வெள்ளியுடன் கருப்பு திங்களும் (black Monday) உண்டு. திங்களன்று இணையம் மூலம் மட்டுமே தள்ளுபடி விற்பனை. சில்லரை வியாபாரிகள் கருப்பு திங்கள் வியாபாரம் வளர்ந்து வருவதை கவனித்து வருகிறார்கள். அடித்து பிடித்துக் கொண்டு வரிசையில் குளிரில் அல்லல்படுவதைவிட க்ளிக்கினால் அடுத்த வாரம் குறைந்த விலையில் ஆசைப்பட்ட பொருளை வாங்கி விடலாம்.

தொழில்நுட்பம் »

பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா?

கனடாவின் ஒரு பகுதியான யூகான் மாகாணத்தில், ஒரு பழங்குடித் தலைவர் பேட்டி ஒன்றில் அவர்களது மொழி பற்றி சி.பி.சி. க்கு அளித்த பேட்டியில், “எங்கள் மொழியில் பனி சம்பந்தப்பட்ட வார்த்தைகள் கிட்டத்தட்ட 80. ஏனென்றால் எங்களின் மையம் இயற்கை. அதோடு ஒட்டி வாழ்கிறோம். உங்கள் ஆங்கிலத்தில் ‘பணம்’ என்ற விஷயத்துக்கு ஏறக்குறைய 80 வார்தைகள் இருக்கின்றன. ஏனென்றால், உங்கள் மையம் அது!”

தொழில்நுட்பம் »

மின் புத்தகப் புழுக்கள்

விருந்தினர்கள் வீட்டிற்கு வரும் பொழுது, சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றை மேற்கோள் காட்டி அப்படியே தன்னுடைய புத்தக அறைக்கு சென்று அந்த புத்தகத்தில் சரியாக எந்த பக்கத்தில் அப்படி சொல்லியிருக்கிறது என்று சுட்டிக் காட்டுவதன் பெருமையே/சுகமே தனி. சிறிய மின் புத்தகக் கருவியை இயக்கி, அதில் மிக எளிதில் புத்தகங்களில் தேடி இதைக் காட்டும் பொழுது, ஏதோ எலக்ட்ரானிக் தில்லாலங்கடி செய்வது போல பிசு பிசுத்து விடுகிறது!

தொழில்நுட்பம் »

இலவச இணையம் - எப்படி சாத்தியம்? - இறுதி பாகம்

ஃபேஸ்புக் சமீபத்தில் அதன் profiles ஐ மாற்றியது. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றையே இதன் மூலம் எழுதிவிடலாம். சமூக வலையமைப்புக்கு நாங்கள் வழிவகுக்கிறோம் என்று பறை சாற்றும் ஃபேஸ்புக், எத்தனை பேரை கேட்டு இதைச் செய்தது? அதே போல, பல தருணங்களில் ஃபேஸ்புக், அதன் நுகர்வோரின் அந்தரங்கம் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. நுகர்வோர் சொல்வதையே செய்கிறோம் என்று சொல்லி வரும் கூகிள், வேவ் (wave) என்ற ஜிமெயில் சேவையை தொடங்கி நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டது.