உலகச் சிறுகதை »
தங்கள் அடுக்கக கட்டட வாயிலை அடைகிறார்கள். உள்வராந்தா இருட்டிக் கிடந்தது. திடுதிப்பென்று, சொல்லப்போனால் யோசனையே இல்லாமல் அவன் தன் கையில் இருந்து கத்தியை வெளியெடுத்தான். அந்தச் சந்தில் தட்டுப்பட்டானே அவன்… ஒருவேளை எங்களைக் கொல்ல முயற்சி செய்திருந்தால்?… என யோசித்தான். கத்தியை நீட்டிக்கொண்டான். ஒரு சுத்து சுத்தி மனைவியைத் தாக்கினான். ரெண்டு முறை, ஒரு டஜன் முறைகள், பைத்தாரத்தனமாய்க் குத்தினான். ஒரு அலறல். மனைவியின் உடல் சரிந்தது.
உலகச் சிறுகதை »
இந்தியச் சிறுகதை »
அவன் பிரச்னை நரம்புக் கோளாறு அல்ல, உணர்வுபூர்வமானது. அவனுக்கே இதெல்லாம் தானே பழகிக்கொள்ள நாளெடுக்கும். இப்படித் தடுமாற்றங்களில் அமெரிக்கர்கள் நிறைய வைத்தியச் செலவு செய்கிறார்கள். ஆனால் இந்த உணர்ச்சி அலையெழுச்சிகளுக்கெல்லாம் முழு நிவாரணம் என்பது இல்லை. கொஞ்சமாய் சிறு ஆசுவாசம் கிட்டலாம். திகிலுணர்சசி ரொம்ப உள்ளாழத்தில் ஒளிந்திருக்கிறது, எடுக்கிறது சிரமம். ஆனால் விபரீதப் பொழுதுகளில் சட்டென எழும்பி அது கிடுகிடுவென மேலே வருகிறது.
இந்தியச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »
நான் விருந்தளிக்கிறவன் அல்ல. நான் அவன் அப்பா. இல்லாத அவன் அப்பா நான்தான். அவன் தொட்டுணர்ந்த அப்பா. அவனைவிட்டு விலகியிருப்பதான என் பாவனையில், அவனது இதயத்துக்கும், ஆத்மாவுக்கும் வஞ்சனை செய்தேன் நான். ஆனாலும் உள்ளூற நான் அவன்சார்ந்த நெருங்கிய இணைப்பைக் கொண்டிருந்தேன், அதையிட்டு மேலதிகம் அக்கறையான சிந்தனையைச் செலுத்தவில்லை.
சமூக வரலாறு, புத்தகவிமர்சனம், மொழிபெயர்ப்பு »
ஒரு துருக்கியக் கேப்டன் பலாகியனிடம் சொன்னான். ”யுத்தநேரம் என்பதால் குண்டுகள் கிராக்கியாயிருந்தன. எனவே மக்கள் கிராமத்தில் என்ன கிடைக்கிறதோ அதையெல்லாம் கையிலெடுத்தார்கள் - கோடரிகள். வெட்டுக்கத்திகள், புல் அரிவாள், பிடியறுவாள், தடிகள், மண்வெட்டிகள். சுத்தியல்,கொறடுகள்- இவற்றை வைத்தே கொன்று குவித்தார்கள்.”
உலகச் சிறுகதை »
”வெளிய நல்ல மழைப்பா. குளிர் வெடவெடங்குது…” வழக்கம்போல ஒராள் பருவநிலை பத்திப்பேச மற்றவர்கள் கண் தன்னைப்போல ஜன்னல்பக்கம். கிரனோவ் தலையை நிமிர்த்தியபோது கழுத்துச் சுருக்கத்தில் நரம்பு விண்ணென்று புடைத்தது நீலமாய். அப்படியே தலையணையில் பின் சரிந்தார். மருந்தை சொட்டு எண்ணி தம்ளரில் விட்டபோது அவள் உதடுகளை சேஷ்டை செய்தாள். அடர்த்தியான கருங் கூந்தலில் மழை முத்துக்கள். கண்ணின் கீழே நீலமாய் என்ன அழகான நிழல்கள்!



