முகப்பு » தொகுப்பு

அறிவியல் நவீனம் »

எதையோ கனவுகிற விளையாட்டு

அந்தக் குரலிலேயே தெரிந்து போகிறது, மிகக் கவனமாக பீதியடையாமல் இருக்க முயற்சி நடப்பது. மிகவும் பயந்து போயிருக்கிற ஒரு தாய், தன்னிடம் உள்ள அத்தனை அலசலறிவையும் பயன்படுத்தி, தன் மூளையின் வேதிப்பொருட்களின் உத்வேகத்தை மீறித் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைப் பல்லாலும் நகத்தாலும், ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ளாமல், புத்திசாலித்தனத்தால் எதிர் கொண்டிருக்கிறாள் என்பது. “ஏதாவது மோசமாக நடந்து விட்டதா?”

உலகச் சிறுகதை »

கிருஸ்த்மஸுக்குப் பிறகு மூன்றாவது நாள்

பையன் ஓவரால் அணிந்திருந்தான். அவனுடைய அப்பாவுடைய கட்டம் போட்ட மேல் அங்கி (கோட்) ஒன்றையும் போட்டிருந்தான். அவன் அப்பா வளர்ந்து அந்தக் கோட்டைப் போட முடியாமல் போன பின்பு இவனுக்கு வந்திருக்க வேண்டும், அது மட்டும் சரியாகப் பொருந்தினால் இவனுக்கு நல்ல மேல் கோட்டாக இருந்திருக்கும். அதன் கைகள் பையனுக்காக வெட்டப்பட்டிருந்தன, ஆனால் வேறேதும் செய்யப்படவில்லை.

உலக அரசியல் »

ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும்

ஒரு நிருபர் பென்யா நியதோவிடம் அவரது வாழ்வை மாற்றிய மூன்று புத்தகங்களைக் குறிப்பிடும்படி கேட்டார். அவருடைய தடுமாற்றமான பதில், பின்னால் யு ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது, முள் முனையில் நிற்பது போன்ற துன்பம் தரும் நான்கு நிமிடங்கள் நீடித்தது. முதலில், அவர் தனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி குழறினார், ஆனால் அவற்றின் தலைப்புகள் அவருக்கு நினைவில்லை. அவர் மொத்த பைபிளையும் படித்ததில்லை என்ற போதும், அதில் சில பத்திகள் அவரது இளம்பருவத்தில் மிக நம்பிக்கையூட்டுவதாக இருந்தன என்று யோசித்துச் சொன்னார்.

புத்தகவிமர்சனம் »

க.நா.சுப்ரமணியம் - தஞ்சை பிரகாஷ்

பணத்தட்டுப்பாட்டின் காய்ச்சலில் வதங்கிய இருவரும், சி.சு.செல்லப்பாவும், மணிக்கொடி எழுத்தாளர்களும் எப்படி உயர் இலக்கியம் என்ற கனவின் குளுமையில் இளைப்பாறினார்கள் என்பதை இங்கு படிக்கலாம். காலணா, அரையணாவெல்லாம் இவர்களுக்கு அத்தனை முக்கிய விஷயங்களாக இருந்தது தெரிந்து இவர்கள் எதற்காக அத்தனை போராடி ‘இலக்கியம்’ படைத்தார்கள் என்பது குறித்து நமக்கு வியப்புதான் எழும். ஏனெனில் இவர்கள் படைத்த இலக்கியத்தை வாங்கிப் படிக்க அப்படி ஒரு சமூகமே அங்கு இல்லை.

ஆளுமை, உரையாடல், மொழிபெயர்ப்பு »

ஜெஃப் டையருடன் ஒரு நேர்காணல்

“நான் பற்பல பொருள்களைப் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். எல்லாப் பொருள்களுக்கும் ஒரே மாதிரி கட்டமைப்பையே பயன்படுத்தியிருந்தால், அதெல்லாம் ஒரு தூசுக்குச் சமமாகி விடும்..”

ஆளுமை, திரைப்படம் »

சாப்ளின் - பகுதி 2

நவீனத்துவம் துவங்கிய பொழுதிலிருந்து மனிதர் துரிதத்தையும் வேண்டி நிற்கிறார். நவீனத்துவத்தின் கடைக்கால்களான கருத்தியல்கள் உலகெங்கும் பரவி, தேர்ந்த விசாரணையற்று அனைத்து நிலங்களிலும் நடைமுறைப்படுத்தப் படுவதன் விளைவு, படைப்பூக்கம் என்பது வளர்வதன் கதியை விட, அழிப்பின் கதி கூடுதலாக உள்ளது. விளைவு, செம்மை என்றும்போல் தொலை வானாகவே இருக்கிறது மானுடருக்கு.

ஆளுமை, உரையாடல் »

பெரிய வீட்டின் ஒரு சிறிய பிறைக்குள்… - ஆதவனை வாசிப்பதில் உள்ள அடிப்படைச் சிக்கல் - ஓர் உரையாடல்

“ஆதவனை நான் தாழ்வாகக் கருதவில்லை. ஆனால் அவர் பெரும் ஆகிருதி உள்ள எழுத்தாளர் அல்ல. அ.மி சமகாலத்தில் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு காடா விளக்கின் புகை கக்கலில் முகம் ஒளியூட்டப்பட்டும், இருண்டும் தெரிய, உண்டிகளை விற்கும் ஒரு தெருமுனைத் தள்ளு வண்டி வியாபாரியை அ.மி தீட்டும் சித்திரத்தின் எளிய உறுதியை ஆதவனால் அடைய முடியாததற்குக் காரணம், அவர் கூடதிகமாக உளநிலைச் சிக்கல்களை இழை பிரிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தியது என்று நினைக்கிறேன்.”

ஆளுமை, சமூகம், திரைப்படம் »

சாப்ளின் : செம்மையும் சமூகமும் - 1

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்த நாட்டில் அவருக்கு அபரிமித பாராட்டும் வசதிகளும் கிட்டினவோ அதே நாட்டிலிருந்து அந்நூற்றாண்டின் நடுவில் கிட்டத் தட்ட ஒரு குற்றவாளி போல நடத்தப்பட்டு, துரத்தப்பட்ட நிலையில் அவர் இருந்தார். அவருடைய அரசியல் கருத்துகளை ஏற்க முடியாத வலது சாரிப் பீதி அமெரிக்காவிலிருந்து அவரைத் துரத்தியது. அவரை அது மட்டும்தான் துரத்தியது என்று சொல்லி விட முடியாது.

அரசியல், சமூகம் »

இலட்சியக் கொலைகளும், அலட்சியக் கொலைகளும்

ஒரு மைல் நீளத் தெருவில் சுமார் 100 வீடுகளிருக்கும்- பூனைகள் உலவுவதால் என்ன விளைவுகள் என்று சமீபத்தில்தான் எனக்கு உறைத்தது. பூனைகள் அமெரிக்காவில் லட்சக்கணக்கான சிறு பறவைகளைக் கொல்கின்றன என்று படித்த போதுதான் எனக்குப் பிரச்சினையின் பரிமாணம் தெரிந்தது. லெனினியம்/ஸ்டாலினியம் எத்தனை லட்சம் பேரைக் கொன்றன என்பதை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால்தானே புரிகிறது? கம்யூனிசத்தின் பலிகளை லட்சிய பலிகள் என்று சொன்னால் முதலிய அமைப்பு இந்த மாதிரியான அலட்சிய பலிகொண்டு அது சம்பந்தமான குற்ற உணர்வுக்குக்கூடத் தேவையில்லாத குழந்தைமையை பாவித்துக் கொண்டிருக்கிறது.

அனுபவம், சூழலியல் »

ஜிப் லாக்கில் அரை நாள்

மண்புழுவை தெய்வம் போல மதிக்கவேண்டும் என்பது தெரியவில்லை. அதை உபாதை செய்யக் கூடாது என்று பெரியவர்கள் அடித்துச் சொல்லிக் கொடுப்பார்கள். எந்தப் பூச்சியையும் கொல்லக் கூடாது என்பதும் வீட்டில் சொல்லித் தருவார்கள். பல்லிகள் வீடெங்கும் உலா வரும். சமையல் உள்ளில் மட்டும் அவற்றை உலாவ விடுவதில்லை. சாமி உள் எனப்படும் பூஜை உள்ளில் பல்லிகளுக்கு பூரண சுதந்திரம். அங்கு கரப்புகள் அவ்வப்போது நடமாடும் என்பதால் இருக்கலாம். நம் ஊர் சாமிகளுக்கும் கரப்புகளுக்கும் ஏதோ கரிசனம் கலந்த உறவு.

ஆளுமை, இலக்கியம் »

பார்த்தும், போர்ஹெஸ்ஸும் பின்னே டயரும் - சில அறிமுகக் குறிப்புகள்

இன்னும் பொருத்தமாகச் சொன்னால், டயர் (Geoff Dyer) வாழ்க்கையின் விசித்திரங்களையும், பாணிகளையும் ஈடுபாட்டுடன் கவனிக்கும் வாழ்க்கை ரசிகர் ; அதில் குதூகலமாய் திளைக்கும் விசிறி என்று கூடச் சொல்லலாம். அதனால் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போகாமல்- அதான் நாவலெழுதுகிறார், புனைவுகளை எழுதுவது எப்படி என்று பல்கலையில் போதிக்கிறார், அவற்றைச் செய்யாமல்- பார்ப்பது, கேட்பது, ருசித்தது, அனுபவித்தது என்று பலதையும் பற்றி தனக்காகவும், நமக்காகவும் குறிப்புகளை எழுதித் தள்ளுகிறார். தனக்காகவும் என்று சொன்னதை இலேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இலக்கியம், கவிதை »

அனைத்தையும் கடந்ததைப் பற்ற நினைக்கும் கவிஞர்- டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர்

2011 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசை ஸ்வீடன் நாட்டுக் கவிஞரான டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமருக்கு வழங்கி இருப்பதாகச் சமீபத்தில் செய்தி கிட்டியதும், உலகெங்கும் இலக்கியவாதிகள் நடுவே வழக்கமாக எழும் சலசலப்பு எழுந்தது. இந்தியாவில், தமிழில் இவர் குறித்து ஏதும் அதுவரை பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் மேற்கில் கவிதைகளைப் படிப்பவர் நடுவே ட்ரான்ஸ்ட்ரமர் பற்றி நல்ல தகவலறிவு இருந்ததாகத் தெரிய வந்தது. இதர இலக்கிய வகைகளைப் படிப்பவர்களுக்கு இவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்பதைச் சுட்ட வேண்டும்.

சமூகம், பொருளாதாரம் »

பெருங்கொள்ளையும், அன்னிய வங்கிக் கணக்குகளும்

ஒரு முறை தன்னிடம் இருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களைக் கொடுப்பதென்று தீர்மானித்து விட்ட இந்த வங்கிகள், இதர நாடுகளின் அரசுகள் இத்தகைய கணக்குகளைப் பற்றிய தகவல் சேகரிக்க முனைந்தால் தருவதாக உறுதி கொடுத்திருக்கின்றன. ஒரு நாடு மட்டும் இந்தக் கணக்குகளைப் பற்றிச் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அது எந்த நாடு என்று யோசியுங்கள்!! ஆம், அது இந்தியாதான்.

அறிவியல் கதை »

அதெல்லாம் மாறியபோது - 3

வைலவேக்கு ஆண்கள் வரப் போகிறார்கள். இப்போதெல்லாம் சில இரவுகள் நான் தூங்காமல் விழித்துக் கவலைப்படுகிறேன், இந்த கிரகத்துக்கு வரப்போகிற ஆண்களைப் பற்றி, என் இரண்டு பெண்களைப் பற்றி, கடைசிக் குட்டி பெட்டா காதரீனாஸன்னைப் பற்றி, கேட்டியையும், என்னையும் பற்றி, என் வாழ்வுக்கு என்ன ஆகும் என்பதைப் பற்றி. எங்கள் முன்னோர்களின் நாளேடுகள் ஒரு நீண்ட கதறலாக ஒலிக்கின்றன, நான் இந்த மாறுதலைக் குறித்து மகிழ வேண்டுமோ என்னவோ. ஆனால் ஆறு நூற்றாண்டுகளை அப்படி உதறி எறிய முடியவில்லை. அல்லது 34 வருடங்களைக் கூட உதற முடியவில்லை.

அறிவியல் கதை »

அதெல்லாம் மாறியபோது - 2

வாயில் முற்றத்தில் ஒரு நபர் நின்றான். அந்த இன்னொரு உயரமான மனிதன். சில நிமிடங்கள் அவனைக் கவனித்தேன் - வேண்டும் போது என்னால் கொஞ்சமும் ஒலியெழுப்பாமல் நகர முடியும்- அவன் என்னைக் கவனிக்கிற மாதிரி நான் நின்ற போது, அவன் தன் கழுத்தில் இருந்த ஒரு சிறு எந்திரத்துடன் பேசுவதை நிறுத்தினான், மிக உயர்ந்த தரமுள்ள ரஷ்யனில் பேசினான், “ பாலினச் சமத்துவம் பூமியில் மறுபடி நிலைநாட்டப்பட்டு விட்டதென்று உங்களுக்குத் தெரியுமா?”