அறிவியல், பேட்டி »
இஸ்லாமிய நாடுகளில் கல்வித்திட்டத்தின் மீது மத ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு அமெரிக்காவிலும் மத ஆதிக்கம் இருக்கிறது. தொழிற்வளம் முன்னேறிய (இஸ்லாமிய) நாடுகளில் நம்மை துருக்கியுடன் ஒப்பிடலாம். சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைவிடவாவது நாம் சில படிகள் மேலே இருக்கிறோம் என்றே நான் நினைக்க விரும்புகிறேன்.
உலக அரசியல் »
சீனா கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் பத்து சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக அதன் சமூகம் மிகுந்த துடிப்புடனும், ஆரோக்கியத்துடனும் திகழ்கிறது. ஒரு நாடு வளர வளரத் தனக்கான புதிய தேவைகளை உருவாக்கிக் கொள்ளும். இந்தத் தேவைகள் தம்மைப் பல வடிவங்களில் விரிவாக்கிக் கொள்ளத் துடிக்கும். கடந்த 30 வருடங்களாக தன்னுடைய எல்லைக்குள் தன் ஆளுமையை பலப்படுத்திக் கொண்ட சீனா, தற்போது உலகளவில் தனக்கான ஆளுமையை நிறுவ எத்தனிக்கிறது. இதன் முதல் கட்டமாக தன்னை முழுதாக தொகுத்துக் கொண்டு, தன் பார்வையை மொத்த உலகத்தின் மீதும் திருப்பியிருக்கிறது.
சமூகம், திரைப்படம் »
“இரண்டு ஏக்கர் நிலம்” வழக்கமான இந்திய திரைப்படங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டே துவங்குகிறது. காய்ந்து, பாளம் பாளமாக வெடித்துப் போன நிலம். ஒரு இலை கூட இல்லாத உயிரற்ற ஒரு மரம். விவசாயிகள் துன்பத்தில் வாடுகிறார்கள். அடுத்த காட்சி சட்டென திசை மாறுகிறது. மேகத்தை கிழித்தபடி பெய்யும் மழை. விவசாயிகள் மழையில் நனைந்து, தங்கள் துன்பம் தீர்ந்ததென்று மகிழ்ச்சியில் ஆடி பாடுகிறார்கள். திரைப்படம் பயணிக்கப் போகும் திசை குறித்த எந்த ஒரு முன்முடிவையும் பார்வையாளன் மேற்கொண்டுவிட முடியாது. மிக நுட்பமாக ராய் தனது பார்வையாளனை வழிதவற வைக்கிறார்.
இந்திய வரலாறு, மொழிபெயர்ப்பு »
சிந்து நாகரிகம் மீதான திராவிடர்களின் உரிமை குறித்த கருத்துக்கள், ஆரிய படையெடுப்புக் கோட்பாடு குறித்த காலனிய ஆராய்ச்சிகளின் எஞ்சிய மிச்சங்களே. ஆரிய படையெடுப்பு குறித்த ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக விளங்குவதால் இன்று வரை இவை உயிர்ப்புடன் உள்ளது. ஒரு சில சித்தாந்தங்களின் துணையுடன் இந்த ஆராய்ச்சிகள் அசைக்க முடியாத தூணைப் போல் நிறுவப்பட்டுள்ளது. “ஆரிய இனம்” அல்லது “திராவிட இனம்” என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை. எப்போதும், அந்த கருத்துருக்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளிக்க முயலும் யாரும், அத்தகைய ஒன்று என்றுமே இருந்ததில்லை என்பதை வெகு விரைவில் கண்டுகொள்கிறார்கள்.
சமூகம் »
வெகுஜன மக்கள் பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் எளிமைப்படுத்தி சொல்வதையே விரும்புகிறார்கள். இதன் முக்கிய விளைவு? துறைசார் அறிவு, துறை சாராதவர்களிடமிருந்து பெறப்படும் நிலை. உதாரணம் : இனம்/இந்திய வரலாறு குறித்த பாடம் எடுத்த அரசியல்வாதிகள், சினிமா உட்பட அனைத்தும் அறிந்தவனாக அறிவித்துக் கொள்ளும் கலைஞானிகள், விஞ்ஞானத்துடன் இணைத்துக் கொண்ட மதவாதிகள். இப்படி நீண்டபடியே இருக்கிறது இந்தப் பட்டியல். இதனால் சொல்பவர்களுக்கு காலப்போக்கில் ஒரு ஒளிவட்டமும், அதிகார பீடமும் நிச்சயம். கேட்பவர்களுக்கு? காதுல பூ!!
அனுபவம், சமூகம் »
26/11 என குறிப்பிடப்படும் அந்த பயங்கரவாத போர் இந்தியாவின் மீது நிகழ்த்தப்பட்டு ஓராண்டு முடியும் இத்தருணத்தில் உலகளவிலும், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அந்நிகழ்வின் பாதிப்பு குறித்து பேச வேண்டியது அவசியம். இந்திய சமூகத்தின் தனி ஒரு மனிதனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பையும் அசைத்துப் பார்த்திருக்கிறது. நமது அரசு அமைப்புகளின் தடித்தனத்தையும், தவறுகளையும் வெளிக்காட்டியிருக்கிறது. கூடவே நம் சமூகத்து குறைபாடுகளையும்.
அரசியல், பன்னாட்டு உறவுகள் »
காகிதங்களை நீட்டிய போதெல்லாம் கையெழுத்திடுவது நடிக/நடிகைகளுக்கு அழகு. ஆனால் பிரதமருக்கு அது அழகல்ல. கடந்த சில தினங்களில் உலக நாடுகள் நீட்டிய அனைத்து காகிதங்களிலும் நமது பிரதமர் கையெழுத்திட்டுள்ளார். ”அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? நாட்டின் எதிர்காலத்தை எந்த அளவிற்கு அது பாதிக்கும்? இந்தியாவின் வளர்ச்சியை இது எவ்வகையில் பாதிக்கும்?”, என்ற எந்த பிரக்ஞையும் அவரை உறுத்தியதாகத் தெரியவில்லை.
அரசியல், பொருளாதாரம் »
அரசியல், மொழிபெயர்ப்பு »
மாஓவின் அடுத்த சுய-விளம்பரம் 1960-களில், சீனாவில் கொடிய பஞ்சம் நிலவிய காலகட்டங்களில், பெரிய அளவில் நடைபெற்றது. அந்த வருடத்தில்(1960) மட்டும் 20 மில்லியன் மக்கள் பசியால் மடிந்தனர். அதே காலகட்டத்தில், மாஓ பிறநாடுகளில் இருந்த இடது-சாரி அமைப்புகளுக்கு பணத்தை வாரி வழங்கி, வேற்று நாட்டு மக்களிடமும் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்த முயன்றார். இந்த காலகட்டம் தான் ஆராய்ச்சியாளர்களால் மிகுந்த கவனத்திற்கு உட்படுத்தப் பட வேண்டியதாக கருதுகிறேன்.
அரசியல், மொழிபெயர்ப்பு »
தன் மூத்த மகன், கொரிய போரில் இறந்தபோது கூட மாஓ எந்த வருத்தமும் கொள்ளவில்லை. தன்னுடன் வார இறுதிகளையும், விடுமுறைகளையும் கழித்த தன் மகனின் விதைவையிடம் கூட இந்த செய்தியை இரண்டரை வருடங்களுக்கு பிறகுதான் தெரிவித்தார். கம்யூனிஸ ரகசிய நடவடிக்கைகளுக்கு பழகிபோயிருந்த அவரது மருமகளும், தன் கணவனிடமிருந்து தனக்கு எந்த கடிதமும் வராததை குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை.



