சிறுகதை »
முரளிக்கு பொதுவாகவே விளையாட்டுகளில் ஆர்வமில்லை. சிறுபிள்ளையிலிருந்த அப்படித்தான். நாடே கொண்டாடும் கிரிக்கெட்டைக் கூட அவன் அதிகம் பார்த்ததில்லை; விளையாடியதுமில்லை. இதுவரை அவன் வாழ்க்கையில் மூன்றே முறை தான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறான். மற்ற விஷயங்களில் எல்லாம் சகஜமாக பழகுபவன், விளையாட்டு என்று வரும் போது ஒதுங்கிவிடுவான். சில நேரங்களில் ஒதுக்கிவிடுவார்கள். அப்போது மட்டும் கொஞ்சமாய் வலிக்கும்.
சிறுகதை »
நிச்சயமற்ற தருணங்களால் நிரம்பிய இந்த வாழ்க்கையில் நம்மால் எவ்வளவு திட்டமிட முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. திட்டமிட்டா எல்லாமும் இங்கே நிகழ்கிறது? பொறியியல் சேர்ந்ததிலிருந்து, அமெரிக்கா வந்து, பர்ஸ் போனது வரை எதுவுமே அவன் திட்டமிடவில்லை. யாரோ பி.ஈ. படி என்றார்கள். ஈ.சி.ஈ.க்கு நல்ல மதிப்பு என்றார்கள். ஜி.ஆர்.ஈ. எழுது என்றார்கள். வி.எல்.எஸ்.ஐ.க்கு உடனே வேலை என்றார்கள். இவன் இங்கே இருக்கிறான்… ஆம்பிளிபியரோடும், டெலிவரி பொருட்களோடும், தொலைந்த பர்சோடும் போராடிக்கொண்டு!
அறிவியல் கதை, உலகச் சிறுகதை »
உலகச் சிறுகதை »
வண்ணங்கள் அவன் மனதில் ஓசைகளாய் ஒலித்தன என்பதைய் அவன் கண்டான். கோடைக்காலச் சூரிய ஒளி வீறிடும் சுரம். குளிர்கால நிலவொளி மெலிவான சோகப் புலம்பலொலி. வசந்தத்தின் புதுப்பச்சை கன்னாப்பின்னா தாளங்களில் முணு முணுப்பாயிற்று (ஆனாலும் காதில் விழுந்தது.) இலைகளூடே மின்னித் தெறித்து ஓடும் செந்நரியோ அதிர்ச்சியில் திக்கித் திணறும் மூச்சொலி. அத்தனை ஒலிகளையும் அவன் தன் வாத்தியத்தில் வாசிக்கப் பழகினான்.
உலகச் சிறுகதை »
நிராயுதபாணியான உள்ளூர் வாசிகளுக்கு முன் நான் ஒரு வெள்ளைக்காரனாய், கையில் துப்பக்கியை வைத்துக் கொண்டு இங்கே நிற்கிறேன். பார்ப்பவர்க்கு நான் ஒரு கதாநாயகன். உண்மையில் நான் ஒரு முட்டாள் பொம்மை. என்னை ஆட்டுவிக்கும் கயிறு பின்னால் நிற்கும் மஞ்சள் முக பொம்மலாட்டக்கார்களிடம் உள்ளது! ஒரு வெள்ளைக்காரன் சர்வாதிகாரியாகும் போது அவன் பறிப்பது மற்றவர்களின் சுதந்திரத்தை அல்ல; தன் சுதந்திரத்தை என்று அப்போது அறிந்து கொண்டேன்.
உலகச் சிறுகதை »
உங்கள் அன்புக்கு பதிலாக நீங்கள் இந்த அறையையும், வீட்டையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டீர்கள். இப்போது இந்த அறைதான் அவர்களுக்குத் தாய், தந்தை. உங்களை விட, அவர்களுக்கு இதுதான் இப்போது மிக முக்கியமாகி விட்டது. நீங்களோ இதை திடீரென்று பூட்டிவிட வேண்டும் என்கிறீர்கள். அதை அவர்கள் வெறுப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த வீட்டைக் கட்டி இயந்திர சுகங்களுக்கு நடுவில் உங்களைப் புதைத்துக் கொண்டுவிட்டீர்கள். நாளைக்கே உங்கள் சமையல் அறையில் எதாவது பிழை என்றால் நீங்கள் பட்டினிதான். உங்களுக்கு ஒரு முட்டையைக் கூட உடைக்கத் தெரியாது.
உலகச் சிறுகதை »
கடந்த ஏப்ரல் மாதம் மறைந்த சிறந்த இங்கிலாந்து எழுத்தாளரான J.G.பல்லார்ட் எழுதிய கடைசிச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு இது: ”…அவளுடைய இந்த அவமதிப்பால் கோவப்பட்டு, வேகமாக சுவற்றைத் தள்ளினேன். அதுவோ லேசில் பிடி கொடுக்கவில்லை. ஆனால் கைகளை விலக்கிய பின்னரே கவனித்தேன். சுவற்றின் மேல்பரப்பில் உதிர்ந்த சுண்ணாம்புத் துகள்களுக்கு மத்தியில் மெலிதான ஒரு விரிசல்! ஆர்வமாக மீண்டும் தள்ளினேன். விரிசல் பிளவாக அகண்டது. நத்தை வேகத்தில் நகரத் தொடங்கிய பிளவு, பின் புலி போல மேல் நோக்கி பாய்ந்தது. மூன்று அடிகள் நீண்டு, அலங்காரப் பூச்சுகளை எல்லாம் தாண்டி, முதல் மாடியில் உள்ள தடுப்புக் கம்பியை நெருங்கியது.”
உலகச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »
2081-ஆம் ஆண்டு. எல்லோரும் ஒருவழியாக முழுமுற்றான சமத்துவத்தை அடைந்து இருந்தனர். கடவுளின் முன்போ, சட்டத்தின் முன்போ மட்டுமே கட்டுப்பட்ட சமத்துவம் இல்லை அது. எல்லா நிலைகளிலும் அனைவரையும் முழுமையாக ஒருமைப்படுத்திய அதிசயம் அது. யாரும் யாரை விடவும் புத்திசாலியாக இல்லை, அழகாகவும் இல்லை. அவ்வளவு ஏன், எந்த ஒருவரும் மற்றவரை விட அதிக வலிமையும், சுறுசுறுப்பும் கூட கொண்டு இருக்கவில்லை.



