ஆளுமை, இசை »
ஜானகி பாடிய பல்வேறு முக்கிய பாடல்களை/ ஒவ்வொருத்தரின் தனி விருப்பபாடல்களை நான் சொல்லாமலே விட்டிருக்கிறேன். காரணம் ஜானகி என்பவர் ஒரு சகாப்தம்/ சரித்திரம் என்றெல்லாம் மார்பு தட்டுவதோ அல்லது அவரின் வாழ்க்கை/தொழில் வரலாற்றை அலசி ஆராய்வதோ இது வரை வாங்கிய விருதுகளை பட்டியலிடுவதோ இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்தியாவின் இரண்டாவது பெரிய கௌரவத்தை புறக்கணிக்கும் அளவிற்கு அவருக்கு இருக்கும் நேர்மையான நிலைப்பாட்டை அங்கீகரிப்பது மட்டுமே.
இசை, ரசனை »
பாடலின் மைய மெலடிக்கு இணையான முக்கியத்துவத்தை பாஸ்கிடாருக்குக் கொடுத்தார் இளையராஜா. இத்தனைக்கும் பாடல்களில் பாஸ்கிடாரின் உபயோகத்தைக் கவனித்துக் கேட்டு ரசிப்பவர்கள் வெகு சொற்பமானவர்களே. இன்று இணையதளங்களில் கிடார் வாசிக்கத்தெரிந்தவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னதாலும், ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறும் பல இசைக்கலைஞர்கள் வெகுவாகப் பரிந்துரைத்ததாலுமே ஓரளவுக்கு இளையராஜாவின் பாஸ்கிடார் பகுதிகளைப் பலர் கவனிக்க ஆரம்பிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் வெளியே தெரியாமல் ஒளிந்திருக்கும் பாஸ்கிடார் பகுதிகளுக்குக் கணக்கேயில்லை.
இசை »
‘உன் பார்வையில்’ என்ற பாடலும் இந்திய இசைக்கருவிகளில் உருவாக்கப்பட்ட ஜாஸ் வால்ட்ஸுக்கு உதாரணம். ஹார்மோனியத்தால் நிறைக்கப்பட்டிருக்கும் பாடலின் ஆரம்ப இசை ஜாஸ் வால்ட்ஸை கற்பனைக்கெட்டாத இடங்களில் பயன்படுத்துவதில் இளையராஜாவுக்கு இருக்கும் ஆளுமையைக் காட்டுகிறது. இப்பாடலின் ஹார்மோனியப் பகுதிகள் இளையராஜாவே வாசித்திருப்பவை. அருமையான ஹார்மோனியமும், தேர்ந்த குரல் வெளிப்பாடும் இப்பாடலின் இனிமையைப் பலமடங்கு கூட்டுகின்றன. இதைப் போலவே கேட்பதற்கு இனிமையான பாடலுக்கான இன்னொரு உதாரணம், எண்பதுகளில் வெளிவந்த ‘கீதம் சங்கீதம்’.
அனுபவம், இசை »
சென்றவாரம் கொண்டாடப்பட்ட 64-ஆவது இந்திய சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்படும் சிறப்புக் கட்டுரை:
“பெரிய ஆகிருதியைக்கொண்டதொரு மனிதருக்குப் பொருத்தமில்லாத மெல்லிய குரலில் பாடத் தொடங்கினார் தாகூர். அந்தப்பாடலின் முதல் பகுதியில் இந்தியாவின் மாநிலப் பகுதிகளைக் குறித்தும், மலைகளை, நதிகளைக் குறித்தும் ஒரு புவியியல் குறிப்பைத் தந்தார். அடுத்த பகுதியில் இந்தியாவின் பல்வேறு மதங்களைக் குறித்துப் பாடினார். அப்பாடலின் முதல் பகுதியின் கோஷம் எங்கள் காதுகளைத் திறந்தது. இரண்டாம் பகுதியின் கோஷம் எங்கள் தொண்டைகளைச் சரிசெய்ய வைத்தது. அவரை மீண்டும் மீண்டும் அப்பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டோம். இறுதியில் நாங்களும் பெருமிதத்தோடு ’ஜயஹே, ஜயஹே!’ என்று வாய்திறந்து பாடினோம்”.
இசை »
“கடந்து போகும் காலத்தை எதிர்த்து போராடும் இரு காதலர்கள் தங்களை இனம் கண்டுகொள்ளும் சமயம். அவர்கள் வாழ்வின் அந்த கடைசி வினாடிகள் தம் உயிரின் மேலானது என அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவை கவித்துவத்திற்காக சொல்லப்பட்ட வெறும் வார்த்தைகள் அல்ல. உண்மையிலே அந்த வினாடிகளுக்குப் பின் அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்”. ஏறக்குறைய இப்படித்தான் பாலச்சந்தர் இந்த பாட்டின் சிச்சுவேஷனை இளையராஜாவிடம் விளக்கியிருப்பார். அந்த உணர்வை இந்தப் பாடலில் இளையராஜா சொல்வதற்கு எடுத்து கொண்ட ஆயுதம் - மௌனம்.
இசை »
காலப்போக்கில் கஸலின் கட்டுக்கோப்பான சந்தம் இசையமைக்கத் தோதுவாகவே, உருது கஸல்களுக்கு முகாலயர்களின் காலத்தில் இசையமைத்துப் பாடும் வழக்கம் வலுப்பட்டது. இதே காரணத்தால் அன்றிலிருந்து இன்றுவரை கஸல் பாடல்கள் பாகிஸ்தானிய கலாசாரத்தில் முக்கிய அங்கம் வகித்து வருகின்றன. இந்தத் தலைமுறையில் இந்தியத் துணைக்கண்டம் கண்ட மிகச்சிறந்த இசைக்கலைஞர்களின் வரிசையில், பாகிஸ்தானைச் சேர்ந்த கஸல் பாடகர்களான மெஹதி ஹாசன், குலாம் அலி ஆகிய இருவரும் நிச்சயமாக இடம் பெற்றிருப்பர்.
இசை »
ரயிலோடு பின்னிப்பிணைந்து அமையும் கதைகளில் அவர் ரயிலை ஒரு கதாபாத்திரமாகவே கருதி இசை அமைக்கிறார். இதை ‘ஆலாபனா’ என்ற தெலுங்கு படத்தின் பின்னணி இசையிலிருந்து எளிதாக அறியலாம். இந்தியத் திரையுலகில் ரயிலை மையமாக வைத்து இசையமைக்கப்பட்ட பாடல்கள், பின்னணியிசைக் கோப்புகளைக் கணக்கில் கொள்ளும்போது இளையராஜாவின் இடம் அதில் நிச்சயம் முதன்மையானதாக இருக்கும்.




