முகப்பு » தொகுப்பு

புகைப்படத்தொகுப்பு »

ஒரு நாளின் எந்த மணித்துளியிலும் வெடிகுண்டு வெடிக்கலாம். கலவரம் நிகழலாம். நிச்சயமற்ற தருணங்கள். வலி கொடுக்கும் நிகழ்வுகள். இந்த புகைப்படங்களை பார்க்கையில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையின் பலியாடுகள் ஈராக்கியர்கள் மட்டுமல்ல என்று புரியும்.

வீடியோ »

பல்வேறு தளங்களைச் சேர்ந்த ஐம்பது மனிதர்களிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி. பதில்களில் தொனிக்கும் உணர்வுகளும் பலதரப்பட்டவை. அந்த கேள்விக்கான உங்கள் பதில் என்ன?

மகரந்தம் »

மகரந்தம்

தோரியத்தின் ஒரே பிரச்சினை அதில் மிஞ்சும் பொருள்களை வைத்து அணுகுண்டு தயாரிக்க முடியாது. இந்த ஒரு காரணத்துக்காகத்தான் உலக அணுசக்தியில் தேர்ச்சி பெற்ற நாட்டின் அரசுகள் தோரியத்தைப் பயன்படுத்தாமல், அதைவிட பன்மடங்கு கடினமான முயற்சியிலேயே கிட்டக் கூடிய யுரேனியத்தைத் துரத்தினார்கள். இப்போது நம் தேவை குண்டுகள் அல்ல, மின்சக்தி.

வீடியோ »

நாம் வாழும் உலகில் நம்மை சூழ்ந்திருக்கும் பல்வேறு உயிர்கள் பேசும் வார்த்தைகள் குறித்த ஒரு குறும்படம்.

மகரந்தம் »

மகரந்தம்

மேற்குலகம் தன்னுடைய கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளில் குவித்து வைக்கும். முதலில், குப்பைகள் ஏந்திய கப்பல்கள் வரும். அதைத் தொடர்ந்து வரும் சுகாதாரக் குழு அந்நாட்டு மக்களை சுகாதாரம் குறித்த பிரக்ஞை சிறிதுமில்லாதவர்கள் என்று அடையாளம் கண்டு அறிவிக்கும்.

புகைப்படத்தொகுப்பு »

Foreign Policy  இதழ் உலகின் பல்வேறு நகரங்களை தன்னளவில் வரிசைப்படுத்தியுள்ளது. இந்த வரிசையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாமல் போயினும், அதன் புகைப்படங்களுக்காக மட்டுமாவது இந்த வரிசையை ஒரு முறை பார்த்துவிட வேண்டும். அற்புதமான புகைப்படங்கள். வரிசை இங்கே.

மறுவினை »

வாசகர் எதிர்வினை

பத்ரியின் கருத்துகள் சிலவற்றில் நான் மாறுபடலாம். மாறுபடும் கருத்துகளைக் கடுமையாகவே நான் முன்வைக்கவும் செய்யலாம். ஆனால் பத்ரி என்கிற தனிமனிதர் மீதும் அவரது ஆளுமை மீதும் எனக்கு மிகுந்த மரியாதைதான் இருக்கிறது. அவர் தமிழ்ப்பதிப்புத்துறையில் செய்து வரும் சாதனைகள் குறித்து எனக்கு என்றைக்குமே வியப்பும் மதிப்பும் உண்டு.

வீடியோ »

புற்றுநோய் குறித்த நெகிழவைக்கும் குறும்படம் ஒன்று :

மறுவினை »

வாசகர் எதிர்வினை

திரு.நரசய்யா எழுதிய சிட்டி நினைவுமலர் வெளியீட்டு விழாவைக் குறித்துப் படித்தேன். மிக்க நன்றி. வீரராகவன் போன்றவர்கள்தான் நம் இலக்கியத்தின் தூண் போன்றவர்கள். வெளியீட்டுவிழாவின்போதே புத்தகத்தில் எச்சில் துப்பும் எழுத்தாள மேதைகளும், எழுத்தாளன் இருக்கும் வரை அவன் ரத்தத்தை ஒரு பைசா காபிரைட் காசு தராமல் உறிஞ்சிக் குடித்துவிட்டு செத்தபின் விழாவெடுப்பவர்களும் இல்லை.

புகைப்படத்தொகுப்பு »

அமெரிக்காவை சகல விதத்திலும் சமமாக துடிக்கும் சீனா இந்த விஷயத்திலும் சந்தோஷப்படலாம். சீனாவின் டாலியன் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதாரம் மட்டுமன்றி, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் என்று சேதம் பல அடுக்குகளுக்கு பரவியிருக்கிறது. சிந்திய எண்ணெயை மீண்டும் அள்ளி இறைக்கும் பணி செவ்வனே நடைபெற்று வருகிறது. அதை பதிவு செய்திருக்கும் புகைப்படத் தொகுப்பு இங்கே காணக்கிடைக்கிறது.
.

மகரந்தம் »

மகரந்தம்

அறிவியல் புனைவு படைப்புகள் கற்பனை என்ற சட்டகத்தை தாண்டிய வாசிப்பை கொண்டதாக இருக்கும். சமகால சமூக(அல்லது)அரசியல் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்தை தனக்குள் கொண்டிருக்கும். தான் வாழும் சமூகத்தில் நிலவும் கட்டுப்பாடுகள், புனைவின் வழியாக தன்னுடைய விமர்சனத்தை முன்வைக்கும் அவசியம் எழுத்தாளனுக்கு ஏற்படுகிறது.

புகைப்படத்தொகுப்பு »

சீனாவின் அசுர வளர்ச்சி நம் பிரபல ஊடகங்களில் திரும்பத் திரும்ப சிலாகிப்பாக எழுதப்படுகிறது.  வின்னை முட்டும் கட்டடங்களும், அதிவிரைவுச் சாலைகளும் சீனாவின் புதிய முகங்களாகக் காட்டப்படுகின்றன. ஆனால் இந்த அசுர வளர்ச்சிக்கு சீனாவின் நடுத்தர வர்க்க மக்களும், ஏழை மக்களும் தரும் விலை மிக மிக அதிகம். பல வருடங்களாக வசித்துவரும் வீடுகளையும், நிலங்களையும் விட்டு அவர்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்த்தப்படுகிறார்கள். ஒரே இரவில், ஒரு சில மணி நேரங்களில் - என அவர்களுடைய இருப்பு துடைத்தழிக்கப்பட்டு, அவர்கள் அரசு கட்டித்தரும் படு சுமாரான புறாக்கூண்டுகளுக்குள் அடைக்கப்படுகிறார்கள். பாட்டாளிகளின் தேசத்தில் இந்த மக்களின் வாழ்க்கை முறையைக் குறித்து ஒரு முறை தெரிந்து கொண்டால் கூடப் போதும் - நம் இந்திய மாவோயிஸ்ட்டுகள், இந்தியர்களுக்குக் காட்டும் பொன்னுலகம் எது என்று தெரிந்துவிடும். Foreign Policy இணையதளம், சீனாவின் ஷாங்காய் நகரில் …

வீடியோ »

சமீபத்திய சில பத்தாண்டுகளில் சீன மக்கள் அமெரிக்க செவ்வியலில் பெரும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். ஐரோப்பிய, அமெரிக்க ஆர்வலர்களைக் காட்டிலும் சீனர்கள் தேர்ந்த ஆர்வலர்களாகவும், கலைஞர்களாகவும் முன்னேறி வருகிறார்கள். இது சீனாவில் மட்டும் நிகழும் சூழல் இல்லை. அமெரிக்கா, ஐரோப்பாவில் வசிக்கும் சீனர்களும் மேற்கத்திய செவ்வியலில் பெரும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். தற்போது அமெரிக்காவில் வாழும் மேற்கத்திய செவ்வியல் இசைக்கலைஞர்களில் மிகவும் சிறப்பான ஒருவராகக் கருதப்படுபவர் யோ-யோ மா. இவருடைய பெற்றோர் சீன வம்சாவழியினர். மாவோவின் கலாசாரப் புரட்சியிலிருந்து தப்பித்து வெளியே வந்தவர்கள்; சிறந்த இசைக்கலைஞர்கள். அதனால் இயல்பாகவே சிறுவயதிலிருந்தே இசையார்வம் கொண்டிருந்த யோ-யோ மா, மிகச்சிறந்த செல்லோ இசைக்கலைஞராக விளங்குகிறார். பல விருதுகளையும் வென்றிருக்கிறார். கீழே தரப்பட்டிருக்கும் வீடியோவில் யோ-யோ மா பாகனினியின் caprice 24 என்ற  வாசிப்பதற்கு மிகவும் கடினமான இசைக்கோர்வை ஒன்றை வாசிப்பதைக் …

மகரந்தம் »

மகரந்தம்

தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா மூலமாக ‘தற்செயலாக’ வந்து இறங்கியிருக்கும் மாவுப்பூச்சி 2,00,000 ஹெக்டேர் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியை அழித்துவிடக் கூடுமென கணிக்கப்படுகிறது. ஒரு வழி இருக்கிறது. அமெரிக்கா வியட்நாம் காடுகளில் செய்த இராசயனப் போரை போல ப்ரோஃபனோபஸ்,அசாடிராக்டின் கெமிக்கல்களைத் தெளித்து புஷ் பாணியில் மாவுப்பூச்சிக்கு எதிரான போரில் இறங்கிவிடலாம். பெருச்சாளிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக மரவள்ளிக் கிழங்கு மாவில் விஷம் ஏறிவிடும்.

வீடியோ »

டேவிட் கிரிஸ்டல் பிரபல மொழியியலாளர். மொழியியல் குறித்த இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. “How Language Works” எனும் இவரது நூல், மொழி குறித்த அடிப்படைகளை விரிவாகப் பேசுகிறது. ஆங்கிலத்தின் உலகளாவிய பரவல் குறித்து கீழே தரப்பட்டுள்ள வீடியோவில் டேவிட் கிரிஸ்டல் பேசுகிறார். கடந்த 400 வருடங்களில் ஆங்கிலம் உலகின் சகல மூலைகளுக்கும் பரவியுள்ளது. பல்வேறு மொழிகளின் வார்த்தைகளை தன்னுள் இழுத்துக் கொண்ட இம்மொழி பரவியது எப்படி? ஆங்கிலத்திற்கென்று ஏதும் சிறப்பம்சம் உள்ளதா? இந்த ஒளிப்பதிவில் இருக்கிறது பதில்.